இந்தியா
இந்தியக் குடியரசு Republic of India | |
---|---|
குறிக்கோள்: "சத்யமேவ செயதே" "வாய்மையே வெல்லும்"[1] | |
நாட்டுப்பண்: "சன கண மன"[2][3] "நீங்கள் அனைத்து மக்களின் மனதையும் ஆள்பவர்"[4][2] | |
தேசியப் பண் "வந்தே மாதரம்" "நான் உன்னை வணங்குகிறேன், அம்மா" | |
தலைநகரம் | புது தில்லி 28°36′50″N 77°12′30″E / 28.61389°N 77.20833°E |
பெரிய நகர் | |
ஆட்சி மொழி(கள்) | |
தேசிய மொழிகள் | எதுவுமில்லை[8][9][10] |
பிராந்திய மொழிகள் | |
தாய்மொழிகள் | 447 மொழிகள்[b] |
சமயம் (2011) | |
மக்கள் | இந்தியர் |
அரசாங்கம் | கூட்டாட்சி நாடாளுமன்ற அரசியலமைப்புக் குடியரசு |
திரௌபதி முர்மு | |
செகதீப் தன்கர் | |
• பிரதமர் | நரேந்திர மோதி |
தனஞ்சய ய. சந்திரசூட் | |
ஓம் பிர்லா | |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
• மேலவை | மாநிலங்களவை |
• கீழவை | மக்களவை |
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |
• மேலாட்சி | 15 ஆகத்து 1947 |
• குடியரசு | 26 சனவரி 1950 |
பரப்பு | |
• மொத்தம் | 3,287,263[2] km2 (1,269,219 sq mi)[c] (7-ஆவது) |
• நீர் (%) | 9.6 |
மக்கள் தொகை | |
• 2021 மதிப்பிடு | 1,407,563,842[15][16] (2-ஆவது) |
• 2011 கணக்கெடுப்பு | 1,210,854,977[17][18] (2-ஆவது) |
• அடர்த்தி | 427.0/km2 (1,105.9/sq mi) (19-ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $11.353 நூறாயிரம் கோடி[19] (3-ஆவது) |
• தலைவிகிதம் | $8,079[19] (122-ஆவது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $3.25 trillion[19] (6-ஆவது) |
• தலைவிகிதம் | $2,313[19] (145-ஆவது) |
ஜினி (2011) | 35.7[20] மத்திமம் · 98-ஆவது |
மமேசு (2019) | 0.645[21] மத்திமம் · 131-ஆம் |
நாணயம் | இந்திய ரூபாய் (₹) (INR) |
நேர வலயம் | ஒ.அ.நே+05:30 (இசீநே) |
பசநே நடைமுறையில் இல்லை | |
திகதி அமைப்பு |
|
வாகனம் செலுத்தல் | இடது[22] |
அழைப்புக்குறி | +91 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | IN |
இணையக் குறி | .in |
இந்தியா (ஆங்கிலம்: India), அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India), தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா என்ற பெயர் நாவலந்தேயம் என்னும் பெயரிலிருந்து பெறப்பட்டது. சிலர் சிந்து நதியில் இருந்து பெறப்பட்டதாகச் சொல்லுவதுண்டு. சிந்து நதியில் பெறப்பட்டது இந்து ஆகும். இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாகிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன.[23]
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது.[24] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நூற்று இருபத்தொரு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது.[25]
பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. உலகின் பண்டைய நாகரிகங்களில் இந்தியாவும் ஒன்று ஆகும். சிந்து சமவெளி நாகரிகம் அல்லது அரப்பா-மொகஞ்சதாரோ என்று அழைக்கப்படும் நாகரிகம் இங்கு தோன்றியது ஆகும்.
இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு தலைமை மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947 ஆகத்து 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950 சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.
இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணையின் பேரில் 2019 அக்டோபர் 31 அன்று இந்தியாவின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டது.[26][27]
சொற்பிறப்பியல்
ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி (மூன்றாம் பதிப்பு 2009) படி, "இந்தியா" என்ற பெயர் பாரம்பரிய லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது, இது தெற்காசியாவைக் குறிக்கும் மற்றும் அதன் கிழக்கே ஒரு நிச்சயமற்ற பகுதியாகும்; இதிலிருந்து அடுத்தடுத்து பெறப்பட்டது: எலனிசிடிக் கிரேக்க மொழியில் இந்தியா (α); பண்டைய கிரேக்க மொழியில் இந்தோசு (Ἰνδός); பழைய பாரசீக மொழியில் இந்துசு, அகாமனிசியப் பேரரசின் கிழக்கு மாகாணம்; இறுதியில் இதன் அறிவாற்றல், சமசுகிருத மொழியில் சிந்து, அல்லது "நதி", குறிப்பாக சிந்து நதி மற்றும் இதன் மூலம், நன்கு குடியேறிய தெற்குப் படுகையை குறிப்பதாகும்.[28][29] பண்டைய கிரேக்கர்கள் இந்தியர்களை இந்தோய் (Ἰνδοί) என்று குறிப்பிட்டனர், இது நாவலந்தேயத்தின் அடிப்படையாகும். மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா நோக்கி படையெடுத்த வந்த மன்னர்கள், வர்த்தகர்கள் பலரும் வழியில் சிந்து நதியை கடந்து வரவேண்டியிருந்தது. சிந்து நதியை கடந்தால்தான் இந்திய நிலப்பரப்பில் கால்பதிக்க முடியும். அதனால், சிந்து நதியை அடுத்ததாக, சிந்து நதிக்கு மறுகரையில் உள்ள நாடு என, மேற்கத்திய நாடுகள் வர்ணிக்க தொடங்க, அது படிப்படியாக, சிந்து என்பது இந்து, இந்துஸ்தான், இந்தியா என உருமாற்றம் பெற்றது.
இந்துசுதான் ([ɦɪndʊˈstaːn] ( listen)) என்பது இந்தியாவிற்கான ஒரு மத்திய பாரசீக பெயர், இது முகலாயப் பேரரசின் போது அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் பின்னர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இன்றைய வட இந்தியா மற்றும் பாக்கித்தானை உள்ளடக்கிய ஒரு பகுதியை அல்லது இந்தியாவை முழுவதுமாக குறிக்கும் வகையில் அதன் பொருள் மாறுபட்டுள்ளது.[30][31][32] இன்றைய நிலையில் இந்தியாவானது- இந்திய அரசியலமைப்பு அட்டவணை எட்டு குறிப்பிடும் இருபத்திரண்டு மொழிகளில் தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே இந்தியா என்று வழங்கப்படுகிறது. இந்தி உள்ளிட்ட அதிகாரப்பூர்வமான மொழிகளில் இந்தியாவின் பெயர்கள் பாரத் என்றே எழுதவும் ஒலிக்கவும் படுகிறது.
வரலாறு
பொ.ஊ.மு. 300 இல் அசோகரால் கட்டப்பட்டு, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாஞ்சி தூபம் போன்று 40,000 ஆண்டுகளுக்கு முந்திய, பழைய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவிய மரபு, நடு இந்தியாவிலுள்ள பீம்பேட்கா என்னுமிடத்திலும் வேறு இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியாவின், முதல் நிரந்தரக் குடியிருப்புகள் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் தோன்றின. இப்பகுதி சார் பண்பாடு, உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்றாக, பொ.ஊ.மு. 6000 தொடக்கம் பொ.ஊ.மு. 1900 வரை உச்ச நிலையிலிருந்த, சிந்துவெளி நாகரீகமாக வளர்ச்சியடைந்தது.
பொ.ஊ.மு. 1500 அளவில், இந்தியாவின் வடமேற்கிலிருந்து ஏற்பட்ட ஆரிய இனக்குழுக்களின் உள்வரவாலும், ஓரளவுக்கு உள்ளூர் வாசிகளுடனான கலப்பினாலும் வேதகாலப் பண்பாடு உருவானதாக ஒரு கருத்து உண்டு. காலப்போக்கில் ஆரியரின் பண்பாடு, மொழி மற்றும் சமயம் என்பன இந்நாட்டில் மிக தலைமைத்துத்துவம் பெற்றவையாகின என்று இக்கருத்து கூறகிறது. முந்தைய, பரவலான நோக்கில், இவ்வுள்வரவானது, திடீரென ஏற்பட்ட வன்முறை குடிபெயர்ப்பாகும். எனினும், அண்மைக்காலச் சிந்தனைகள், இது ஒரு படிப்படியான உள்வரவாக இருந்திருக்கக் கூடும் என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்பது போல் தெரிகிறது (ஆரிய ஆக்கிரமிப்புக் கோட்பாட்டைப் பார்க்கவும்). வடமேற்கிலிருந்து எந்தப் பிரிவினரும் வரவில்லை என்றும், சிந்து சமவெளி நாகரிகமும் வேத நாகரிகமும் ஒன்று என்ற கருத்தும். சிந்து சமவெளி நாகரித்தினரும், தமிழ் சங்க இலக்கியங்களில் கூறப்படும் மூழ்கிய குமரிக் கண்டத்தைச் சேர்ந்த தென்னகத்தாரும் இன்றைய இந்தியரின் முன்னோர்கள் என்ற மற்றொரு கருத்து உண்டு. எனினும் இதில் எந்தக் கருத்தும் முழுமையாகவும் திட்டவட்டமாகவும் மெய்ப்பிக்கப் படவில்லை. இதுபற்றி ஆராய்ச்சியாளர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் உண்டு.
மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டன.
அராபியர் வருகை எட்டாம் நூற்றாண்டில் தொடங்கியது. துருக்கியர் 12ஆம் நூற்றாண்டில் வரத்தொடங்கினர். இவர்களைத் தொடர்ந்து ஐரோப்பிய வணிகர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரத்தொடங்கினர்.
முகலாயப் பேரரசை அடிபணிய வைத்ததன் மூலம், 19ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு ஆங்கிலேயப் பேரரசிடம் போய்ச் சேர்ந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோகன்தாசு கரம்சந்த் காந்தி தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் 1947-இல் கிடைத்த இந்திய விடுதலைக்கு வித்திட்டது. இந்திய துணைக்கண்டம் மதச்சார்பற்ற இந்தியாவாகவும் இசுலாமிய நாடான பாகித்தானாகவும் பிரிந்தது. பின்னர் 1950-ஆம் ஆண்டு சனவரி 26-ஆம் தேதி இந்தியா குடியரசு ஆனது. தொடர்ச்சியற்ற நிலப் பகுதிகளான மேற்கு மற்றும் கிழக்கு பாகிசுதானிடையே 1971-இல் உள்நாட்டுப் போர் மூண்டதற்குப் பிறகு இந்தியத் தலையீட்டின் பேரில் கிழக்கு பாகிசுதான் வங்காள தேசம் என்ற தன்னாட்சி பெற்ற நாடாகப் பிரிந்தது. 1991-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப்பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கியது.
இயற்கை வளம், மனித வளம் மற்றும் பாதுகாப்பிற்கு உகந்த நில அமைப்பு ஆகியவை இந்தியாவின் தலைமை பலங்களில் சிலவாகும். பாகிசுதானுடனான காசுமீர் பிரச்சினை, கவலை தரும் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச் சூழல் சீர் கேடு, ஊழல் ஆகியவை இந்தியா எதிர் நோக்கும் சவால்களில் சிலவாகும்.
இவற்றையும் பார்க்க: இந்திய வரலாற்று காலக் கோடு
அரசியல் அமைப்பு
இந்தியா 29 மாநிலங்களையும் 7 ஒன்றியப் பகுதிகளையும் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு ஆற்றல்பூர்வமாக இந்திய சுதந்திர சமூகவுடமை சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரச நிர்வாகம் சட்டப் பேரவை, செயலாற்றுப் பேரவை, சுதந்திர நீதியமைப்பு ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது. இவை கூட்டாகவும், அதேவேளை ஒவ்வொரு கூறும் மற்றதன் நடவடிக்கைகளை, தவறான ஆற்றல் பயன்பாடுகளை, ஊழலைக் கண்காணிக்ககூடிய வகையில் ஆங்கிலேய நிர்வாக அமைப்புகளைப் பின்பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் தலைவராகக் குடியரசுத் தலைவர் இருக்கின்றார் எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச்சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத்தலைவரும் நாடாளுமன்ற மற்றும் மாநில, நாட்டு சட்டமன்றங்களின் (ஈரவை அமைப்பாயின் கீழவை) உறுப்பினர்களால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரைக் குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.
இந்திய நாடாளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.
மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-நாட்டு சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்திய மக்களவைக்கு அதிகமாக 552 உறுப்பினர்கள் வரை இருக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனம் வழிமுறை காட்டுகிறது.[33] இதில் 530 உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தும் 20 உறுப்பினர்கள் நடுவணரசு பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படலாம். குடியரசுத்தலைவர் விரும்பினால் இரண்டு ஆங்கிலோ-இந்தியர்களையும் நியமிக்கலாம். இவ்வாறாக இந்தியா மக்களவைக்கு அதிகமாக 552 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் தற்போது மதிய ஆளுமைப் பகுதிகளிலிருந்து 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனால் மக்களவையின் தற்போதைய உறுப்பினர்கள் 545 ஆகும். மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.
இந்திய சட்ட கட்டமைப்பின் மிக உயர் ஆற்றல் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. உயர் நீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலனாகச் செயல் படுகிறது. உயர் நீதிமன்றம் மாநிலங்களுக்கும் நடுவணரசிற்கும் இடையான சிக்கல்கள் தொடர்பாக ஆள் வரை உண்டு. மேலும் மேன் முறையீடு ஆள் வரையும் உயர் நீதிமன்றங்கள்மீது உண்டு. பெரிய மாநிலங்களுக்கு ஒன்றும் சிறிய மாநிலங்களுக்குப் பொதுவாகவும் 18 உயர் நீதி மன்றங்கள் இயங்குகின்றன. அதற்கு அடுத்த நிலைகளில் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவை அனைத்திலும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.
அரசியல்
இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுவதால் எண்ணற்ற கட்சிகள் உள்ளன. இவை இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால், குறிப்பிட்ட சில அடிப்படைகளுக்கு அமைய, நாட்டுக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என இரண்டு பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, மத்தியில் பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ளவையாக விளங்குகின்றன. மற்ற பெரிய நாட்டுக் கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஜனதா தளம் ஆகியவை ஆகும். குறுகிய இரண்டு காலப் பகுதிகளைத் தவிர்த்து 1950 முதல் 1990 வரையான காலம் முழுவதும் இந்திய காங்கிரசு கட்சியே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சியாக விளங்கியது. 1977 க்கு முன் காங்கிரசு அரசு காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரநிலைச் சட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட திருப்தியின்மையினால் 1977 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு தோல்வியுற்றது. பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதாக் கட்சியும், இடதுசாரிகள் உட்பட்ட பிற கட்சிகள் சிலவும் சேர்ந்து உருவாக்கிய தேசிய முன்னணி என்னும் அமைப்பு காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சியமைத்தது. எனினும் இக் கூட்டணியால் நீண்டகாலம் நீடித்து ஆள முடியவில்லை. இரண்டு ஆண்டுக் காலத்திலேயே அரசு கவிழ்ந்தது.
1996 ஆம் ஆண்டுக்கும் 1998 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் நடுவணரசைப் பொறுத்தவரை ஒரு குழப்பமான காலமாகும். இக்காலத்தில் முதலில் பாரதீய ஜனதாக் கட்சியும், பின்னர் சில மாதங்கள் ஐக்கிய முன்னணி என்னும் பல கட்சிக் கூட்டணியும் ஆட்சி நடத்தின. தொடர்ந்து 1998 இல் நடை பெற்ற தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த அரசு, நாடாளுமன்றத்தின் முழு ஐந்தாண்டுக் காலமும் பதவியில் இருந்த முதல் காங்கிரசு அல்லாத அரசு என்னும் பெயரையும் பெற்றது.
2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரசு கட்சி, இடதுசாரிகள், பிற மாநிலக் கட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு உருவாக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பின் சார்பில் ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது கூட்டணி அரசு இது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சி பொறுப்பேற்றது. நரேந்திர மோதி பிரதமராகப் பதவியேற்றார்.
வெளியுறவும், இராணுவமும்
1947 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றதிலிருந்து இந்தியா பெரும்பாலான பிற நாடுகளுடன் நல்லுறவையே கொண்டுள்ளது. 1950களில், ஐரோப்பிய நாடுகளின் பிடியிலிருந்து ஆசிய ஆபிரிக்கக் குடியேற்ற நாடுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து வந்தது. இந்தியா பொதுநலவாய நாடுகள் குழுவின் ஒரு உறுப்பு நாடும், அணிசேரா நாடுகள் இயக்கத்தின் தொடக்க உறுப்பு நாடும் ஆகும். சீன-இந்தியப் போருக்கும், 1965 இல் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போருக்கும் பின்னர் இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் நல்லுறவைப் பேண முயன்றது. இதனால், அமெரிக்காவுடனான உறவு பாதிக்கப்பட்டது. இந்நிலை சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து, பனிப்போர் முடியும் வரை நீடித்தது. இந்தியாவும், பாகிஸ்தானும் முக்கியமாக, காஷ்மீர்ப் பிணக்குக் காரணமாக மூன்று போர்களில் ஈடுபட்டன. இவற்றைவிட அவ்வப்போது சிறு சிறு சண்டைகளும் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன.குறிப்பாக, 1984 ல் இடம்பெற்ற சியாச்சென் பனியாற்றுப் போரையும், 1999 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கார்கில் போரையும் குறிப்பிடலாம்.
