ஆசுத்திரோனீசிய மக்கள்
ரொட்ரிகோ டுட்டேர்ட்டே | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
அண். 400 மில்லியன் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
| |
மொழி(கள்) | |
ஆசுத்திரோனீசிய மொழிகள் | |
சமயங்கள் | |
விலங்கு வணக்கம், பாலி இந்துசமயம், பௌத்தம், கிறித்தவம், நாட்டார் மதம், இந்து சமயம், உள்ளூர் மதம், இசுலாம், சமனியம் |
ஆசுத்திரோனீசிய மக்கள் (Austronesian peoples) என்போர், தென்கிழக்கு ஆசியா, ஓசானியா, கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் வாழ்பவர்களும், ஆசுத்திரனீசியப் பெருங் குடும்ப மொழிகளில் ஒன்றைப் பேசுபவர்களுமான மக்கள் ஆவர். தாய்வான் மூத்த குடிகள்; பிலிப்பைன்சு, கிழக்குத் திமோர், இந்தோனீசியா, மலேசியா, புரூணி, கோக்கோசுத் தீவுகள், மடகாசுக்கர், மைக்குரோனீசியா, பொலினீசியா ஆகிய இடங்களில் உள்ள பெரும்பாலானோருடன் சிங்கப்பூரில் வாழும் மலே மக்கள், நியூசிலாந்து அவாய் ஆகிய இடங்களில் வாழும் பொலினீசிய மக்கள், மெலனீசியாவில் வாழும் பப்புவர் அல்லாத மக்கள் ஆகியோரும் இக்குழுவில் அடங்குகின்றனர். இவர்கள், தென் தாய்லாந்தின் சில பகுதிகளிலும்; வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளின் சாம் பகுதியிலும்; சீனாவின் ஐனான் தீவு மாகாணத்திலும், இலங்கையின் சில பகுதிகளிலும், தெற்கு மியன்மார், தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனை, சுரினாம், சில அந்தமான் தீவுகள் ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றனர். இவற்றை விடப் புலம்பெயர் ஆசித்திரோனீசிய மக்களை ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆசுத்திரேலியா, ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து, இசுப்பெயின், போர்த்துக்கல், ஆங்காங், மாக்கூ ஆகிய நாடுகளிலும், மேற்காசியாவிலும் காண முடியும். மாலைதீவு மக்களும், மாலாயத் தீவுக்கூட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொண்ட ஆசுத்திரோனீசிய மரபணுச் சுவடுகளைக் கொண்டுள்ளனர்.[14] ஆசுத்திரோனீசிய மக்களைப் பெருமளவில் கொண்ட நாடுகளையும், பகுதிகளையும் ஒருங்கு சேர ஆசுத்திரோனீசியா என அழைக்கின்றனர்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலமும், வரலாற்றுக் காலமும்
[தொகு]தென்கிழக்காசியா, மெலனீசியா ஆகிய தென் பகுதிக்கும், பெரு நிலச் சீனாவின் முதல் அறியப்பட்ட பகுதிகளுக்கும் இடையே தொழில்நுட்பத் தொடர்புகள் இருந்ததற்குத் தொல்லியல் சான்றுகள் உள்ளன. அதேவேளை, தொல்லியல், மொழியியல் என்பன சார்ந்த சான்றுகள், ஆசுத்திரோனீசிய மொழிகள் வடக்கே, பெருநிலத் தென் சீனா, தாய்வான் ஆகிய பகுதிகளில் தோற்றம் பெற்றதாகக் காட்டுகின்றன.
ஆன் வம்சத்தினதும், வியட்நாமினதும் தெற்கு நோக்கிய விரிவாக்கத்துக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஆசுத்திரோனீசிய மொழிகளைப் பேசுவோர், தென் சீனக் கரையோரமாகத் தாய்வானைக் கடந்து தொங்கின் குடா வரை பரவினர். காலப்போக்கில், ஆசுத்திரோ-ஆசிய, தாய்-கடை, உமொங்-மியென், சீன-திபேத்தியம் ஆகிய மொழிக் குழுக்களின் பரவல், தன்மயமாதலைத் தூண்டி, சீனப் பெருநிலப் பகுதியில் வாழ்ந்த ஆசுத்திரோனீசிய பொழி பேசும் மக்கள் சீனமயமாக்கத்துக்கு உட்பட்டுத் தமது அடையாளத்தை இழந்துவிட்டனர் (இது இன்றும் தாய்வானில் தொடர்கிறது).[15] அண்மைக் காலத்தில், எல்லா ஆசுத்திரோனீசிய மொழிகளும் 10 துணைக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டன. இதில் தாய்வானுக்கு வெளியில் உள்ள எல்லா மொழிகளும் ஒரே துணைக் குடும்பத்துள் அடங்க, ஏனைய ஒன்பது துணைக் குடும்பங்களிலும் உள்ள மொழிகள் தாய்வானில் மட்டுமே காணப்படுகின்றன.[16] இந்தக் கோலம், வேளாண்மைசார்ந்த மக்கள் தாய்வானில் இருந்து தீவுசார்ந்த தென்கிழக்கு ஆசியா, மெலனீசியா ஆகிய பகுதிகளுக்கு வந்து இறுதியாகப் பசிபிக்கின் தொலைவுப் பகுதிகளுக்குச் சென்றதைக் காட்டுவதாகக் கூறுகின்றனர். "பொலினீசியாவுக்கான விரைவுத் தொடர்வண்டி" என அழைக்கப்படும் இந்த மாதிரி தற்போதுள்ள தரவுகளுக்குப் பொருத்தமாகக் காணப்படுகின்ற போதிலும்,[17][18] சில ஐயங்களும் எழுப்பப்படுகின்றன.[19] இந்த மாதிரிக்கு மாற்றாக, தென்கிழக்காசியா அல்லது மெலனீசியாவிலேயே ஆசுத்திரோனீசிய மொழிகள் தோற்றம் பெற்றன என்ற கருத்துக்களும் உள்ளன.[20][21][22][23]
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆசுத்திரோனீசிய மக்கள் சுண்டாலாந்துக்குப் (கடல் மட்டம் உயர்ந்து தென்கிழக்காசியத் தீவுகள் உருவாக முன்னர் இருந்த பெரிய நிலப்பகுதி) பரவிக் கடந்த 35,000 ஆண்டுகளாக அங்கேயே கூர்ப்பு அடைந்ததாக மரபியல் பகுப்பாய்வுகள் காட்டுகின்றன.[24] இருந்தாலும், 2016 இன் டி.என்.ஏ பகுப்பாய்வு ஒன்று, ஆய்வில் பயன்படுத்தப்பட்ட ஒரு மரபியல் குறிகாட்டி மட்டும் சிறிய அளவிலான "தாய்வானில் இருந்து வெளியேற்றம்" என்னும் கருதுகோளை ஆதரிப்பதாகவும், ஏனைய குறிகாட்டிகள் இதற்கு மாறாக உள்ளதாகவும் தெரிகிறது.[25]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.bps.go.id/website/pdf_publikasi/watermark_Proyeksi%20Penduduk%20Indonesia%202010-2035.pdf
- ↑ "Population, total". Data. World Bank Group. 2017. பார்க்கப்பட்ட நாள் 29 April 2018.
