உள்ளடக்கத்துக்குச் செல்

45 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
(வேறுபாடு ஏதுமில்லை)

12:51, 26 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

45-ஆவது சதுரங்க ஒலிம்பியாடு
45th Chess Olympiad

45-ஆவது சதுரங்க ஒலிம்பியாதின் சின்னம்

45-ஆவது சதுரங்க ஒலிம்பியாதின் சின்னம்
காலம் 10–23 செப்டம்பர் 2024
போட்டியாளர்கள் 1,884 (975 திறந்த சுற்று, 909 பெண்கள் சுற்று)
அணிகள்
  • 197 (திறந்த)
  • 183 (பெண்கள்)
நாடுகள்
  • 195 (திறந்த)
  • 181 (பெண்கள்)
திறந்து வைத்தவர் அர்காதி துவோர்க்கவிச்
கொப்பறை எரித்தவர் ஜூடிட் போல்கர்
இடம் சைமா விளையாட்டு, மாநாட்டு அரங்கு (போட்டிகள்)
செனோ கொல்தாய் விளையாட்டரங்கு (தொடக்க விழா)
அமைவிடம் புடாபெசுட்டு, அங்கேரி
மேடை
திறந்த சுற்று
பெண்கள் சுற்று
சிறந்த ஆட்டக்காரர்கள்
திறந்த சுற்று
பெண்கள்
ஏனைய விருதுகள்
கப்பிரிந்தாசுவிலி கிண்ணம்  இந்தியா
முன்னையது சென்னை 2022
அடுத்தது தாசுகந்து 2026

45-ஆவது சதுரங்க ஒலிம்பியாது (45th Chess Olympiad, அங்கேரியம்: 45. sakkolimpia) என்பது பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பால் (பிடே) அங்கேரியின் புடாபெசுட் நகரில் 2024 செப்டம்பர் 10 முதல் 23 வரை ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பன்னாட்டு சதுரங்கக் குழுப் போட்டியாகும். 1926 இல் 2-ஆவது அதிகாரப்பூர்வமற்ற சதுரங்க ஒலிம்பியாது போட்டிகளை நடத்திய அங்கேரி அதற்குப் பிறகு முதல் தடவையாக ஒலிம்பியாது போட்டிகளை 2024 இல் நடத்தியது.[1]

மொத்தம் 1,884 போட்டியாளர்கள் இதில் பங்குபற்றினர்: இவர்களில் 975 பேர் திறந்த சுற்றிலும், 909 பேர் பெண்கள் சுற்றிலும் விளையாடினர். 195 நாடுகளில் இருந்து 197 பதிவு செய்யப்பட்ட குழுக்கள் திறந்த சுற்றில் பங்குபற்றின, பெண்கள் சுற்றில் 181 நாடுகளில் இருந்து 183 குழுக்கள் பங்குபற்றின.[2] இரு பிரிவுகளும் குழுப் பங்கேற்பு சாதனைகளை நிகழ்த்தின. பெண்கள் நிகழ்வில் பல தேசிய அணிகள் முதற்தடவையாகப் பங்கேற்றன. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பல வீரர்கள் விளையாட முடிவு செய்தனர், இது பிடே மகளிர் ஆணையத்தால் நடத்தப்படும் "தேசியப் பெண் குழு முன்முயற்சி", "செஸ்மொம்" (ChessMom) நிகழ்ச்சிகளின் விளைவாகும். பாலின சமத்துவத்தை உறுதி செய்தல், குழந்தைப் பராமரிப்பு வழங்குவதை ஆதரித்தல் ஆகியன இவற்றில் சில.[3] கூடுதலாக, இரண்டு பிரிவுகளிலும் ஏதிலி அணிகள் பங்கேற்ற முதல் சதுரங்க ஒலிம்பியாது இதுவாகும். பிடேயின் அகதிகளுக்கான முன்முயற்சியின் மூலம் "பாதுகாப்பிற்கான சதுரங்கம்" முயற்சிகள் இதற்குக் காரணம்.[4] நிகழ்வின் தலைமை நடுவராக சிலோவாக்கியாவின் பன்னாட்டு நடுவர் இவான் சிரோவி இருந்தார்.

2022 பெண்கள் போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்ற பிறகு, சதுரங்க ஒலிம்பியாதில் நாட்டின் முதல் ஒட்டுமொத்த வெற்றிகளான திறந்த, மற்றும் பெண்கள் ஆகிய இரண்டிலும் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது. 2018 க்குப் பிறகு ஒரே நாடு இரண்டு பிரிவுகளிலும் தங்கம் வென்றது இதுவே முதல் முறையாகும். மேலும் முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியா அவ்வாறு செய்த மூன்றாவது நாடு ஆனது. இந்தியாவின் குகேசு தொம்மராஜு 3056 என்ற செயல்திறன் மதிப்பீட்டில் (10 புள்ளிகளில் 9 புள்ளிகளைப் பெற்றார்) திறந்த நிகழ்வில் ஒரு தனிப்பட்ட வீரருக்கான அதிகபட்ச செயல்திறனைக் கொண்டிருந்தார். இசுரேலிய வீராங்கனையான தானா கொச்சாவி பெண்கள் நிகழ்வில் 2676 என்ற செயல்திறன் மதிப்பீட்டில் மிக உயர்ந்த தனிப்பட்ட செயல்திறனைக் கொண்டிருந்தார் (இவர் சாத்தியமான 8 புள்ளிகளில் 8 புள்ளிகளைப் பெற்றார்).