அண்மைக் காலங்களில் இந்தியா "ஆசியான்" எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும், "சார்க்" எனப்படும் பிரதேச ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பிலும் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்து வருகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் தீவிரமான ஆதரவு நாடும், தொடக்ககால உறுப்பு நாடுமான இந்தியா, இச் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக 55,000க்கு மேற்பட்ட படையினரையும், காவல் துறையினரையும், நான்கு கண்டங்களில் சேவையாற்றுவதற்கு அனுப்பியுள்ளது. எனினும், பல விமர்சனங்களையும், இராணுவத் தேவைகள் தொடர்பான தடைகளையும் சந்தித்தபோதிலும், அணுவாற்றல் திட்டங்களில் தனது இறைமையைப் பேணிக்கொள்ளும் விருப்பினால், முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை ஒப்பந்தம், அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்து வருகின்றது. இந்தியாவின் அண்மைக்கால நடவடிக்கைகளினால் அது ஐக்கிய அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தி வருகின்றது. பொருளியல் அடிப்படையில், இந்தியா ஆசியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த பிற வளரும் நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிற்காக தரைப்படை, கடற்படை, வான்படை ஆகியவைகள் இந்தியப் பாதுகாப்புத் துறையின் இயங்குகிறது. இவற்றுடன் எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய - திபெத் எல்லைக் காவல்படை, மத்திய சேமக் காவல் படை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை, கரையோரக் காவல்படை என்பன இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தியக் குடியரசுத் தலைவரே, இந்தியப் படைகளின் உயர் தளபதி ஆவார். 1974 ஆம் ஆண்டில், நடத்தப்பட்ட சிரிக்கும் புத்தர் நடவடிக்கை (Operation Smiling Buddha) எனப் பெயரிடப்பட்ட தொடக்க அணுக்கருச் சோதனை, பின்னர் 1998 இல் இடம் பெற்ற "நிலத்துக்கு அடியிலான சோதனைகள்" என்பவற்றின் மூலம் இந்தியா ஒரு அணு வல்லரசு என்னும் இடத்தைப் பிடித்தது. 1998 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து உலக நாடுகள் இந்தியாவுக்கான இராணுவத் தேவைகள் வழங்குவதைத் தடை செய்தன. எனினும் படிப்படியாக இவை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்தியா தான் முதலாவதாக அணுவாயுதத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.
மாநிலங்களும் பகுதிகளும்
இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு. இதில் 28 மாநிலங்களும், எட்டு ஒன்றியப் பகுதிகளும் ஒரு தலைநகரப் பகுதியும் அடங்கியுள்ளன. எல்லா மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதிகளான பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர, அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமலேயே இம் முறைமை இயங்கிவருகிறது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்டங்கள் எனப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 600 மாவட்டங்கள் உள்ளன.
1. ஆந்திரப் பிரதேசம் | 20. பஞ்சாப் |
2. அருணாசலப் பிரதேசம் | 21. இராசத்தான் |
3. அசாம் | 22. சிக்கிம் |
4. பீகார் | 23. தமிழ்நாடு |
5. சத்தீசுகர் | 24. தெலுங்கானா |
6. கோவா | 25. திரிபுரா |
7. குசராத்து | 26. உத்தரப் பிரதேசம் |
8. அரியானா | 27. உத்தராகண்டம் |
9. இமாச்சலப் பிரதேசம் | 28. மேற்கு வங்காளம் |
10. சார்க்கண்ட் | A. அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
11. கருநாடகம் | B. சண்டிகர் |
12. கேரளம் | C. தாத்ரா நகர் அவேலி மற்றும் தாமன் தியூ |
13. மத்தியப் பிரதேசம் | D. ஜம்மு காஷ்மீர் |
14. மகாராட்டிரம் | E. லடாக் |
15. மணிப்பூர் | F. இலட்சத்தீவுகள் |
16. மேகாலயா | G. தில்லி |
17. மிசோரம் | H. புதுச்சேரி |
18. நாகாலாந்து | |
19. ஒடிசா |
இந்த ஒன்பது ஒன்றியப் பகுதிகளில் புதுச்சேரியும், தில்லியும் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மட்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு இசைவின் பேரில் ஏனைய மாநிலங்களைப் போலத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவைகள் அமைத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளன.[34]
இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370-இன் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் தற்காலிகமாகச் சில சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டது.[35] ஆனால் ஆகத்து 9, 2019 அன்று இச்சட்டம் நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியாகவும் மற்றும் லடாக் ஒன்றியப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டது.[36]
புவியியல்
பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடாகும்.இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவில் புவியியல் அடிப்படையில் மூன்று உட்பகுதிகள் உள்ளன. அவை, வடக்கே இமயமலைத்தொடர்கள் (உயரமான சிகரம் கஞ்சன்சுங்கா 8,598 மீ), இந்து-கங்கை சமவெளி (மேற்கில் தார் பாலைவனம்) மற்றும் தக்காணப் பீடபூமி. தக்காணப் பீடபூமி மூன்று திசைகளில் முறையே கிழக்கே வங்காள விரிகுடாக் கடல், தெற்கே இந்துமாக்கடல் மற்றும் மேற்கே அரபுக்கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
இமய மலையில் தோன்றி இந்தியாவுக்குள் பாயும் ஆறுகளில் கங்கை ஆறும், பிரமபுத்திராவும் முக்கியமானவை. இவை இரண்டுமே வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. யமுனா, கோசி என்பன கங்கை நதியின் துணை நதிகள். கோசி ஆறு பாயும் நிலப்பகுதி மிகக் குறைவான சரிவைக் கொண்டிருப்பதால் ஆண்டுதோறும் பெரும் அழிவைக் கொடுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. தீவக்குறைப் பகுதியில் பாயும் கோதாவரி, மகாநதி, காவிரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் சரிவு கூடிய பகுதியில் அமைந்திருப்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த ஆறுகளும் வங்காள விரிகுடாவிலேயே கலக்கின்றன. நர்மதா, தாபி போன்ற முக்கிய ஆறுகள் இந்தியாவின் மேற்குக் கரையூடாக அரபிக் கடலில் கலக்கின்றன. இந்தியா என்ற பெயர் ஏற்படக் காரணமாக இருந்தது சிந்து நதியாகும். இந்திய எல்லைக்குள் இரண்டு தீவுக்கூட்டங்கள் உள்ளன. பவளப்பாறைத் தீவுகளான லட்சத்தீவுகள் இந்தியத் தீவக்குறையின் மேற்குக் கடற்கரைக்கு அப்பாலும், எரிமலைச் சங்கிலியான அந்தமான்-நிக்கோபார் தீவுக்கூட்டம் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் அந்தமான் கடலிலும் அமைந்துள்ளன.
இந்தியாவின் தட்ப வெட்பம் தெற்கே வெப்பம் மிகுந்த பருவ மழை சார்ந்ததாகவும், வடக்கே மட்டான தட்பவெப்பமுள்ள காலநிலை ஆகவும் ஏனைய பகுதிகளில் பல்வேறு இடைப்பட்ட தட்ப வெட்ப நிலைகளாகவும் நிலவுகிறது.
இந்தியாவில் கடற்கரை 7,517 கிலோமீட்டர்கள் (4,671 மைல்கள்) நீளமானது. இதில் 5,423 கிலோமீட்டர்கள் (3,370 மைல்கள்) இந்தியத் தீவக்குறைப் பகுதியையும், 2,094 கிமீ (1,301 மை) அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவுகள் ஆகியவற்றையும் சேர்ந்தவை. இந்தியத் தலைநிலப் பகுதியைச் சேர்ந்த கரைகளில், 43% மணற்பாங்கானவை, 11% பாறைகளைக் கொண்டவையாகவும், 46% சேற்று நிலங்கள் அல்லது சதுப்பு நிலங்களாகவும் காணப்படுகின்றன. குஜராத், மகாராஷ்டிர, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்களின் கடற்கரைகளில் பெரிய மற்றும் சிறிய துறைமுகங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பல இயற்கையாகவே அமைந்த துறைமுகங்கள் ஆகும்.
இந்தியாவின் தாவர விலங்கு வளங்கள்
இந்தோமாலய சூழ்நிலைவலயத்துள் அமைந்துள்ள இந்தியாவில் குறிப்பிடத்தக்க உயிரியல் பல்வகைமை காணப்படுகின்றது. 18 பெரும்பல்வகைமை நாடுகளுள் இதுவும் ஒன்று. உலகிலுள்ள மொத்த இனங்களுடன் ஒப்பிடும்போது, பாலூட்டி இனங்களில் 7.6%, பறவை இனங்களில் 12.6%, ஊர்வனவற்றில் 6.2%, ஈரூடகவாழிகளில் 4.4%, மீன்களில் 11.7%, பூக்கும் தாவரங்களில் 6.0% இந்தியாவிலே காணப்படுகின்றன. இங்குள்ள சோலாக் காடுகள் போன்ற பல சூழ்நிலைவலயங்கள், உயர்ந்த விழுக்காட்டிலான பகுதிக்குரிய (endemic) இனங்களைக் கொண்டவையாக உள்ளன. ஏறத்தாழ 33 விழுக்காடு இந்தியத் தாவரங்கள் பகுதிக்குரியவை. இந்தியாவின் காடுகள், அந்தமான், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா ஆகியவற்றின் வெப்பவலய மழைக் காடுகள் தொடக்கம் இமயமலைப் பகுதிகளின் ஊசியிலைக் காடுகள் வரை பல்வேறுபட்டு அமைந்துள்ளன.
இந்த எல்லைகளிடையே, ஆச்சா மரங்களை அதிகமாகக் கொண்ட கிழக்கு இந்தியாவின் ஈரவலய இலையுதிர் காடுகள், தேக்கு மரங்களைக் கூடுதலாகக் கொண்ட நடு இந்தியா, தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் காணும் இலையுதிர் காடுகள், கருவேல மரம்|கருவேல மரங்களைப் பெருமளவில் கொண்ட நடுத் தக்காணத்தினதும், மேற்குக் கங்கைச் சமவெளியினதும் முட்காடுகள் என்பன உள்ளன. முக்கியமான இந்தியத் தாவரங்களுள், நாட்டுப்புறங்களிலே மருத்துவத் தேவைகளுக்காகப் பயன்படும் வேம்பு, மொஹெஞ்சதாரோவின் முத்திரைகளில் காணப்படுவதும், புத்தர் அறிவு பெற்றதுமான அரச மரம் என்பவை குறிப்பிடத்தக்கவை.
