இந்திரா காந்தி விளையாட்டரங்கம்
Appearance
அமைவிடம் | சோலாப்பூர், மகாராட்டிரம், இந்தியா |
---|---|
உருவாக்கம் | 1972 |
இருக்கைகள் | 30,000[1] |
உரிமையாளர் | சோலாப்பூர் நகராட்சி ஆணையம் |
இயக்குநர் | சோலாப்பூர் நகராட்சி ஆணையம் |
குத்தகையாளர் | மகாராட்டிர துடுப்பாட்ட அணி |
இந்திரா காந்தி விளையாட்டரங்கம் (Indira Gandhi Stadium) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள சோலாப்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. இவ்வரங்கில் 30,000 நபர்கள் உள்ளிருந்து கண்டு இரசிக்கும் திறன் கொண்டது. பெரும்பாலான இடங்கள் நிற்கும் இடங்களாக உள்ளன, அவை மேற்கூரையால் மூடப்படவில்லை. பல நிகழ்வுகளுக்கு இவ்விளையாட்டரங்கம் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் முக்கியமாக துடுப்பாட்ட போட்டிகள் இங்கு நடைபெறுகின்றன. இந்திய மாநிலமான மகாராட்டிராவில் இந்த மைதானம் மிகப்பெரிய விளையாட்டு அரங்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அரங்கத்திற்கு இந்தியாவின் நான்காவது பிரதமர் இந்திரா காந்தியின் பெயரிடப்பட்டுள்ளது.
1952 முதல் 1994 வரை 10 முதல் வகுப்பு போட்டிகளும் ஐந்து பட்டியல் ஏ போட்டிகளும் இந்திராகாந்தி விளையாட்டரங்கத்தில் நடைபெற்றுள்ளன.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "World Stadiums - Stadiums in India". Archived from the original on 2011-09-24. பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2015.
- ↑ First-class cricket
- ↑ List A cricket
- ↑ Other matches