ஆள் எடுத்துச் செல்லக்கூடிய வான்காப்பு முறைமை
ஆள் எடுத்துச் செல்லக்கூடிய வான்காப்பு முறைமை (MANPADS)-(ஆ.எ.செ.வா.மு) என்பது எளிதாக தூக்கிச் செல்லக்கூடிய தரையிலிருந்து ஆகாயவிமானங்களை தாக்க வல்லது. பொதுவாக மனிதன் தோட்பட்டையில் வைத்து விமானத்தை நோக்கி ஏவுவது ஆகும்.[1] இது ஒரு மனிதனோ அல்லது ஒரு குழுவினரோ சேர்ந்து ஏவுகின்றனர். இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு அமெரிக்கர்கள் இது போன்று ஒரு ஆயுதம் வேண்டும் என எண்ணினார்கள்.[2] இதன் விளைவாக 1967-ம் ஆண்டு முதல் தோட்பட்டையில் வைத்து விமானத்தை நோக்கி ஏவும் ஏவுகணை விண்ணில் பறந்தது.
இந்த வகை ஏவுகணைகள் இலகுவாக எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. பொதுவாக இதன் எடை 15-18 கிலோ வரை இருக்கக்கூடும். இந்த ஏவுகணை ஒரு உருளைவடிவ ஏவும் கருவியினுள் ( launcher ) ஏவப்படுகிறது. இந்த ஏவும் கருவி சுமார் ஐந்து அடி நீளமும் மூன்று அங்குலம் விட்டமும் கொண்டது. இந்தக் கருவி ஒரு மின்கொள்கலன் மற்றும் மோட்டார் உதவிக் கொண்டு ஏவுகணையை ஏவும்.
இவற்றை இயக்குவது சுலபம். சிறிது பயிற்சி எடுத்துக்கொண்டால் போதும். மேலும் இதன் விலையும் ஒரு சில லட்சங்களே. இதன் காரணமாகத் தான் தீவிரவாதிகள் இதனைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் 5,00,000 முதல் 7,50,000 இந்த வகை ஏவுகணைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாடும் அதன் பாதுகாப்பிற்காக இந்த வகை ஏவுகணைகளைச் செய்தன. ஆனால் பல்வேறு காரணங்களால் இன்று அரசாங்கம் அல்லாத பல தீவிரவாத அமைப்புகளிடம் இது உள்ளது.
மேற்கோள்
[தொகு]- ↑ Online. https://www.bicc.de/uploads/tx_bicctools/BICC_brief_02.pdf (பார்த்த நாள் 14/12/2017).
{{cite book}}
: External link in
(help)|title=
- ↑ Online. https://www.globalsecurity.org/military/intro/manpads.htm (பார்த்த நாள் 14/12/2017).
{{cite book}}
: External link in
(help)|title=