பல இந்தியத் தாவர, விலங்கு இனங்கள் தொடக்கத்தில் இந்தியாவின் அமைவிடமான கோண்ட்வானாவில் உருவான வகைகளின் வழிவந்தவை. பின்னர், இந்தியத் தீவக்குறை நகர்ந்து, லோரேசிய நிலத்திணிவுடன் மோதியபோது, பெருந் தொகையான உயிரினங்கள் இடம் மாறுவதற்கு வழியேற்பட்டது. எனினும், 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த, எரிமலை வெடிப்புக்களினாலும், காலநிலை மாற்றங்களினாலும் பெருமளவு இந்தியப் பகுதிக்குரிய இனங்கள் அழிந்து போயின. இதன் பின்னர், ஆசியப் பகுதிகளிலிருந்து, உருவாகிவந்த இமயமலையின் இரு பக்கங்களிலும் இருந்த விலங்குப்புவியில் கணவாய்கள் வழியாகப் பாலூட்டிகள் இந்தியாவுக்குள் வந்தன. முடிவில், இந்திய இனங்களில், 12.6% பாலூட்டிகளும், 4.5% பறவைகளும் மட்டுமே இந்தியப் பகுதிக்குரியவையாக இருக்கின்றன. இது, 45.8% ஊர்வனவும், 55.8% ஈரூடகவாழிகளும் இந்தியாவுக்கு உரியனவாக இருப்பதுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும். குறிப்பிடத்தக்க ஊள்ளூர் இனங்கள், சோலை மந்தி (Trachypithecus johnii), புபோ பெதோமீ (Bufo beddomii) என்னும் ஒருவகைத் தவளை இனம் என்பனவாகும். இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் அழியும் வாய்ப்புள்ளவையாகக் குறிப்பிட்டுள்ள இனங்களில் 2,9% இனங்கள் இந்தியாவில் உள்ளவை. இவற்றுள் ஆசியச் சிங்கம், வங்காளப் புலி என்பவை அடங்கும்.
அண்மைப் பத்தாண்டுகளில், மனித ஊடுருவல் காட்டுயிர்களுக்கு ஆபத்தாக அமைந்தன. இதனால், நாட்டு பூங்காக்களும், 1935 ஆம் ஆண்டில் முதன் முதலாக அமைக்கப்பட்டுப் பின்னர் விரிவாக்கப்பட்டன. 1972 இல் இந்தியாவில் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட காப்பகங்களும், 13 உயிர்க்கோள ஒதுக்ககங்களும், 25 ஈர நிலங்களும் ராம்சார் ஒபந்தம் எனும் அனைத்துலக ஒப்பந்தத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொருளாதாரம்
விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தின் பெரும் பகுதியில் இந்தியா, தனியார் தொழில் முயற்சிகளிலும், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு நேரடி முதலீடு போன்ற துறைகளிலும் இறுக்கமான அரசுக் கட்டுப்பாடுகளைக் கொண்டு ஒரு சோசலிசம் சார்ந்த அணுகு முறையையே கடைப்பிடித்து வந்தது. ஆயினும், 1991 ஆம் ஆண்டு முதல், பொருளாதாரச் சீர்திருத்தங்கள்மூலம் படிப்படியாக அதன் சந்தைகளைத் திறந்துவிட்டதோடு, வெளிநாட்டு வணிகம், முதலீடு என்பவற்றின் மீதான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வந்தது. மத்திய, மாநில அரசிகளின் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை குறைந்துள்ளதோடு, 1991 மார்ச் மாதத்தில் 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வெளிநாட்டு நாணயமாற்று ஒதுக்கம், 2008 ஜூலையில் 308 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தலும், சில துறைகளைத் தனியார் மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்புக்காகத் திறந்து விடுவதும் தொடர்ந்து வருகிறது.
இந்தியப் பொருளாதாரம் மரபுவழி வேளாண்மை, தற்கால வேளாண்மை, கைவினைப் பொருள் தயாரிப்பு, பல தரப்பட்ட புதிய தொழில்கள் மற்றும் மென்பொருள் உட்பட்ட பல துணைச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 2003-ஆம் ஆண்டு நிலவரத்தின் படி மென்பொருள் ஏற்றுமதி மட்டும் சுமார் 1000 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. இருப்பினும் மக்கள் தொகையில் கால் பங்கு வகிப்பவர்கள் சரியான உணவின்றி வறுமையில் வாழ்கின்றனர்.
இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் நாணய மதிப்பு 2001 மற்றும் பின் வரும் ஆண்டுகளில் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $1.089 டிரில்லியன் டாலர்கள் அளவை எட்டியுள்ளது. பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் $4.726 டிரில்லியன் (2,66,000 கோடி டாலர்) அளவுடன் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த இரு பத்தாண்டுகளாக 5.5% சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. 516.3 மில்லியன் அளவான இந்தியாவின் தொழிலாளர்படை உலகின் இரண்டாவது பெரிய தொழிலாளர்படை ஆகும். இவர்களில் 60 விழுக்காட்டினர் வேளாண்மை அல்லது அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். 28 விழுக்காட்டினர் சேவைத்தொழில்கள் அல்லது அது சார்ந்த துறைகளிலும், 12 விழுக்காட்டினர் தொழில்துறைகளிலும் பணிபுரிகின்றனர். இந்தியாவின் முதன்மை வேளாண்மைப் பயிர்கள் அரிசி, எண்ணெய்விதை, பருத்தி, சணல், தேயிலை, கரும்பு, உருளைக்கிழங்கு என்பனவாகும். வேளாண்மைத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28% ஐ வழங்குகிறது. சேவைத்துறையும், தொழில்துறையும் முறையே 54%, 18% பங்களிப்பைச் செய்கின்றன. முக்கியமான தொழில்துறைகளில், தானுந்து, சிமெந்து, வேதிப்பொருட்கள், நுகர்வோர் மின்னணுவியல் பொருட்கள், உணவு பதனிடல், இயந்திரங்கள், சுரங்கத்தொழில், பெட்ரோலியம், மருந்துவகை, உருக்கு, போக்குவரத்துச் சாதனங்கள், உடைகள் என்பன அடங்குகின்றன. விரைவாக வளரும் பொருளாதாரத்துடன் கூடவே, ஆற்றல் தேவையும் அதிகரித்து வருகின்றது. ஆற்றல் தகவல் நிர்வாகத்தின் (Energy Information Administration) கணக்கீட்டின் படி, எண்ணெய் நுகர்வில் இந்தியா ஆறாவது இடத்திலும், நிலக்கரி நுகர்வில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
2019-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு நபருக்கு 2,041.091 அமெரிக்க டாலராக உள்ளது. பன்னாட்டு தரவரிசையில் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2019-ஆண்டில் 126-வது இடத்தில் உள்ளது.[37][38]
வறுமை நிலை
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
இந்தியா வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு. ஆயினும், 350–400 மில்லியன் [1] மக்கள் வறுமை கோட்டின் கீழேயே வாழ்கின்றார்கள். உலக வங்கியின் உலக வளர்ச்சி அளவீடுகளின் அடிப்படையில் 35% இந்தியர்கள் $1 வருமானத்திலேயே வாழ்கின்றார்கள்.[2] இவர்களுக்குரிய அடிப்படை உணவு, உறைவிட, கல்வி, மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. மேலும், 40%[3] மக்களுக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. இந்தியாவின் பொருளாதர பகிர்வு மிகவும் சமனற்றது. குறிப்பாக, தலித்துக்கள், ஒடுக்கப்பட்டோருக்கும் மற்றவருக்கும், நகர வாசிகளுக்கும், கிராம வாசிகளுக்குமான பொருளாதார நிலை வேறுபாடுகள் மிகவும் பெரியதாக காணப்படுகிறது.
மக்கள் தொகையில்
கணக்கெடுப்பு ஆண்டு |
மொத்தம் (%) | ஆண் (%) | பெண் (%) |
---|---|---|---|
1901 | 5.35 | 9.83 | 0.60 |
1911 | 5.92 | 10.56 | 1.05 |
1921 | 7.16 | 12.21 | 1.81 |
1931 | 9.50 | 15.59 | 2.93 |
1941 | 16.10 | 24.90 | 7.30 |
1951 | 16.67 | 24.95 | 9.45 |
1961 | 24.02 | 34.44 | 12.95 |
1971 | 29.45 | 39.45 | 18.69 |
1981 | 36.23 | 46.89 | 24.82 |
1991 | 42.84 | 52.74 | 32.17 |
2001 | 64.83 | 75.26 | 53.67 |
2011 | 74.04 | 82.14 | 65.46 |
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கள்தொகை 121 கோடியே 19 இலட்சத்து மூவாயிரத்தி நானூற்று இருபத்தி இரண்டு பேர் (1,210,193,422) உள்ளனர். மக்கள்தொகை கடந்த பத்தாண்டுகளின் (2001–2011) வளர்ச்சி விகிதம் 17.70% ஆக உயர்ந்துள்ளது.[40] அதிக மக்கள்தொகை (199,812,341) கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசமும், குறைந்த மக்கள் தொகை (610,577) கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது.
