உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டிலிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்கிந்தியத் தீவுகள், கரிபியன் ஆகியவற்றையும் காண்க

அண்டிலிசின் நிலப்படம்

அண்டிலிசு (Antilles, /ænˈtɪlz/; பிரெஞ்சில் Antilles; எசுப்பானியத்தில் Antillas; டச்சு மொழியில் Antillen ; போர்த்துக்கேயத்தில் Antilhas) தெற்கிலும் மேற்கிலும் கரிபியக் கடலையும் வடமேற்கில் மெக்சிகோ வளைகுடாவையும் வடக்கிலும் கிழக்கிலும் அத்திலாந்திக்குப் பெருங்கடலையும் எல்லையாகக் கொண்டுள்ள ஓர் தீவுக்கூட்டம் ஆகும்.

அண்டிலியத் தீவுகள் இரு சிறிய குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன: கியூபா, ஜமேக்கா, புவேர்ட்டோ ரிக்கோ, லா எசுப்பானியோலா (எயிட்டி, டொமினிக்கன் குடியரசாக பிரிக்கப்பட்டுள்ளது), கேமன் தீவுகள் போன்ற பெரியத் தீவுகளை உள்ளடக்கிய பெரிய அண்டிலிசு ; வடக்குப்புற காற்றெதிர் தீவுகள், தென்கிழக்கு காற்றுமுகத் தீவுகள், வெனிசுவேலாவின் வடக்கிலுள்ள காற்றெதிர் அண்டிலிசு ஆகிய தீவுக்குழுக்களை உள்ளடக்கிய சிறிய அண்டிலிசு. மேற்கிந்தியத் தீவுகளின்அங்கமாக பகாமாசு, துர்கசு கைகோசு தீவுகளை உள்ளடக்கிய லுகாயன் தீவுக்கூட்டம் இருந்தாலும் பொதுவாக அவை அண்டிலியத் தீவுகளில் சேர்க்கப்படுவதில்லை.[1]

புவியியல்படி, அண்டிலியத் தீவுகள் பொதுவாக வட அமெரிக்காவின் பகுதியாகக் கருதப்படுகின்றது. பண்பாட்டுப்படி, கியூபா, டொமினிக்கன் குடியரசு, புவர்ட்டோ ரிக்கோ – சில நேரங்களில் அண்டிலிசு முழுமையுமே – இலத்தீன் அமெரிக்காவினதாகக் கருதப்படுகின்றது; இருப்பினும் இந்த சமூகப்பொருளியல் பொதுமைப்படுத்தல் தவிர்க்கப்படுகின்றது. நிலவியல்படி, பெரிய அண்டிலிசு தலைநிலத்து இயல்பு கொண்ட பாறைகளாலானது; எதிராக சிறிய அண்டிலிசு பெரும்பாலும் இளம் எரிமலை அல்லது பவழப் பாறைகளால் ஆனவை.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. எசுப்பானிய என்கார்ட்டா கலைக்களஞ்சியம் போன்ற சில உசாத்துணைகளில் பகாமசு, அண்டிலிசில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. [1] பரணிடப்பட்டது 2009-10-04 at the வந்தவழி இயந்திரம்(எசுப்பானியம்). 2009-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டிலிசு&oldid=3522268" இலிருந்து மீள்விக்கப்பட்டது