- ↑ "Malaysia". The World Factbook. Central Intelligence Agency. Archived from the original on 28 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 29 April 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Archived copy". Archived from the original on 7 February 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-07-22.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 7 February 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-07-22.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 7 பெப்பிரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2016.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-02-11. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-11-27. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
- ↑ About 13.6% of Singaporeans are of Malay descent. In addition to these, many Chinese Singaporeans are also of mixed Austronesian descent. See also "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 4 July 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-04-25.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 3 April 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-03-23.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "U.S. 2000 Census". Archived from the original on 2011-11-18. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
- ↑ "Suriname". The World Factbook. Central Intelligence Agency. Archived from the original on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 29 April 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "A2 : Population by ethnic group according to districts, 2012". Census of Population& Housing, 2011. Department of Census& Statistics, Sri Lanka. Archived from the original on 2017-04-28. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
- ↑ Maloney, C. (1980). People of the Maldive Islands. Orient Longman Ltd, Madras. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86131-158-2.
- ↑ Goodenough, Ward Hunt (1996). Prehistoric Settlement of the Pacific, Volume 86, Part 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780871698650.
- ↑ Blust R (1999). "Subgrouping, circularity and extinction: some issues in Austronesian comparative linguistics". In Zeitoun E; Jen-kuei Li, P (eds.). Selected papers from the Eighth International Conference on Austronesian Linguistics. Taipei: Academia Sinica. pp. 31–94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9576716322. இணையக் கணினி நூலக மைய எண் 58527039.
- ↑ Jared Diamond (1988). "Express train to Polynesia". Nature 336 (6197): 307–8. doi:10.1038/336307a0. Bibcode: 1988Natur.336..307D.
- ↑ Diamond 1998, ப. 336ff
- ↑ Richards, Martin; Stephen Oppenheimer; Bryan Sykes (1998). "mtDNA suggests Polynesian origins in Eastern Indonesia". American Journal of Human Genetics 63 (4): 1234–6. doi:10.1086/302043. பப்மெட்:9758601.
- ↑ Isidore Dyen (1962). "The lexicostatistical classification of Malayapolynesian languages". Language 38 (1): 38–46. doi:10.2307/411187.
- ↑ Isidore Dyen (1965). "A Lexicostatistical Classification of the Austronesian Languages". Internationald Journal of American Linguistics, Memoir 19: 38–46.
- ↑ Oppenheimer, Stephen (1998). Eden in the east: the drowned continent. London: Weidenfield & Nicholson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-297-81816-3.
- ↑ Cristian Capelli; James F. Wilson; Martin Richards; Michael P. H. Stumpf; Fiona Gratrix; Stephen Oppenheimer; Peter Underhill; Vincenzo L. Pascali et al. (2001). "A Predominantly Indigenous Paternal Heritage for the Austronesian-Speaking Peoples of Insular Southeast Asia and Oceania". American Journal of Human Genetics 68 (2): 432–443. doi:10.1086/318205. பப்மெட்:11170891.
- ↑ "Climate change and postglacial human dispersals in southeast Asia". Mol. Biol. Evol. 25 (6): 1209–18. June 2008. doi:10.1093/molbev/msn068. பப்மெட்:18359946. https://academic.oup.com/mbe/article/25/6/1209/1134230. "New DNA evidence overturns population migration theory in Island Southeast Asia". Phys.org. 23 May 2008.
- ↑ Pedro A. Soares, Jean A. Trejaut, Teresa Rito, Bruno Cavadas, Catherine Hill, Ken Khong Eng, Maru MorminaAndreia Brandão, Ross M. Fraser, Tse-Yi Wang, Jun-Hun Loo, Christopher Snell, Tsang-Ming Ko, António Amorim, Maria Pala, Vincent Macaulay, David Bulbeck, James F. Wilson, Leonor Gusmão, Luísa Pereira, Stephen Oppenheimer, Marie Lin, Martin B. Richard (2016). "Resolving the ancestry of Austronesian-speaking populations". Human Genetics. doi:10.1007/s00439-015-1620-z. பப்மெட்:26781090. https://link.springer.com/article/10.1007%2Fs00439-015-1620-z.