உள்ளடக்கத்துக்குச் செல்

குளியல் தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:17, 7 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Arunnirmlஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
ஒரு குளியல் தொட்டி.

குளியல் தொட்டி என்பது, குளிப்பதற்குப் பயன்படும் ஒரு பொருத்துபொருள். இது தனியான குளியலறைகளிலோ அல்லது கழிப்பறையில் பிற பொருத்துபொருட்களுடன் சேர்ந்தோ இருக்கும். இத் தொட்டி தனியாக அல்லது பொழிப்பியுடன் (shower) இணைத்து அமைக்கப்படும்.

குளியல் தொட்டிகள், எனாமல் பூசப்பட்ட உருக்கு அல்லது வார்ப்பிரும்பு, கண்ணாடியிழைப் பிளாஸ்டிக்கு, பிளாஸ்டிக்கு மிக அரிதாக மரம் போன்ற பொருட்களால் செய்யப்படுகின்றன. வார்ப்பிரும்பினால் செய்யப்படும் தொட்டிகள் மீது எனாமல் பூசுவதற்கான முறையை இசுகாட்லாந்தில் பிறந்த அமெரிக்கரான டேவிட் டன்பார் பியூக் (David Dunbar Buick) என்பவர் கண்டுபிடித்தார்.

முற்காலத்தில் குளியல் தொட்டிகள் தனியான ஒரு தொட்டியாக மட்டுமே இருந்தன. ஆனால் இன்றைய குளியல் தொட்டிகளில் கழிவுநீரை அகற்றுவதற்கான குழாய் பொருத்தும் வசதி, வழிவு நீரை அகற்றுவதற்கான வசதி, குளிர்நீர், சுடுநீர் என்பவற்றை வழங்குவதற்கான நீர்வாய்கள் பொருத்தும் வசதி என்பவற்றைக் கொண்டு அமைகின்றன. அண்மைக் காலம் வரை குளியல் தொட்டிகள் ஏறத்தாழச் செவ்வக வடிவிலேயே அமைக்கப்பட்டன. தற்போது குளியல் தொட்டிகள் "அக்கிரிலிக்" என்னும் பிளாஸ்டிக்கு வகைப் பொருட்களில் செய்யப்படுகின்றன. "அக்கிரிலிக்" சூடாக்கு உருவமைப்பதற்கு உகந்தது என்பதால் இன்றைய குளியல் தொட்டிகள் பல்வேறு வடிவங்களிலும் செய்யப்படுகின்றன. முன்னர் குளியல் தொட்டிகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்திலேயே செய்யப்பட்டன. எனினும் இன்று குளியலறை அல்லது கழுவறைகளின் ஒட்டுமொத்தமான வடிவமைப்புத் தேவைகளுக்கு ஏற்பப் பல்வேறு நிறங்களிலும் குளியல் தொட்டிகள் உற்பத்தியாகின்றன.

குளியல் தொட்டிகளில் இரண்டு வகைப் பாணிகள் உள்ளன:

  • மேல்நாட்டு வகை: இதில் குளிப்பவர் உடம்பைப் படுத்த நிலையில் வைத்துக் குளிப்பார். இதனால் இவ்வகைக் குளியல் தொட்டிகள் ஆழம் குறைந்தவையாகவும் நீளமானவையாகவும் இருக்கின்றன.
  • கீழ் நாட்டு வகை: சப்பான் போன்ற நாடுகளில் பயன்படும் இவ்வகைக் குளியல் தொட்டியில் குளிப்பவர் இருந்த நிலையில் குளிப்பார். இதனால், தொட்டி ஆழமானதாகவும் நீளம் குறைந்ததாகவும் இருக்கும்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளியல்_தொட்டி&oldid=1873582" இலிருந்து மீள்விக்கப்பட்டது