எழுத்தறிவு
படிப்பறிவு வீதம் 74.04% ஆக உயர்ந்துள்ளது (ஆண்கள் 82.14%; பெண்கள் 65.46%).[41]
சமயம்
2011ஆம் ஆண்டைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை ஆணையம் 27 ஆகஸ்டு 2015 அன்று வெளியிட்டுள்ள சமயவாரி மக்கள்தொகை கணக்கீட்டின்படி,[42][43][44] இந்தியாவின் மொத்த மக்கள்தொகையான 121.09 கோடியில், இந்துக்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.7% ஆக குறைந்து, 96.63 கோடியாகவும் (79.08%), முஸ்லிம்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.8% உயர்ந்து, 17.22 கோடியாகவும் (14.2%),[45][46][47][46][48] கிறித்தவர் மக்கள்தொகை 2.78 கோடியாகவும் (2.3%), சீக்கியர்கள் மக்கள்தொகை 2.08 கோடியாகவும் (1.7%), சமணர்கள் மக்கள்தொகை 45 இலட்சமாகவும் (0.4%), புத்த மதத்தினரின் மக்கள்தொகை 84 இலட்சமாகவும் (0.8%), சமயம் குறிப்பிடாதோர் 29 இலட்சமாகவும் (0.4%) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[49][50] முதன்முறையாக "சமயம் குறிப்பிடாதோர்" என்ற பிரிவு 2011 கணக்கீட்டில் சேர்க்கப்பட்டது.[51][52]
சமயம் |
1951 | 1961 | 1971 | 1981 | 1991 | 2001 | 2011[53] |
---|---|---|---|---|---|---|---|
இந்து சமயம் | 84.1% | 83.45% | 82.73% | 82.30% | 81.53% | 80.46% | 79.80% |
இசுலாம் | 9.8% | 10.69% | 11.21% | 11.75% | 12.61% | 13.43% | 14.23% |
கிறித்துவம் | 2.3% | 2.44% | 2.60% | 2.44% | 2.32% | 2.34% | 2.30% |
சீக்கியம் | 1.79% | 1.79% | 1.89% | 1.92% | 1.94% | 1.87% | 1.72% |
பௌத்தம் | 0.74% | 0.74% | 0.70% | 0.70% | 0.77% | 0.77% | 0.70% |
சமணம் | 0.46% | 0.46% | 0.48% | 0.47% | 0.40% | 0.41% | 0.37% |
சரத்துஸ்திர சமயம் | 0.13% | 0.09% | 0.09% | 0.09% | 0.08% | 0.06% | n/a |
பிற சமயங்கள் / சமயமின்மை | 0.43% | 0.43% | 0.41% | 0.42% | 0.44% | 0.72% | 0.9% |
சமயவாரி மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் ஏற்றத்தாழ்வு
மேற்படி அட்டவனையின் படி, 1951ல் 84.1% ஆக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 60 ஆண்டுகளில் படிப்படியாக 4.30% வீழ்ச்சியடைந்து, 2011ல் 79.80% ஆக குறைந்துள்ளது. அதே சமயத்தில் 1951ல் 9.8% ஆக இருந்த இசுலாமியர்களின் மக்கள் தொகை, படிப்படியாக 4.40% வளர்ச்சியடைந்து, 2011ல் 14.23% ஆக உயர்ந்துள்ளது. மற்ற சமயங்களைப் பொறுத்தவரையில் மக்கள் தொகை வளர்ச்சி அதிக ஏற்ற-இறக்கம் இல்லாது உள்ளது.
இந்துக்கள் சிறுபான்மையினத்தவராக வாழும் மாநிலங்கள்
மக்கள் தொகையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் மற்றும் ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுகளில் இசுலாமியர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா என நான்கு மாநிலங்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மை மக்களாக உள்ளனர்.[54] இந்துக்கள் அல்லோதோர் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களில், சிறுபான்மை இன இந்துக்களுக்கு சிறுபான்மையினர் என்ற தகுதி இந்திய அரசால் வழங்கப்படவில்லை. இம்மாநிலங்களின் சிறுபான்மை இந்து மக்களுக்கு கல்விநிலையங்களில் இடஒதுக்கீடு மற்றும் கல்வி உதவிகள் இந்திய அரசாலும்; மாநில அரசுகளால் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.
மொழி
இந்தியா இரண்டு பெரிய மொழிக்குடும்பங்களின் இருப்பிடம் ஆகும். அவை 74% மக்களால் பேசப்படும் இந்தோ-ஆரிய மொழிக்குடும்பமும், 24% மக்களால் பேசப்படும் திராவிட மொழிக்குடும்பமும் ஆவை. இந்தியாவில் பேசப்படும் மற்ற மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மற்றும் திபெத்தோ-பர்ம மொழிக்குடும்பங்களை சார்ந்தவை. இந்திய அரசியல் அமைப்போ, இந்திய சட்டங்களோ, தேசிய மொழியாக, எந்த ஒரு மொழியையும் விவரிக்கவில்லை.[55] இந்திய அரசாங்கம், அதன் அலுவல் ரீதியிலான பயன்பாடுகளுக்கு முதன்மையாக ஆங்கிலத்தினைப் பயன்படுத்துகிறது, இதுதவிர இந்தி மொழியை "துணை அதிகாரப்பூர்வ மொழியாக" பயன்படுத்துகிறது. இந்தியாவில் கல்வி பெறுவதில், அதிலும் உயர்கல்வி (Department of Higher Education (India)) பெறுவதில் ஆங்கிலம் பெரும்பங்கு வகிக்கிறது. அதோடு, ஒவ்வொரு மாநிலமும் தனக்குத் தானே, அந்தந்த மாநிலங்களில் பரவலாகப் பேசப்படும் மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு 21 மொழிகளை அடையாளம் கொள்கிறது. செம்மொழித் தகுதி பெற்ற முதல் இந்திய மொழி தமிழ் மொழியாகும். தமிழ் மொழியைத் தொடர்ந்து சமசுகிருதம் (2005), தெலுங்கு (2008), கன்னடம் (2008), மலையாளம் (2013), ஒடியா (2014) ஆகிய மொழிகள் செம்மொழிகள் என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டன. மரபாகச் செம்மொழிக்கு இருக்கும் வரையறையைப் பயன்படுத்தாமல் இந்தியா தானாகச் செம்மொழிக்கான வரையறையை வகுத்து உள்ளது.
மனித மேம்பாட்டுச் சுட்டெண்
2019-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட திட்ட அறிக்கையின்படி, வாழ்க்கைத் தரப்பட்டியலில் இந்தியா 129-வது இடத்தில் உள்ளது.[56][57]
சமூக அமைப்பு
சாதிய அமைப்பே இந்திய சமூக கட்டமைப்பின் சமூக அதிகாரப் படிநிலை முறைமையின் அடித்தளம். சாதிய கட்டமைப்பு பிறப்பு, தொழில், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆனது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும் பிரிவுகளில் காணலாம். இவற்றுள் பல்லாயிரக் கணக்கான உட்பிரிவுகளும் இருக்கின்றன. அவற்றிற்கு இடையேயான ஏற்றத்தாழ்வு நிலை ஒவ்வொறு பகுதியிலும் வெவ்வேறாக இருக்கின்றது. வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளைத் தவறாகப் புரிந்து கொண்ட காரணத்தால் மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டன. தற்போது சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான பல சட்டங்கள் உள்ளன. இதுதவிர தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடும் உள்ளது. இருப்பினும் இந்நாட்டின் அரசியல் வாழ்விலும் திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.
இந்தியாவில் பெண்களின் சமூக நிலை என்றும் சம நிலமையுடையதாக இருக்கவில்லை. அரசியலில், தொழில் வாய்ப்பில், கல்வியில், பொருளாதார பங்கில் பெண்கள் புறக்கணிகப்பட்டோ தடுக்கப்பட்டோ வந்துள்ளார்கள். பெண் சிசுக் கொலை, சிறுவர் திருமணம், சீதனம், உடன்கட்டையேறுதல், மறுமண மறுப்பு, மணவிலக்கு மறுப்பு, உடமை மறுப்பு, கொத்தடிமை யாக்கல், தேவதாசி முறை எனப் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சட்ட ரீதியாகப் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன எனக் கூடச் சொல்ல இயலாது ஏனெனில் இந்தியாவில் சமய அடிப்படையிலான குடியியல் சட்டம் நடப்பில் இருக்கின்றது. எனினும், இந்திய வரலாற்றில் மற்ற நாடுகள்போல் அல்லாத ஒரு முரண்பாடும் உண்டு. அதாவது, பெண்கள் தெய்வங்களாக வழிபடப்படல், பெண்களைச் சிவனுடைய சரி பாதியாக, சக்தியாக அங்கீகரித்தல் போன்றவையாம். மேலும், நவீன இந்தியாவின் ஆளுமை படைத்த தலைவர்களாகப் பெண்களும் இடம் பெறுகின்றார்கள். இந்திரா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி ஆகியோர் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் பெண்களின் நிலை ஒரே ரீதியில் அமைந்திருக்கின்றது என்றும் கூற முடியாது. குறிப்பாகக் கேரள மாநிலத்தில் பெண்களின் உரிமைகள் நன்கு பேணப்படுகின்றன.
