அமைச்சர் (சதுரங்கம்)
அமைச்சர் அல்லது மந்திரி (Bishop) என்பது சதுரங்கத்தில் ஒரு காய் ஆகும்.[1] போட்டியின் ஆரம்பத்தில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு அமைச்சர்கள் வீதம் கொண்டிருப்பர்.[2] ஒரு அமைச்சர் அரசனின் குதிரைக்கும் அரசனுக்கும் இடையிலும் மற்றைய அமைச்சர் அரசியின் குதிரைக்கும் அரசிக்கும் இடையிலும் வைக்கப்படும்.[3] வெள்ளை அமைச்சர்கள் c1, f1 ஆகிய கட்டங்களிலும் கறுப்பு அமைச்சர்கள் c8, f8 ஆகிய கட்டங்களிலும் நிலைபெற்றிருக்கும்.[4]
நகர்வு
[தொகு]a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
சதுரங்கக் காய்கள் | ||
---|---|---|
அரசன் | ||
அரசி | ||
கோட்டை | ||
அமைச்சர் | ||
குதிரை | ||
காலாள் |
ஒரு நகர்வில் அமைச்சர் செல்லக்கூடிய தூரமானது எல்லைக்குட்பட்டதில்லை. ஆயினும் அமைச்சரானது குறுக்காக மட்டுமே நகர முடியும்.[5] அமைச்சரானது ஏனைய காய்களைத் தாண்டிச் செல்ல மாட்டாது.[6] எதிரியின் காய் கைப்பற்றியுள்ள கட்டத்திற்குச் செல்வதனூடாக அக்காயை அமைச்சர் கைப்பற்றிக் கொள்ளும்.
அமைச்சர்கள் அவையமைந்துள்ள பக்கங்களின் அடிப்படையில் அரசனின் அமைச்சர், அரசியின் அமைச்சர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படும். குறுக்காக மட்டுமே அமைச்சர்கள் செல்ல முடியுமாதலால், ஓர் அமைச்சரானது வெள்ளைக் கட்டங்களில் மட்டும் அல்லது கறுப்புக் கட்டங்களில் மட்டுமே செல்ல முடியும். அவற்றைக் கொண்டு அமைச்சர்களை வெளிர்கட்ட அமைச்சர், அடர்கட்ட அமைச்சர் என்றும் அழைப்பதுண்டு.[7]
ஒப்பீடு
[தொகு]கோட்டையுடன்
[தொகு]கோட்டையானது ஓர் அமைச்சரை விட ஏறத்தாழ இரண்டு காலாள்கள் கூடுதலாகப் பெறுமதி வாய்ந்தது. அமைச்சரானது சதுரங்கப் பலகையின் அரைப் பகுதியினுள் மட்டுமே நகர முடியும். ஆனால், கோட்டையானது பலகையின் எந்தப் பகுதிக்கும் நகரக் கூடியது. ஒரு வெறும்பலகையில் கோட்டையானது 14 கட்டங்களைத் தாக்கும். ஆனால், அமைச்சரோ 13 கட்டங்களை விட அதிகமாகத் தாக்க மாட்டாது. அதுவுங்கூட அமைச்சரானது பலகையின் மையத்துக்கு எவ்வளவு அருகில் அமைந்துள்ளது என்பதைப் பொருத்தே அமையும். மேலும் ஓர் அரசனும் கோட்டையும் மட்டும் எதிரியின் தனித்த அரசனை இறுதி முற்றுகைக்காளாக்க முடியும். ஆனால், ஓர் அரசனும் அமைச்சரும் மட்டும் எதிரியின் தனித்த அரசனை இறுதி முற்றுகைக்காளாக்க முடியாது.
குதிரையுடன்
[தொகு]பொதுவாக, குதிரைகளும் அமைச்சர்களும் அண்ணளவாகச் சமனாகவிருப்பினும் விளையாட்டின் தன்மையைப் பொறுத்து அவற்றின் பெறுமதிகள் மாறுபடலாம்.
ஒருங்குறி
[தொகு]ஒருங்குறியில் அமைச்சருக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.
♗ U+2657-வெள்ளை அமைச்சர்[8]
♝ U+265D-கறுப்பு அமைச்சர்[9]
இதையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ சதுரங்கக் காய்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ ["சதுரங்கத்தின் விதிகள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-04. பார்க்கப்பட்ட நாள் 2012-07-03. சதுரங்கத்தின் விதிகள் (ஆங்கில மொழியில்)]
- ↑ "காலாட்களை வைத்தல் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-03-29. பார்க்கப்பட்ட நாள் 2012-07-03.
- ↑ "அமைச்சர்களை வைத்தல் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-03-28. பார்க்கப்பட்ட நாள் 2012-07-03.
- ↑ ["அமைச்சரின் நகர்வு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-05. பார்க்கப்பட்ட நாள் 2012-07-03. அமைச்சரின் நகர்வு (ஆங்கில மொழியில்)]
- ↑ ["அமைச்சர் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-07. பார்க்கப்பட்ட நாள் 2012-07-03. அமைச்சர் (ஆங்கில மொழியில்)]
- ↑ ["காய்கள் & நகர்வு-அமைச்சர், குதிரை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-08-20. பார்க்கப்பட்ட நாள் 2012-07-03. காய்கள் & நகர்வு-அமைச்சர், குதிரை (ஆங்கில மொழியில்)]
- ↑ U+2657: வெள்ளைச் சதுரங்க அமைச்சர் (ஆங்கில மொழியில்)
- ↑ U+265D: கறுப்புச் சதுரங்க அமைச்சர் (ஆங்கில மொழியில்)