ஜுபிளி ஹில்ஸ்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஜூபிலி ஹில்ஸ் | |
---|---|
ஆள்கூறுகள்: 17°24′59″N 78°26′18″E / 17.416471°N 78.438247°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | ஐதராபாத் |
மெட்ரோ | ஐதராபாத் |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அகுஎண் | 500 033 |
வாகனப் பதிவு | TS |
மக்களவை (இந்தியா) தொகுதி | சிக்கந்தராபாத் |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | ஜூபிலி ஹில்ஸ் சட்டசபைத் தொகுதி |
இணையதளம் | telangana |
ஜூபிலி ஹில்ஸ் (Jubilee Hills) என்பது மேற்கு ஐதராபாத்தின், தெலங்காணாவில் உள்ள ஒரு வசதியான புறநகர்ப் பகுதியாகும். இது இந்தியாவில் மிக அதிக விலைக்கு விற்பனையாகும் வணிக மற்றும் குடியிருப்பு இடங்களில் ஒன்றாகும்.[1]
மாவட்டத்தின் பணக்கார வர்த்தகப் புறநகரான இதற்கிடையே பஞ்சாரா ஹில்ஸ் மற்றும் ஐதராபாத் தகவல் தொழில்நுட்ப மண்டலமான ஹைடெக் சிட்டி இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது [2][3][4]. இயற்கை நிலப்பரப்பு பெரும்பாலும் பாறை மற்றும் குடியேற்றங்கள் ஒப்பீட்டளவில் புதிய கட்டுமானங்களுக்கு உகந்ததாக அமைந்துள்ளது.
இதன் தென்கிழக்காக அமைந்துள்ள காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா, இந்தியாவின் மிகப் பெரிய நகர்ப்புற தேசிய பூங்காவில் ஒன்றாகும் (1.58 கிமீ 2).
வரலாறு
[தொகு]இப்பகுதியை உருவாக்கும் யோசனை 1963 இல் ஏற்பட்டது. 1967 ஆம் ஆண்டில், இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் பத்மசிறீ விருது வென்றவருமான, சல்லகலா நரசிம்மம் அவர்கள் "காலனியின் சரியான வளர்ச்சிக்கு உதவிடுமாறு" நாட்டின் குடியரசுத் தலைவரை கேட்டுக் கொண்டார். இவர் சென்னையில் திட்டமிட்டு பல காலனிகளை உருவாக்கியதில் சிறந்த நபராகக் கருதப்பட்டவர். அந்த நேரத்தில், ஜூபிலி ஹில்ஸ் வளர்ச்சி இல்லாமல் ஒரு மலைப்பாங்கான நிலப்பகுதியாக இருந்தது. திரு. சி. நரசிம்மம் அவர்களின் குடும்பம், ஜூபிளி ஹில்ஸில் முதல் வீட்டை கட்டியமைத்து, முதல் குடியிருப்பாளர்களாக மாறியது. 1980 ஆம் ஆண்டில், இப்பகுதியில் அடுத்தடுத்த வளர்ச்சியை ஆரம்பித்து 350 இடங்களில் 350 வீடுகள் கட்டப்பட்டன.
வணிக பகுதி
[தொகு]தெலுங்கு திரைப்படத் துறையின் தாயகமான திரைப்பட நகர் ஜூப்ளி ஹில்ஸின் மையமாக அமைந்துள்ளது, ராமாநாயுடு படப்பிடிப்பு அரங்கம், பத்மாலயா படப்பிடிப்பு அரங்கம் மற்றும் அன்னபூர்ணா படப்பிடிப்பு அரங்கம் போன்றவைகள் இங்கே அமைந்துள்ளன. இங்கே தெலுங்கு திரைப்பட தொழில்துறையின் நடிகர்கள், வணிகத் தொழிலாளர்கள் மற்றும் முன்னணி அரசியல்வாதிகள் ஆகியோரும் குடியிருக்கின்றனர்.
தெலங்காணா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக ஜூபிளி ஹில்ஸ் உள்ளது. தெலுங்கானா இராட்டிர சமிதி சமீபத்தில் தனது கட்சியின் தலைமையகத்தை இங்கு கட்டியுள்ளது, மேலும் தெலுங்கானா முதலமைச்சர் க. சந்திரசேகர் ராவ் இங்கு வசிக்கிறார். எல். வி. பிரசாத் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையகம் அமைந்துள்ளது. மேலும் ஆந்திர பிரதேச முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு ஆகியோர் இந்த பகுதியில் வசிக்கின்றனர். பிரசா ராச்யம் கட்சியின் தலைமையகம் காங்கிசு கட்சியுடன் இணைவதற்கு முன் சாலை எண் 45 இல் அமைக்கப்பட்டது. எப்போதாவது பெரிய அளவிலான அரசியல் பேரணிகள் இந்த இடத்தில் நடத்தப்படுகின்றன.
ஜூபிளி ஹில்ஸ் அதன் உயரமான குடியிருப்பு நிலைக்கு கூடுதலாக வணிக வளாகத்தின் நடுவே உள்ளது. SVM @ 36 போன்ற பல்வேறு இடங்களில் கேளிக்கை மற்றும் பந்து வீச்சுப் பகுதி அமைந்துள்ளது. இங்கு தாஜ் மஹால் விடுதி, டெஸ்டா ரோஸா, வெக்ஸ், கஃபே லாட்டே, பாரிஸ்டா, ஸ்டார்பக்ஸ், மற்றும் காபி டே போன்ற பல்வேறு விடுதிகள் மற்றும் கேஃப்கள் அமைந்துள்ளது. சியாஸ், கேட்வே மீடியா, ராதா ரியல் எஸ்டேட், லான்கோ குளோபல் சிஸ்டம்ஸ், பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ், ஐசிஐசிஐ மற்றும் எச்.டி.எஃப்.சி போன்ற பெருநிறுவனங்களின் தலைமையகம் மற்றும் அலுவலகங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன.