சமீப காலங்களில் பெண்களின் நிலை குறிப்பிடத் தகுந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. தகவல் தொடர்பு துறையின் வளர்ச்சி மற்றும் அதைத் தொடர்ந்த இந்திய பொருளாதார வளர்ச்சி பெண்களுக்குப் பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
பண்பாடு
இந்திய பண்பாடு உலகின் முக்கிய பண்பாட்டு ஊற்றுக்களில் ஒன்று. பல இன, மொழி, சமய, பண்பாட்டு தாக்கங்களை உள்வாங்கி இந்திய பண்பாடு வெளிப்பட்டு நிற்கின்றது. இப்பண்பாடு உயரிய, பலக்கிய (complex), பன்முக இசை, நடனம், இலக்கியம் எனப் பல கூறுகளைக் கொண்டது. இந்திய பண்பாட்டின் தன்மை, வெளிப்பாடு, ஆழம் பல நிலைகளைக் கொண்டது. பின் வருவன ஒரு சுருக்கமே.
கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இரு முக்கிய செந்நெறி இசை மரபுகள் ஆகும். கர்நாடக இசை தெற்கிலும், இந்துஸ்தானி இசை வடக்கிலும் தோற்றம் கொண்டன. இந்துஸ்தானி இசை இஸ்லாமிய இசையின் தாக்கங்களை உள்வாங்கிய ஒரு மரபு. இவைதவிர நாட்டார் இசை, தமிழிசை எனப் பல வேறு இசை மரபுகளும் வெளிப்பாடுகளும் உண்டு. இந்திய நடனக்கலையில் பரத நாட்டியம், ஒடிசி, குச்சிப்புடி, கதக், கதகளி போன்று பல நடன வெளிப்பாடுகள் உண்டு. நடனம்மூலம் கதைகளும் சொல்லப்படுகின்றன. இவைத் தவிர நாட்டுப்புறக் கலைகளான நடனங்களும், பொம்மை நடனங்களும் உண்டு.
இசையின் வெளிப்படுத்தும் இசைக் கருவிகளில் வீணை, யாழ், புல்லாங்குழல், தம்புரா, மிருதங்கம், நாதசுவரம், மத்தளம், தவில், ஆகுளி, உறுமி, முரசு, தமுக்கு, பம்பை, கஞ்சிரா, ஐம்முக முழவம், கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி, கொம்பு, தாரை, சங்கு, முகவீணை, எக்காளம் மற்றும் தாளம் முதன்மையானவைகள் ஆகும்.
உலகின் மிக முக்கிய இலக்கிய உருவாக்கங்களை இந்தியா கொண்டுள்ளது. சமசுகிருதம், தமிழ், வங்காள மொழி, உருது போன்ற பல முக்கிய உலக மொழிகளின் இலக்கிய வெளிப்பாடுகள் இந்தியாவின் பண்பாட்டு கலவையில் வெளிப்பட்டு நிற்கின்றன. வேதம், வேதாந்தம், ஆகமங்கள், புத்தசமய படைப்புக்கள், காப்பியங்கள் (இராமாயணம், மகாபாரதம்), தமிழ் சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் தமிழ் காப்பியங்கள் எனப் பல கோணங்களில் இந்திய இலக்கியம் வெளிப்படுகின்றது.
கொண்டாட்டங்கள் இந்திய பண்பாட்டின், வாழ்வியலின் இணை பிரியா கூறுகள் ஆகும். பொங்கல், தீபாவளி, நவராத்திரி எனக் கொண்டாட்டங்கள் பல உண்டு. இந்திய சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்றவையும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கொண்டாட்டங்கள் ஆகும். மேலும், தனி மனித வாழ்வியல் நிகழ்வுகளை மையமாக வைத்தும் பல கொண்டாட்டங்கள் உண்டு.
பண்டைய இந்தியாவானது அறிவியலில் சிறந்து விளங்கியது. ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோர் கோள்களின் இயக்கங்களின் பற்றி ஆராய்ந்த அறிஞர்களில் முக்கியமானவர்களாவர். இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் கணித எண்கள், இந்து-அரபு எண்கள் ஆகும். இந்தியாவிலேயே 0 என்ற எண்ணக்கரு முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது என்பர்.
சேலை, வேட்டி, குர்தா, சல்வார் கமீஸ் போன்றவை, இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் உடைகளாகும். அரிசியும், கோதுமையும் இந்திய உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தாளி, இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவை இந்தியர்கள் வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளில் சிலவாகும்.
இந்தியர்களின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்றாகத் திரைப்படங்கள் விளங்குகின்றன. இந்தி, தமிழ், தெலுங்குத் திரைப்படங்கள் அவற்றின் பொழுதுபோக்கு கூறுகளுக்காகவும் வங்காள மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்கள் அவற்றின் கலை நேர்த்திக்காகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
இந்தியாவின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க சில பண்பாட்டு வேறுபாடுகளைக் காண முடியும் என்றாலும் மாநில மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து பண்பாட்டுச் கூடல் நிகழும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிகழ்வுக்கான முக்கிய காரணிகளில் ஒன்று, பெருகி வரும் மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆகும். 1990களுக்குப் பிறகு நிகழ்ந்த உலக மயமாக்கலும், பொருளாதார தாராளமயமாக்கலும் இந்தியப் பண்பாட்டைக் குறிப்பிடத்தக்க அளவுமேல் நாட்டு பண்பாட்டின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ளன. நவீன இந்திய இசை, திரைப்படங்கள், நாடகங்கள், ஊடகங்கள், மொழிகள், வர்த்தக முறைகள், அன்றாட வாழ்க்கை முறை, பணியிட நடத்தை முறைகள், ஆண்-பெண் நட்பு / உறவு ஆகியவற்றில் ஆங்கிலச் சொற்கள், மேல் நாட்டு சிந்தனைகள், மனப்போக்குகள் இடம் பெறத் தொடங்கியுள்ளன.
பல்வேறு காலகட்டங்களில் பலவாறு மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், இந்திய பண்பாட்டின் முக்கியக் கூறுகளான சகிப்புத்தன்மை, விருந்தோம்பல், குடும்ப உறவுகளுக்கான மதிப்பு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை இன்னும் நீர்த்துப் போகாமல் இருப்பது அதன் சிறப்பாகும்.
சுற்றுலா
சுற்றுலாத்துறை இந்தியாவின் மிகப் பெரிய சேவைத் துறையாகும். இது நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியில் 6.23 சதவீதம் பங்களிக்கிறது மொத்த வேலைவாய்ப்பில் 8.78% சதவீதத்தைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 5 மில்லியனுக்கும் மேலான அந்நிய சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் 562 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையையும்[58] கொண்டுள்ளது. இந்தியாவில் சுற்றுலாத் துறையானது 2008 ஆம் ஆண்டில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது. மேலும் இத்துறையானது 2018 இல் ஆண்டு வளர்ச்சி விகிதம் 9.4% சதவீதமாக அதிகரித்து 275.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.[59]
சுற்றுலாத்துறை அமைச்சகமானது இந்தியாவின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு முகமையாக உள்ளது. மேலும் "இன்க்ரெடிபிள் இண்டியா" பிரச்சாரத்தையும் தொடர்ந்து நடத்துகின்றது.
சுற்றுலா தொடருந்துகள்
இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் மற்றும் இந்தியன் இரயில்வே,[60] உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல சுற்றுலாத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பேலஸ் ஆன் வீல்ஸ்,[61] மகாராஜா எக்ஸ்பிரஸ், ராயல் ஓரியன்ட் எக்ஸ்பிரஸ், டெக்கான் ஒடிசி, ராயல், ராசத்தான் ஆன் வீல்ஸ் மற்றும் கோல்டன் சாரியட் (தங்க இரதம்), டெக்கான் ஒடிசி, புத்திஸ்ட் எக்ஸ்பிரஸ் போன்ற பெயர்களில் நவீன சொகுசு தொடருந்துகள் வட இந்தியா மற்றும் தென்னிந்தியா மற்றும் கிழக்கிந்தியாவின் பண்பாட்டு கலாசார இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வகையில் சிறப்பு சொகுசு தொடருந்துகள் தில்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தாவிலிருந்து இயக்கப்படுகிறது.
இந்தியாவின் முதன்மையான சுற்றுலா இடங்களை குறைந்த கட்டணத்தில் காணத் தக்கவாறு பாரத் தர்சன் என்ற பெயரில் சிறப்பு தொடருந்துகளை இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் இந்தியா முழுவதும் இயக்குகிறது.[62]
விளையாட்டு
இந்தியாவில் தேசிய விளையாட்டு, ஹாக்கி இந்தியாவால் கையாளப்படும் வளைதடிப் பந்தாட்டம் ஆகும். இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி, 1975 வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று உலக அளவில் அதிக வெற்றி பெற்ற ஹாக்கி அணியாகத் திகழ்கிறது. இருப்பினும், மட்டைப்பந்து தாம் மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும்.[63] இந்தியத் துடுப்பாட்ட அணி, 1983 துடுப்பாட்ட உலகக் கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2007 ஐசிசி உலக இருபது ஓவர் கோப்பையை வென்று, அதோடு 2002 ஐசிசி சாம்பியன் கோப்பையை இலங்கையுடன் பங்கு கொண்டது. இந்தியாவில் மட்டைப்பந்து விளையாட்டை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) நிர்வகித்து வருகிறது. உள்நாட்டுப் போட்டிகளான ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை, இரானி கோப்பை மற்றும் என்.கே.பி. சால்வே சேலஞ்ஜர் கோப்பையையும் அது நிர்வகித்து வருகிறது. இவற்றோடு பிசிசிஐ, இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது ஓவர் மட்டைப்பந்து போட்டியையும் விமரிசையாக நடத்தி வருகிறது.
