உள்ளடக்கத்துக்குச் செல்

பாடுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்க பாடகர் ஹரி பெலேபோனட், 1954.
Édith Piaf, புகழ்பெற்ற பிரெஞ்ச் பாடகர் .

பாடுதல் என்பது குரல் மூலம் இசை ஓசையை எழுப்புவதாகும். பாடுதல் என்பது பேச்சின் கூட ஒலியிழைவு மற்றும் தாளம் கொண்டு வருவதாகும். பாடும் ஒருவர் பாடகர் அல்லது வாய்ப்பாடகர் என்று அழைக்கப்படுகிறார். பாடகர்கள் சங்கீதத்தை இசைக்கருவிகளுடனோ அல்லது இசைக்கருவிகள் இல்லாமலோ பாட முடியும். பாடலை தனியாகவோ அல்லது குழுவுடனோ அல்லது இசைக்குழுவுடனோ சேர்ந்து பாடலாம்.

ஒரு வழக்கமான அடிப்படையில் பயிற்சி செய்வதன் மூலம் ஒலிகள் இன்னும் தெளிவாகவும் மற்றும் வலுவாகவும் இருக்கும் என்று அறியப்படுகிறது.[1]. நிபுணத்துவம் கொண்ட பாடகர்கள் பொதுவாக பாரம்பரிய அல்லது ராக் இசை போன்ற ஒரு குறிப்பிட்ட இசை வகைகளை சுற்றி தங்கள் பணியை உருவாக்குகின்றனர். தொண்டை குரல் நாண்கள் பயன்படுத்தப்படும் சிறப்பு வழியில் பேசுவது பாடுவதிலிருந்து வேறுபட்டது.

குரல்

[தொகு]

நுரையிரல் அமைப்பினை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் குரலின் சிறப்பு அமையும். நுரையிரல் குரலின் காற்று விநியோக அமைப்பாகவும் துருத்தியாகவும் செயல்படுகிறது. குரல்நாண்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளே இழுக்கும் பொழுது தளர்ந்த நிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போது விறைப்பான நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று நாம் பேச முயற்சிக்கும் போது திரும்பி வந்து விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி குரல்நாண்களை அதிரச் செய்து சத்தத்தை உண்டாக்குகிறது.[2]

பாடும் திறன் வளர்த்துக்கொள்வது

[தொகு]

நன்றாக பாடும் திறமை வளர்த்துக்கொள்ள அனிச்சையாக செயல்படும் தசை தேவைப்படுகிறது. பாடுவதற்கு மிகவும் தசை வலிமை தேவையில்லை ஆனால் ஓர் உயர் நிலையில் தசை ஒருங்கிணைப்பு தேவை. தனிநபர்கள் கவனமாக மற்றும் முறையான இசை மற்றும் குரல் பயிற்சியின் மூலம் குரல்களை அபிவிருத்தி செய்ய முடியும். பாடகர்கள் பாடும் பொழுது என்ன விதமான ஒலி மற்றும் உணர்வினை எற்படுத்துகின்றோம் என்பதில் கவனமுடன் இருக்க வேண்டும்.[3]


பாடும் நுட்பம்

[தொகு]

பாடும் பொழுது பாடகர்கள் நுரையீரலில் உள்ள காற்றை பயன்படுத்துகின்றனர். நுரையீரலில் இருந்து வரும் காற்றை உதரவிதானம் கொண்டு கட்டுப்படுத்த முடியும். காற்று நானல் போன்ற குரல் வளையின் மேற்பகுதி வழியாக வரும், அதனை கட்டுப்படுத்துவதை பொறுத்து ஒலி குறிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எற்படும். இதனால் பாடகர்கள் "மூச்சு கட்டுப்பாடு" பயிற்சிக்கு நிறைய நேரம் செலவிடுகின்றனர்.

குரல் வீச்சு எல்லை

[தொகு]

பெரும்பாலான மக்கள் ஓர் அட்டமசுரத்தை தாண்டியும் பாட முடியும். நிறைய பாடிக்கொண்டிருக்கும் மக்கள் அநேகமாக இரண்டு அட்டமசுரத்தை தாண்டியும் பாட முடியும். குழந்தைகளின் குரல்கள் பெரும்பாலும் வல்லிசை என்று அழைக்கப்படுகின்றன.

குரல் எல்லை விரிவாக்கம்

[தொகு]

குரல் வளர்ச்சியின் ஒரு முக்கியமான இலக்கு ஒரு குரல் எல்லையின் இயற்கை வரம்புகளைக் அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் தரம் அல்லது நுட்பம் மாறாமல் பாடுவதாகும். இதன் காரணிகள்;

  • ஆற்றல் காரணி
  • இடைவெளி காரணி
  • ஆழம் காரணி

பாடுதல் தொழில்

[தொகு]

பாடகர்களின் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் பெரிய அளவில் மாறுபடும். பாடுவதற்கான ஊதியம் கச்சேரி, நிகழ்ச்சிகள், திரைப்பட போன்றவற்றிற்கு தகுந்தாற்போல் மாறும். பாடுதல் தொழிலில் வேலைவாய்ப்பு வருமானம் நிலையற்று இருக்கும் என்பதால், பாடகர்கள் பெரும்பாலும் மற்ற பாடும் தொடர்பான வேலைகளில் தங்கள் வருமானம் வர துணையாக வைத்துக்கொள்கின்றனர். ஆர்வம் கொண்ட பாடகர்கள் இசைத் திறன், ஓர் அருமையான மேடை மற்றும் நாடக உணர்வு கொண்டிருக்க வேண்டும்.

