உள்ளடக்கத்துக்குச் செல்

மூலமறியா தான்தோன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:42, 23 செப்டெம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20220923sim)) #IABot (v2.0.9.2) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மூலமறியா தான்தோன்றி (Idiopathic) என்ற பெயரடை மருத்துவத்தில் முதன்மையாக தானாகவே வெளிப்பட்ட அல்லது ஓர் தெளிவற்ற அல்லது அறியாத காரணி எனக் குறிப்பிடப் பயன்டுத்தப்படுகிறது. இதன் ஆங்கிலமூலம் இடியோதிக் என்ற சொல் கிரேக்க மொழியில் இடியோசு (ἴδιος) தானே என்றும் + பாதோசு (πάθος) துன்பம் என்றும்இணைந்து தானே தோன்றும் நோய் எனப் பொருள் தருகிறது. இது நோய் வகைப்பாட்டியலில் வரையறுக்கப்படும் ஓர் கலைச்சொல்லாகும். சில மருத்துவச் சூழல்களில் நோய்க்கான ஒருசில காரணங்கள் அறியப்பட்டிருக்கலாம்; இருப்பினும் குறிப்பிட்ட விழுக்காடு நோயாளிகளில் நோய்க்காரணம் உடனடியாக அறியப்படாமலோ வரையறுக்கப்படாமலோ இருக்கலாம். இத்தகைய நேரங்களில், மூல காரணம் அறியப்படாது மூலமறியா நோய்த்தன்மை எனப்படும்.

சில நோய்த்தன்மைகளுக்கு கூடுதல் விழுக்காடு நேரங்களில் மருத்துவ சமூகத்தால் மூலகாரணம் அறியப்படாமல் உள்ளது ;[1] வேறுசில நோய்த்தன்மைகளுக்கு மூலமறியா தான்தோன்றி விழுக்காடு குறைவாக உள்ளது.[2] மருத்துவ அறிவியல் ஆய்வுகள் ஒரு குறிப்பிட்ட நோய் அல்லது நோய்த்தன்மை குறித்து மேம்படும்போது மூலகாரணங்கள் அறியப்பட்டு மூலமறியா தான்தோன்றி விழுக்காடு குறைந்து வரும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Daskalakis N, Winn M (2006). "Focal and segmental glomerulosclerosis". Cell Mol Life Sci 63 (21): 2506–11. doi:10.1007/s00018-006-6171-y. பப்மெட்:16952054. https://archive.org/details/sim_cellular-and-molecular-life-sciences_2006-11_63_21/page/2506. 
  2. "Medical Encyclopedia: Idiopathic pulmonary fibrosis". MedlinePlus. பார்க்கப்பட்ட நாள் 2007-02-13.