ஏஎம்டி கே5
ஏஎம்டி கே5 மையச் செயலியே ஏஎம்டி நிறுவனத்தால் முற்றுமுழுதாக முதன்முறையாக வடிவமைக்கப்பட்டதாகும். இது மார்ச் 1996 இல் அறிமுகம் செய்யப்பட்டது. இது இண்டெல் நிறுவனத்தில் பெண்டியம் மையச் செயலியுடன் போட்டியிடுவதற்கென வடிவமைக்கப்பட்டதாகும். இது 1995 இல் வெளியிடத்தீர்மானிக்கப்பட்ட பொழுதும் வடிவமைப்புச் சிக்கல்களினால் 1996 ஆம் ஆண்டுவரை இது வெளிவரவில்லை. இண்டெல் நிறுவனம் போன்று அனுபவம் இல்லாததினால் வடிவமைப்புச் சிக்கல்கள் இருந்தாலும் இறுதியில் பெண்டியம் மையச் செயலியுடன் ஒப்பிடக்கூடிய வினைத்திறனுடையதாக வெளிவந்தது..
தொழில்நுடபத் தகவல்கள்
[தொகு]குறைந்த அறிவுத்தல்களுடன் இயங்கும் கணினிக் குறியீட்டு முறையிலான மையச் செயலியானது x86 கணினி அறிவுறுத்தல்களுடன் ஒத்திசைவான முறையில் உருவாக்கப்பட்டது. இதன் எல்லா மாதிரிகளும் 4.3 மில்லியன் திரான்சிஸ்டர்களை உள்ளடக்கியிருந்தது. கே5 மையச் செயலியானது இண்டல் பெண்டியம் MMX கட்டளைக் கொண்டதல்ல. இண்டல் நிறுவனம் ஆனது 1997 இல் இருந்து MMX ரக மையச் செயலிகளை வழங்க ஆரம்பித்தது.
வினைத்திறன்
[தொகு]இந்தச் சிப்பானது பல நுட்பங்களைக் கொண்டிருந்தாலும் சந்தைப் படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் இண்டல் பெண்டியம் புரோசருடன் ஒப்பிடுகையில் மையச் செயலியின் துடிப்பு வேகம் குறைவானதாலும் பெரும்பாலான கணினித் தயாரிப்பாளர்களைக் கவரவில்லை. எனினும் இது சைரிக்ஸ் Cyrix 6x86 ரக மையச் செயலியைவிட வினைத்திறனாகவே இயங்கியது.