95வது பிடே மாநாடும் இந்த ஒலிம்பியாது போட்டியின் போது நடந்தது, அதில் பிடே-யின் பொதுச் சபை உருசிய, பெலாருசிய வீரர்கள் மீதான தடையை உறுதிசெய்தது.[5]

பங்கேற்ற அணிகள்

[தொகு]
45-ஆவது ஒலிம்பியாதில் பங்கேற்ற அணிகள்

திறந்த சுற்று முடிவுகள்

[தொகு]
இறுதி நிலைகள்[6]
# நாடு வீரர்கள் சராசரி
தரமதிப்பீடு
ஆ.பு dSB
1st  இந்தியா குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன், விதித், அரிகிருஷ்ணா 2753 21 Does not appear
2nd  ஐக்கிய அமெரிக்கா கருவானா, சோ, டொமிங்கெசு, அரோனியான், ரொப்சன் 2757 17 395.0
3rd  உஸ்பெகிஸ்தான் அப்துசத்தோரவ், யக்குபோயெவ், சிந்தாரொவ், வொக்கீதொவ், வகீதொவ் 2690 17 387.0
4  சீனா திங் லிரேன், வெய் யீ, யூ யாங்கி, பூ சியாங்கி, வாங் யூ 2724 17 379.5
5  செர்பியா பிரெத்கி, சரானா, இந்திச், மார்க்குசு, இவீச் 2649 17 360.5
6  ஆர்மீனியா மர்த்திரோசியான், சாந்த் சார்க்சியான், சர்கீசியான், ஒவ்கானிசியான், கிரிகோரியான் 2645 17 335.0
7  செருமனி கெய்மர், கொலார்சு, புளூபாம், தோன்சென்கோ, சுவான் 2667 16 354.5
8  அசர்பைஜான் சுலைமான்லி, அபாசொவ், மமேதொவ், மமெதியாரொவ், முராத்லி 2657 16 351.0
9  சுலோவீனியா பெதோசியெவ், தெம்சென்கோ, சூபெல்ச், செபேனிக், லாவ்ரென்சிச் 2576 16 341.5
10  எசுப்பானியா சிரோவ், அந்தோன் கிஜாரோ, பலேஜோ பொன்சு, பிச்சோட், சந்தோசு லத்தாசா 2654 16 339.0

பெண்கள் பிரிவு முடிவுகள்

[தொகு]
இறுதி நிலைகள்[7]
# நாடு வீரர்கள் சராசரி
தரமதிப்பீடு
ஆ.பு dSB
1st  இந்தியா ஹரிகா, வைசாலி, திவ்யா, வந்திகா, தானியா 2467 19 Does not appear
2nd  கசக்கஸ்தான் அசபாயெவா, கமலிதேனொவா, பலபாயெவா, நுர்மான், கைர்பெக்கோவா 2373 18 Does not appear
3rd  ஐக்கிய அமெரிக்கா தொக்கிர்சோனவா, யிப், குரூஷ், லீ, சத்தோன்சுக்கி 2387 17 418.0
4  எசுப்பானியா கதெமால்சாரியே, கார்சியா மார்ட்டின், வேகா, மத்னாத்சே, கல்செட்டா ரூயிசு 2375 17 402.0
5  ஆர்மீனியா எல். மிக்கிரிச்சியான், எம். மிக்கிரிச்ச்யான், டேனியலியன், சர்கிசியான், கபோயான் 2363 17 391.0
6  சியார்சியா சக்னீத்சே, ஜவாக்கிசுவிலி, பத்சியாசுவிலி, கொத்தெனாசுவிலி, மெலியா 2462 17 388.0
7  சீனா சூ ஜைனர், சோங் யூக்கின், குவோ கி, நி சுகுன், லூ லியோயி 2416 16 434.0
8  உக்ரைன் ஒசுமாக், உசேனினா, பூக்சா, கபோனென்கோ, தொலுகானோவா 2400 16 355.5
9  போலந்து கசுலீன்சுகயா, சோக்கோ, மால்த்சேவ்சுகயா, கியோல்பாசா, சிலிவிக்கா 2422 16 352.0
10  பல்கேரியா இசுடெபானோவா, சலிமோவா, ராதேவா, கிராசுதேவா, பெய்சேவா 2355 16 348.5

மேற்கோள்கள்

[தொகு]
  1. Peter Doggers (15 December 2020). "Next Chess Olympiad In 2022; Budapest Wins Bid For 2024". Chess.com. Archived from the original on 28 July 2022. பார்க்கப்பட்ட நாள் 5 August 2022.
  2. "National chess team leave for Hungary today". Daily Observer. 9 September 2024. Archived from the original on 10 September 2024. பார்க்கப்பட்ட நாள் 10 September 2024.
  3. "Women and Records in the spotlight at 45th Chess Olympiad". FIDE. 26 August 2024. பார்க்கப்பட்ட நாள் 11 September 2024.
  4. "Refugee Team ready to compete on global stage at Chess Olympiad". FIDE. 7 June 2024. Archived from the original on 10 September 2024. பார்க்கப்பட்ட நாள் 10 September 2024.
  5. "Russia and Belarus teams suspended from FIDE competitions". FIDE. 16 March 2022. Archived from the original on 10 September 2024. பார்க்கப்பட்ட நாள் 10 September 2024.
  6. "45th Olympiad Chennai 2024 Open – Final Ranking after 11 Rounds". Chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 22 September 2024.
  7. "45th Olympiad Chennai 2024 Open – Final Ranking after 11 Rounds". Chess-results.com. Archived from the original on 22 September 2024. பார்க்கப்பட்ட நாள் 22 September 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]