இந்தியா பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டுக்களின் துவக்க இடமாகவும் இருப்பிடமாகவும் திகழ்கிறது. அவை கபடி, சடுகுடு, பெகெல்வாணி, மற்றும் கில்லி தண்டா ஆகும். இந்திய வீர விளையாட்டுக் கலைகளான களரிப்பயிற்று, மல்யுத்தம், சிலம்பாட்டம், வர்மக்கலை ஆகியவற்றின் முற்கால வடிவங்கள் இந்தியாவில் தொடங்கின. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது இரண்டும் இந்தியாவில் விளையாட்டிற்காகக் கொடுக்கப்படும் உயர்ந்த பட்ச விருதுகளாகும். அதுபோல் துரோணாச்சார்யா விருது விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு இந்திய அரசால் கொடுக்கப் படும் உயர்ந்த பட்ச விருதாகும்.
இந்தியாவிலிருந்து ஆரம்பமானதாகக் கருதப்படும், சதுரங்கம், இந்திய பெருந்தலைவர்கள் எனப்படும் வெற்றி வீரர்களின் அதிக எண்ணிக்கை அதிகமாகி வருவதால், மீண்டும் பரவலான விளையாட்டாகத் தலைதூக்குகிறது.[64] இந்திய டேவிஸ் கோப்பை அணி மற்றும் பல்வேறு டென்னிஸ் ஆட்டக்காரர்களின் வெற்றிகளாலும், டென்னிஸ் விளையாட்டும் புகழ்பெற்று வருகிறது.[65] துப்பாக்கி சுடுதல் போட்டியில், ஒலிம்பிக் போட்டி, உலக துப்பாக்கி சுடுதல் போட்டி, மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்களில் பல்வேறு தங்கப் பதக்கங்களையும் வென்று, இந்தியா திடமான முன்னிலை வகிக்கிறது.[66] இவற்றோடு இந்திய விளையாட்டாளர்கள் சர்வதேச அளவில் பூப்பந்தாட்டம்[67], குத்துச்சண்டை[68] மற்றும் மற்போர்[69][70] விளையாட்டுக்களில் பல பதக்கங்களையும் பரிகளையும் வென்றுள்ளனர். காற்பந்தாட்டம், வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், கோவா, தமிழ் நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் புகழ்பெற்ற விளையாட்டாகும்.[71]
விடுமுறை நாட்கள்
இந்தியாவில் நான்கு நாட்கள் தேசிய விடுமுறை நாட்களாகும். அவை:
- விடுதலை நாள் (ஆகஸ்ட் 15)
- குடியரசு நாள் (ஜனவரி 26)
- காந்தி பிறந்த நாள் (அக்டோபர் 2)
- தொழிலாளர் தினம் (மே 1)
இவைதவிர விழாக்களுக்கென உள்ளூர் விடுமுறைகளும் உண்டு.
இவற்றையும் பார்க்கவும்
- அதிகாரப்பூர்வமான மொழிகளில் இந்தியாவின் பெயர்கள்
- இந்திய வரலாற்று காலக் கோடு
- இந்தியப் பிரதமர்கள்
- இந்தியக் குடியரசுத் தலைவர்கள்
- இந்தியாவில் தொடர்புத் துறை
- இந்தியாவில் போக்குவரத்து, இந்திய இரயில்வே
- இந்தியாவிலுள்ள பெருநகரங்கள்
- இந்தியாவின் ஆயுதப்படை
- இந்தியாவின் வெளிநாட்டுத் தொடர்புகள்
- செல்வாக்குள்ள இந்திய வர்த்தகர்கள்
- பிரபல இந்தியர்களின் பட்டியல்
- இந்தியா தொடர்பான தலைப்புக்களின் பட்டியல்
- இந்தியாவில் மக்கள் தொடர்புச் சாதனங்கள்
- இந்திய அரசியல் கட்சிகள்
- இந்தியத் திரைப்படங்கள்
- இந்திய விழாக்கள்
- இந்திய இலக்கியம்
- இந்தியக் கட்டிடக்கலை
- குடிமக்களுக்கான கௌரவம்
துணை நூல்கள்
- ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் உடன் ய.சு.ராஜன். நெல்லை சு. முத்து (தமிழாக்கம்). (2002). இந்தியா 2020. சென்னை: நியூ செஞ்சரி புக் ஹவுஸ் (பி) லிட்.
- மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம்.
குறிப்புகள்
- ↑ இந்திய அரசியலமைப்பு XVII இன் படி, தேவநாகரி வடிவில் உள்ள இந்தி இந்திய நாட்டின் அலுவல் மொழி ஆகும், ஆங்கிலம் மேலதிக அலுவல் மொழி.[1][5][6] மாநிலங்களும் ஒன்றியப் பகுதிகளும் இந்தி அல்லது ஆங்கிலம் அல்லாத தமது உள்ளூர் மொழியை ஆட்சி மொழியைக் கொண்டிருக்கலாம்.
- ↑ முக்கியமாக "மொழி" மற்றும் "வட்டார வழக்கு" எவ்வாறு வரையறுக்கப்பட்டு தொகுக்கப்படுகின்றன என்பதன் அடிப்படையில், வெவ்வேறு மூலங்கள் பரவலாக வேறுபட்ட புள்ளிவிவரங்களை வழங்குகின்றன. எத்னொலோக் இந்தியாவுக்கு 461 மொழிகளைப் பட்டியலிட்டுள்ளது (உலக அளவில் 6,912), இவற்றில் 447 பேசப்படும் மொழிகள், 14 வழக்கில் இல்லாதவை.[12][13]
- ↑ "சில எல்லைகள் சர்ச்சைக்குரியதாக இருப்பதால், நாட்டின் சரியான அளவு விவாதத்திற்கு உட்பட்டது. இந்திய அரசு மொத்தப் பரப்பளவை 3,287,260 சதுரகிமீ எனவும், மொத்த நிலப்பரப்பை 3,060,500 சகிமீ ஆகவும் வரையறுத்துள்ளது; ஐக்கிய நாடுகள் மொத்தப் பரப்பளவை 3,287,263 சகிமீ ஆகவும், மொத்த நிலப்பரப்பை 2,973,190 சகிமீ ஆகவும் வரையறுத்துள்ளது.."(Library of Congress 2004).
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 National Informatics Centre 2005.
- ↑ 2.0 2.1 2.2 "National Symbols | National Portal of India". India.gov.in. Archived from the original on 4 February 2017. பார்க்கப்பட்ட நாள் 1 March 2017.
The National Anthem of India Jana Gana Mana, composed originally in Bengali by Rabindranath Tagore, was adopted in its Hindi version by the Constituent Assembly as the National Anthem of India on 24 January 1950.
- ↑ "National anthem of India: a brief on 'Jana Gana Mana'". News18. 14 August 2012 இம் மூலத்தில் இருந்து 17 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190417194530/https://www.news18.com/news/india/national-anthem-of-india-a-brief-on-jana-gana-mana-498576.html.
- ↑ Wolpert 2003, ப. 1.
- ↑ Ministry of Home Affairs 1960.
- ↑ "Profile | National Portal of India". India.gov.in. Archived from the original on 30 August 2013. பார்க்கப்பட்ட நாள் 23 August 2013.
- ↑ "Constitutional Provisions – Official Language Related Part-17 of the Constitution of India". Department of Official Language via இந்திய அரசு. Archived from the original on 18 April 2021. பார்க்கப்பட்ட நாள் 18 April 2021.
- ↑ Khan, Saeed (25 January 2010). "There's no national language in India: Gujarat High Court". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 18 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140318040319/http://timesofindia.indiatimes.com/india/Theres-no-national-language-in-India-Gujarat-High-Court/articleshow/5496231.cms.
- ↑ "Learning with the Times: India doesn't have any 'national language'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 November 2009 இம் மூலத்தில் இருந்து 10 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171010085454/https://timesofindia.indiatimes.com/india/Learning-with-the-Times-India-doesnt-have-any-national-language/articleshow/5234047.cms.
- ↑ "Hindi, not a national language: Court". பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா via தி இந்து (Ahmedabad). 25 January 2010 இம் மூலத்தில் இருந்து 4 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140704084339/http://www.thehindu.com/news/national/hindi-not-a-national-language-court/article94695.ece.
- ↑ "50th Report of the Commissioner for Linguistic Minorities in India (July 2012 to June 2013)" (PDF). Commissioner for Linguistic Minorities, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா), இந்திய அரசு. Archived from the original (PDF) on 8 July 2016. பார்க்கப்பட்ட நாள் 26 December 2014.
- ↑ Lewis, M. Paul; Simons, Gary F.; Fennig, Charles D., eds. (2014). "Ethnologue: Languages of the World (Seventeenth edition) : India". Dallas, Texas: எத்னொலோக் by SIL International. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
- ↑ "Ethnologue : Languages of the World (Seventeenth edition) : Statistical Summaries". எத்னொலோக் by SIL International. Archived from the original on December 17, 2014. பார்க்கப்பட்ட நாள் December 17, 2014.
