உள்ளடக்கத்துக்குச் செல்

அகலாப்புழா ஏரி

ஆள்கூறுகள்: 11°30′45″N 75°39′23″E / 11.51250°N 75.65639°E / 11.51250; 75.65639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகலாப்புழா
நெல்லியடி கடவு பாலத்திலிருந்து அகலப்புழா, கீழரியூர்
அகலாப்புழா is located in கேரளம்
அகலாப்புழா
அகலாப்புழா
கேரளத்தில் அமைவிடம்
அமைவிடம்கொயிலாண்டி, கேரளம், இந்தியா
ஆள்கூறுகள்11°30′45″N 75°39′23″E / 11.51250°N 75.65639°E / 11.51250; 75.65639
முதன்மை வரத்துபய்யோலி கால்வாய்
முதன்மை வெளியேற்றம்முத்தம்பி ஆறு
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு5 km2 (1.9 sq mi)
கரை நீளம்122 km (14 mi)
Islands3

நெல்லியடி துருத்து

எடிசன் துருத்
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

அகலாப்புழா (Akalapuzha Lake) என்பது கேரளத்தின் கோழிக்கோட்டில் அமைந்துள்ள ஒரு ஏரியாகும். இந்த ஏரி கோயிலாண்டியில் உள்ள கணையங்கோட்டில் இருந்து கோரப்புழா ஆற்றின் ஒரு பகுதியாகப் நீண்டு, அகலாப்புழா வடமேற்கே சென்று பய்யோலி சிர்ப்பில் (பய்யோலி கால்வாய்) குட்டியடிப்புழாவை சந்திக்கிறது. [1]

சொற்பிறப்பியல்

[தொகு]

வில்லியம் லோகனின் மலபார் விவர ஏட்டின்படி, அகலப்புழா என்ற பெயர் 'அகலமுள்ள புழா' என்பதிலிருந்து வந்தது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது அகலாபுழாவிற்கு அருகிலுள்ள துறையூர் துறைமுக நகரமாக இருந்தது. மேலும் இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரை ஏரியில் நீர் போக்குவரத்து மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தது. இது கோழிக்கோடு குட்டநாடு என்று அழைக்கப்படுகிறது . [1]

நிலவியல்

[தொகு]

பய்யோலி கால்வாய் ( 200 மீட்டர்கள் [660 அடி] ) அகலப்புழா ஏரியை அதன் துணை ஆறான குட்டியடி புழாவுடன் இணைக்கிறது. இது கொயிலாண்டி மற்றும் பய்யோலி நகராட்சிகளுக்கும் திக்கோடி மற்றும் கீழரியூர் கிராமங்களுக்கும் இடையே அமைந்துள்ளது. இது முத்தம்பி ஆறாக கொரபுழா ஆற்றை நோக்கி பாய்கிறது.

இது கோவளம்-பேக்கல் நீர்வழிப்பாதையின் ஒரு பகுதியாகும்.[2] நெல்லியடி கடவு பாலம் அகலப்புழாவின் குறுக்கே கொயிலாண்டி நகராட்சியையும் கீழரியூர் கிராமத்தையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு 2000 சனவரி 30 அன்று அப்போதைய கேரள முதல்வர் திரு.இ. கே. நாயனார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

எஸ்.ஏ.ஆர்.பி.டி.எம் அரசு கல்லூரி கொயிலாண்டி அகலப்புழா கரையில் அமைந்துள்ளது.

சுற்றுலா

[தொகு]

இது படகு சேவைகள் மற்றும் ஓய்வில்ங்கள் கொண்ட ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.

பாம்பன் துறவு என்பது இப்பகுதியில் திரையுலகினருக்கு நன்கு தெரிந்த இடமாகும். தீவண்டி என்ற மலையாளத் திரைப்படம் வெளியானதில் இருந்து அகலப்புழா கவனம் பெறத் தொடங்கியது.[3]

இந்த ஏரி ஆழமற்றது. மட்டி உட்பட பல மீன்களின் வாழிடமாக உள்ளது. அகலப்புழா உப்பங்கழியில் வளர்க்கப்படும் கரிமீன் ( முத்துப்புள்ளி மீன் ) பெரும்பாலும் மாலை நேர உணவாகும்.