சுகாதார மற்றும் கல்வி
[தொகு]தென்னிந்திய இதய ஆரோக்கிய விழிப்புணர்வு மையமான சர்வதேச இலாப நோக்கற்ற நிறுவனமான இந்திய இதய சங்கத்தின் தலைமையிடம் இங்கு அமைந்துள்ளது..[5]
வழிபாட்டு இடங்கள்
[தொகு]சீதா ராமசாமி கோயில், சகன்னாதர் கோயில் மற்றும் பெத்தம்மா கோவில் ஆகியவை இப்பகுதியில் மிகவும் பிரபலமாக உள்ளன.
ஊடகம்
[தொகு]ஜூபிளி ஹில்ஸில் பெரிய ஊடகங்களின் அலுவலகங்கள் அமைந்துள்ளது. என்டிவி, யூப்டிவி, டிவி-9, டிவி5, டி செய்திகள், ஆர்.எம்.எஃப்டி ரெயின்போ ஊடகம், மகா டிவி, வி 6, சிவிஆர் செய்திகள், முதலியன ஜூப்ளி ஹில்ஸ் மற்றும் கவூரி ஹில்ஸில் அமைந்துள்ளன. பெரும்பான்மையான முன்னணி தெலுங்கு ஊடகங்களின் தலைமையிடகமாக ஜூப்ளி ஹில்ஸ் மாறிவிட்டது.
அழகு மற்றும் விளையாட்டு
[தொகு]இங்குள்ள வசதியான நகர்ப்புற வகுப்பினருக்கு ஜூபிளி ஹில்ஸ் சில அழகு நிலையங்களைக் கொண்டுள்ளது.
பொழுதுபோக்கு
[தொகு]கேபிஆர் தேசிய பூங்கா மற்றும் மனிதர்கலால் உருவாக்கப்பட்ட ஒரு குளம், தாமரை குளம், போன்றவை நடைபயிற்சி மற்றும் ஓடுபவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இப்பகுதியில் துர்கம் செருவு மற்றும் ஹக்கிம்பேட்டு குன்டா என்ற இரண்டு குறிப்பிடத்தக்க இயற்கை நீர் அமைப்புகள் உள்ளன . துர்கம் செருவில் படகு, மலையேற்றம், உணவகங்கள், மற்றும் ஒரு திறந்த வெளி டிஸ்கோ போன்றவைகள் பார்வையாளர்களுக்கு ஒரு முக்கிய இடமாக உள்ளது. சாலை எண் 37 இல் வர்த்தக மையத்திற்கு பின் அமைந்துள்ள இப்பகுதியில் கலைக்கூடம் ஒன்று அமைந்துள்ளது.
இப்பகுதியில் ஜூபிலி ஹில்ஸ் சர்வதேச விடுதி, பிலிம் நகர் விடுதி மற்றும் ஹைதராபாத் ஜிம்கானா ஆகிய பொழுது போக்கு இடங்கள் அமைந்துள்ளன. வெளிப்புற அளவிலான குளங்கள், உட்புற மற்றும் வெளிப்புற உணவகங்கள், வெளிப்புற திரைப்பட திரையரங்குகள், நூலகம், பெரும் அரங்குகள், விளையாட்டு மைதானங்கள், நீரூற்றுகள், பூப்பந்து மைதானம், சுவர்ப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம், மட்டைப்பந்து மைதானம் உள்ளிட்ட பிரத்யேக உறுப்பினர் மட்டுமே இணைந்துள்ள ஜூபிளி ஹில்ஸ் சர்வதேச விடுதி (JHIC) ஒன்று உள்ளது. பில்லியர்ட்ஸ் ஹால், இயற்கை பூங்காக்கள், மற்றும் பெரும் லாபி போன்றவைகளும் அடங்கியுள்ளன. தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார செல்வந்தர்களுக்கென ஜூபிளி ஹில்ஸ் சர்வதேச விடுதி (JHIC) உள்ளது.
ஜூபிலி ஹில்ஸ் சுங்கச்சாவடி அருகில் அமைந்துள்ள இந்து கோவிலான பெத்தம்மா கோயிலில் நடைபெறும் பொனாலு விழாவில் உள்ளூர் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
தாமரைக் குளம்
[தொகு]-
தாமரைக் குளத்தின் தோற்றம்
-
தாமரைக் குளத்தின் அமரும் இடம்
-
ஒரு செப்டம்பர் மாதத்தில் தாமரைக் குளத்தின் தோற்றம்
குறிப்புகள்
[தொகு]- ↑ http://www.cushwake.com/cwmbs3q08/pdf/hyderabad_retail_3q08.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.thehindubusinessline.com/features/smartbuy/tech-news/ecommerce-major-amazon-to-build-facility-in-hyderabad/article6313891.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-11-01. பார்க்கப்பட்ட நாள் 2019-04-30.
- ↑ http://www.thehindu.com/news/cities/Hyderabad/facebook-to-open-first-asia-office-in-india/article245437.ece
- ↑ "Archived copy". Archived from the original on 28 January 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-01-28.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- Indian Heart Association and Indian Heart Foundation Website: http://indianheartfoundation.org
- Blue Cross Hyderabad: http://www.bluecrosshyd.in/
- Ramanaidu Studios: https://web.archive.org/web/20120112054212/http://www.sureshproductions.com/tag/ramanaidu-studios/