- ↑ "C −1 Population by religious community – 2011". தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். Archived from the original on 25 August 2015. பார்க்கப்பட்ட நாள் 25 August 2015.
- ↑ "World Population Prospects 2022". population.un.org. United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
- ↑ "World Population Prospects 2022: Demographic indicators by region, subregion and country, annually for 1950-2100" (XSLX). population.un.org ("Total Population, as of 1 July (thousands)"). United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
- ↑ "Population Enumeration Data (Final Population)". 2011 Census Data. Office of the Registrar General & Census Commissioner, India. Archived from the original on 22 May 2016. பார்க்கப்பட்ட நாள் 17 June 2016.
- ↑ "A – 2 Decadal Variation in Population Since 1901" (PDF). 2011 Census Data. Office of the Registrar General & Census Commissioner, India. Archived from the original (PDF) on 30 April 2016. பார்க்கப்பட்ட நாள் 17 June 2016.
- ↑ 19.0 19.1 19.2 19.3 "World Economic Outlook Database: April 2021". Imf (அனைத்துலக நாணய நிதியம்). April 2021. https://www.imf.org/en/Publications/WEO/weo-database/2021/April/weo-report?c=534,&s=NGDP_R,NGDP_RPCH,NGDP,NGDPD,PPPGDP,NGDP_D,NGDPRPC,NGDPRPPPPC,NGDPPC,NGDPDPC,PPPPC,&sy=2019&ey=2026&ssm=0&scsm=1&scc=0&ssd=1&ssc=0&sic=0&sort=country&ds=.&br=1.
- ↑ "Gini Index coefficient". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. Archived from the original on 7 July 2021. பார்க்கப்பட்ட நாள் 10 July 2021.
- ↑ "Human Development Report 2020" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 15 December 2020. பார்க்கப்பட்ட நாள் 15 December 2020.
- ↑ "List of all left- & right-driving countries around the world". worldstandards.eu. 13 May 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
- ↑ "Andaman & Nicobar Command – Indian Navy". Indiannavy.gov.in. Archived from the original on 2011-09-11. பார்க்கப்பட்ட நாள் 2010-08-23.
- ↑ Kumar, V. Sanil; K. C. Pathak, P. Pednekar, N. S. N. Raju (2006). "Coastal processes along the Indian coastline" (PDF). Current Science 91 (4): 530–536. http://drs.nio.org/drs/bitstream/2264/350/1/Curr_Sci_91_530.pdf.
- ↑ "India's population 'to be biggest' in the planet". BBC News. 18 August 2004. http://news.bbc.co.uk/2/hi/3575994.stm. பார்த்த நாள்: 2011-09-24.
- ↑ 31 அக்டோபர் 2019-இல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆணையின் படி வெளியிடப்பட்ட இந்தியாவின் புதிய வரைபடம்
- ↑ Centre releases political map of new Union Territories Jammu & Kashmir and Ladakh
- ↑ India (noun), ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி, 3rd Edition, 2009 (subscription required)
- ↑ Thieme, P. (1970), "Sanskrit sindu-/Sindhu- and Old Iranian hindu-/Hindu-", in Mary Boyce; Ilya Gershevitch (eds.), W. B. Henning memorial volume, Lund Humphries, pp. 447–450
- ↑ Clémentin-Ojha, Catherine (2014). "'India, that is Bharat…': One Country, Two Names". South Asia Multidisciplinary Academic Journal 10. http://samaj.revues.org/3717.
- ↑ Barrow, Ian J. (2003). "From Hindustan to India: Naming change in changing names". South Asia: Journal of South Asian Studies 26 (1): 37–49. doi:10.1080/085640032000063977.
- ↑ Encyclopædia Britannica.
- ↑ http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm
- ↑ http://indiacode.nic.in/coiweb/amend/amend69.htm
- ↑ "Article 370 of the Indian Constitution". Archived from the original on 2015-01-26. பார்க்கப்பட்ட நாள் 2017-04-18.
- ↑ "Full state status will be restored to J&K at appropriate time: Amit Shah in RS".
- ↑ GDP per capita of India
- ↑ India GDP per Capita
- ↑ http://censusindia.gov.in/2011-prov-results/data_files/india/Final_PPT_2011_chapter6.pdf
- ↑ Decadal Growth
- ↑ "Census Provional Population Totals". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 14 February 2013.
- ↑ Abantika Ghosh, Vijaita Singh (24 January 2015). "Census 2011: Muslims record decadal growth of 24.6 pc, Hindus 16.8 pc". Indian Express. Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
- ↑ "Hindus 79.8%, Muslims 14.2% of population: census data".
- ↑ "India Census 2011". Censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2015-08-25.
- ↑ Census: Hindu share dips below 80%, Muslim share grows but slower
- ↑ 46.0 46.1 "Muslim population growth slows".
- ↑ "Muslim representation on decline". The Times of India. 31 August 2015. http://timesofindia.indiatimes.com/india/Muslim-representation-on-decline/articleshow/48737293.cms. பார்த்த நாள்: 2015-08-31.
- ↑ http://timesofindia.indiatimes.com/india/Hindu-population-declined-Muslims-increased-Census-2011/articleshow/48671407.cms
- ↑ "Against All Gods: Meet the league of atheists from rural Uttar Pradesh".
- ↑ "People without religion have risen in Census 2011, but atheists have nothing to cheer about".
- ↑ "The tradition of atheism in India goes back 2,000 years. I'm proud to be a part of that".
- ↑ "Why a Tinder date is better than 72 virgins in paradise".
- ↑ "Population by religious community – 2011". 2011 Census of India. Office of the Registrar General & Census Commissioner. Archived from the original on 25 August 2015. பார்க்கப்பட்ட நாள் 25 August 2015.
- ↑ State Wise Religion Data 2011
- ↑ "இந்தி, not a national language: Court". The Hindu. 25 January 2010 இம் மூலத்தில் இருந்து 26 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100126233617/http://beta.thehindu.com/news/national/article94695.ece. பார்த்த நாள்: 22 January 2011.
- ↑ Human Development Report 2019
- ↑ National Human Development Report Production Team
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-08-18. பார்க்கப்பட்ட நாள் 2016-03-06.
- ↑ சுற்றுலாவாண்மை & விருந்தோம்பல் - IBEF
- ↑ http://www.indiarailtours.com/
- ↑ http://www.indiarailtours.com/golden-triangle-train-tour.html
- ↑ [ http://www.irctctourism.com/cgi-bin/dev1.dll/irctc/booking/planner.do trainType=Bharat%20Darshan&trainCat=Bharat%20Darshan&screen=FromTrainType&pressedGo=&submitClicks=0&offset=0 Bharat Darshan]
- ↑ Shores, Lori (2007). Teens in India. Compass Point Books, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7565-2063-0, 9780756520632.
{{cite book}}
: Check|isbn=
value: invalid character (help) - ↑ "Anand crowned World champion". Rediff. 29 October 2008. http://www.rediff.com/sports/2008/oct/29anand.htm. பார்த்த நாள்: 22 January 2011.
- ↑ "India Aims for Center Court". WSJ. September 11, 2009. http://online.wsj.com/article/SB10001424052970203440104574406704026883502.html. பார்த்த நாள்: 22 January 2011.
- ↑ "Sawant shoots historic gold at World Championships". TOI. Aug 9, 2010. http://timesofindia.indiatimes.com/sports/more-sports/shooting/Sawant-shoots-historic-gold-at-World-Championships/articleshow/6274795.cms. பார்த்த நாள்: 22 Januar 2011.
- ↑ "Saina Nehwal: India's badminton star and 'new woman'". BBC. 1 August 2010. http://www.bbc.co.uk/news/world-south-asia-10725584. பார்த்த நாள்: 22 January 2011.
- ↑ "Is boxing the new cricket?". Live Mint. Sep 24 2010. http://www.livemint.com/2010/09/24211250/Is-boxing-the-new-cricket.html. பார்த்த நாள்: 22 January 2011.
- ↑ "India makes clean sweep in Greco-Roman wrestling". TOI. Oct 5, 2010 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629121906/http://timesofindia.indiatimes.com/india-news/india-make-clean-sweep-in-greco-roman-wrestling/cwgarticleshow/6691936.cms. பார்த்த நாள்: 22 January 2011.
- ↑ Xavier, Leslie (Sep 12, 2010). "Sushil Kumar wins gold in World Wrestling Championship". TOI. http://timesofindia.indiatimes.com/sports/more-sports/wrestling/Sushil-Kumar-wins-gold-in-World-Wrestling-Championship/articleshow/6542488.cms. பார்த்த நாள்: 22 January 2011.
- ↑ Majumdar & Bandyopadhyay 2006, ப. 1–5.
- Majumdar, Boria; Bandyopadhyay, Kausik (2006). A Social History Of Indian Football: Striving To Score. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-34835-8.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help); Invalid|ref=harv
(help)
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
அதிகாரப்பூர்வமான இணைப்புகள்
- இந்திய அரசின் செம்மொழித் தமிழ் இணையத்தளம்
- இந்திய அரசு இணையத்தளங்களின் பட்டியல்
- இந்தியப் பிரதமரின் இணையத்தளம்
- இந்தியக் குடியரசுத் தலைவரின் இணையத்தளம்
- இந்திய நாடாளுமன்றத்தின் இணையத்தளம்