நெல்லியடி கடவு பாலத்தில் இருந்து தூண்டில்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது இப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களிடையே பிரபலமான செயலாகும்.

அகலாபுழா படகு முனையம் தே.நெ 66 இக்கு அருகில் உள்ளது. இந்த முனையத்தை பய்யோலி நகரத்திலிருந்து, 6 கி.மீ (3.7 மைல்), திக்கோடியில் இருந்து 5 கிமீ (3.1 மைல்), பிசாரிக்காவு கோயிலில் இருந்து 8 கிமீ (5.0 மைல்) தொலைவில் உள்ளது.

அருகிலுள்ள சுற்றுலா தலங்களில் பின்வருவன அடங்கும்:

  • மைக்ரோவேவ் காட்சி முனை 8 கி.மீ தொலைவில் உள்ளது. மலை உச்சியில் இருந்து படகு முனையம், ஏரியின் தோற்றம் போன்றவற்றைக் காண இயலும்
  • கடலூர் முனை கலங்கரை விளக்கம் அகலப்புழா படகு முனையத்திலிருந்து 7 கிமீ (4.3 மைல்)
  • திக்கோடி டிரைவ் இன் கடற்கரை 6 கிமீ (3.7 மைல்)
  • கொல்லம் சிரா 6 கிமீ (3.7 மை)
  • கொடிக்கால் கடற்கரைக் கைப்பந்து மைதானம் 6 கிமீ (3.7 மைல்)
  • கொல்லம், பரப்பள்ளி கடற்கரை 10 கிமீ (6.2 மை)
  • கப்பாடு கடற்கரை 18 கிமீ (11 மை)
  • கடலுண்டி பறவைகள் சரணாலயம்

அருகில் உள்ள தொடருந்து நிலையங்கள்

[தொகு]

அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்: திக்கோடி ( 7.5 கி.மீ [4.7 மை] ), பய்யோலி ( 8.5 கி.மீ [5.3 மை] ), கொய்லாண்டி தொடருந்து நிலையம் ( 11 கி.மீ [6.8 மை] ), வடகரா தொடருந்து நிலையம் ( 15 கி.மீ [9.3 மை] ), கோழிக்கோடு தொடருந்து நிலையம் ( 36 கி.மீ [22 மை] )

அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள்: கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ( 60 கி.மீ [37 மை] ), கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ( 63 கி.மீ [39 மை] )

அருகிலுள்ள கிராமங்களும் நகரங்களும்

[தொகு]

கீழரியூர் (கிழக்கு), துறையூர் (வடக்கு), பய்யோலி (வடமேற்கு), திக்கொடி (மேற்கு), விய்யூர் ( கொயிலாண்டி ) (மேற்கு).

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "ഇത് കോഴിക്കോടിന്‍റെ കുട്ടനാട്; കായല്‍ക്കാഴ്ചകളും ശിക്കാരവള്ളയാത്രയും മീന്‍രുചികളും". பார்க்கப்பட்ட நாள் 29 August 2022.
  2. https://www.onmanorama.com/travel/travel-news/2022/03/26/proposed-kerala-waterway-project-lost-steam.amp.html
  3. Keezhariyur, Ramachandran (13 February 2022). "How a Tovino film put Akalapuzha backwaters on the tourism map of Kerala". Malayala Manorama: pp. 1 இம் மூலத்தில் இருந்து 14 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220414093426/https://www.onmanorama.com/travel/kerala/2022/02/12/tovino-film-put-an-island-akalapuzha-tourism-map.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகலாப்புழா_ஏரி&oldid=4091604" இலிருந்து மீள்விக்கப்பட்டது