குரல் கற்பித்தல் நெறி

[தொகு]

குரல் கற்பித்தல் நெறி எனப்படுவது பாடுவதற்குக் கற்பிக்கப் பயிலும் கற்கை நெறியாகும். குரல் கற்பித்தல் நெறி என்ற அறிவியல் ரீதியான கலையானது நீண்டகால வரலாற்றைக்கொண்டது. இது முதன்முதலில் பண்டைய கிரேக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது இன்று வரை தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்துள்ளதோடு பல மாற்றங்களுக்கும் உள்ளாகியுள்ளது. குரல் கற்பித்தல் நெறியைக் கடைப்பிடிப்பவர்களுள் வாய்ப்பாட்டுப் பயிற்சியாளர்கள், கூட்டுப்பாடல் இயக்குநர்கள், வாய்ப்பாட்டு இசைக் கல்வியாளர்கள், ஆப்பெரா இயக்குநர்கள் மற்றும் ஏனைய பாடல் ஆசிரியர்களும் உள்ளடங்குவார்கள்.

குரல் கற்பித்தல் நெறியின் கோட்பாடுகள் முறையான வாய்ப்பாட்டுத் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வதில் ஓர் அங்கமாக உள்ளது.

குரல்சார்ந்த தொழில்நுட்பம்

[தொகு]

பாடுதலானது ஒழுங்கான குரல்சார்ந்த தொழில்நுட்பத்துடன் செய்யப்படும் பொழுது ஒன்றிணைந்த மற்றும் ஒருங்கிணைந்த செயலகவும் பாடுதலின் உடல் ரீதியான செயல்முறைகளைத் திறம்பட ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. வாய்ப்பாட்டு ஒலியை உற்பத்தி செய்வதில் நான்கு உடல் ரீதியான செயல்முறைகள் உள்ளடங்கியுள்ளன. அவை மூச்சுவிடல், பொனடேசன், குரல் ஒத்ததிர்வு, ஒலிப்பு என்பனவாகும். இந்தச் செயற்பாடானது பின்வரும் ஒழுங்குமுறையில் நடைபெறும்,

  1. மூச்சு எடுக்கப்படும்.
  2. குரல்வளையில் சத்தம் ஆரம்பிக்கப்படும்.
  3. குரல் ஒத்ததிர்விகள் சத்தத்தை பெற்றுக்கொண்டு அதன் மீது தாக்கம் செலுத்தும்.
  4. பேச்சு உறுப்புக்கள் அங்கீகரிக்கப்பட்ட அலகுகளுக்கு சத்தத்தை வடிவமைக்கும்.

இந்த நான்கு உடல் ரீதியான செயல்முறைகளும் கற்கும் பொழுது தனித்தனியாகப் பிரித்து கருத்திற்கொள்ளப்பட்டுப் பின்னர் நடைமுறைப் பயிற்சியில் ஓர் ஒருங்கிணைந்த செயற்பாடாக ஒன்றிணைக்கப்படுகின்றன. இச்செயற்பாட்டில் ஒருங்கிணைப்பு இல்லாததால் பல குரல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

பாடகர்கள்

[தொகு]

கர்நாடக இசை பாடகர்கள்

[தொகு]

திரைப்பட பின்னணிப் பாடகர்கள்

[தொகு]

வாய்ப்பாட்டு அல்லது குரல் இசையின் வகைகள்

[தொகு]

வாய்ப்பாட்டு அல்லது குரல் இசை பெரும்பாலும் பல வடிவங்கள் மற்றும் நடைகளின் ஒரு குறிப்பிட்ட இசையை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது கருநாடக இசை, மெல்லிசை, நாட்டுப்புற இசை, திரையிசை, பாப் இசை என வகையிடப்படுகிறது.

இந்திய பாடல் வகைகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Falkner, Keith, ed. (1983). Voice. எகுடி மெனுகின் music guides. London: MacDonald Young. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-356-09099-X. இணையக் கணினி நூலக மைய எண் 10418423.
  2. http://www.amarkkalam.net/t11070-topic
  3. Appelman, Dudley Ralph (1986). The science of vocal pedagogy: theory and application. Bloomington, Indiana: Indiana University Press. p. 434. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-35110-3. இணையக் கணினி நூலக மைய எண் 13083085.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடுதல்&oldid=4169865" இலிருந்து மீள்விக்கப்பட்டது