உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னா அக்மதோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னா அக்மதோவா
Akhmatova in 1922 (Portrait by Kuzma Petrov-Vodkin)
Akhmatova in 1922 (Portrait by Kuzma Petrov-Vodkin)
பிறப்புAnna Andreevna Gorenko
(1889-06-23)சூன் 23, 1889
ஒடெசா
இறப்புமார்ச்சு 5, 1966(1966-03-05) (அகவை 76)
சென் பீட்டர்ஸ்பேர்க்
தேசியம்ரசியர்
வகைகவிதை
இலக்கிய இயக்கம்Acmeism
துணைவர்Nikolay Gumilyov
Vladimir Shilejko
Nikolai Punin
பிள்ளைகள்Lev Gumilyov

அன்னா அக்மதோவா 1889 இல் பிறந்த ரஷ்யக் கவிஞர். நிக்கோலாய் குமிலியோவ் என்ற கவிஞரைக் காதலித்து, 1910 இல் திருமணம் செய்தார்; 1916 இல் இருவரும் பிரிந்தனர். எதிர்ப்புரட்சியாளர் என்ற தவறான குற்றச்சாட்டில் 1921 இல் குமிலியோவ் சுட்டுக் கொல்லப்பட்டார்.[Notes 1][1][2] 1912 இல் முதலாவது கவிதை நூலான 'மாலைப்பொழுது' வெளிவந்தது; 1914 இல் 'மணிகள்' என்ற இரண்டாவது தொகுப்பு வெளியானது. 1935 - 40 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட 'இரங்கற்பா' நெடுங்கவிதை மிக முக்கியமான படைப்பாகும். 'யுனெஸ்கோ' நிறுவனம், 1989 ஆம் ஆண்டினை 'அக்மதோவா ஆண்டு' எனப் பிரகடனப்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உலகக் கவிஞரில் ஒருவராக அக்மதோவா கருதப்படுகிறார். 1966 இல் மரணமடைந்தார்.

குறிப்புகள்

[தொகு]
  1. உருசியம்: А́нна Андре́евна Горе́нко, பஒஅ[ˈanːə ɐnˈdrʲe(j)ɪvnə ɡɐˈrʲɛnkə]( கேட்க); உக்ரைனியன்: А́нна Андрі́ївна Горе́нко, uk.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nomination archive – Anna Achmatova nobelprize.org
  2. Harrington (2006) p. 11
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_அக்மதோவா&oldid=4117505" இலிருந்து மீள்விக்கப்பட்டது