உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:நாசவேலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியாவில், விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியத் திட்டத்தின் நோக்கத்தைத் தடுக்க அல்லது தோற்கடிக்க வேண்டும் என்று வேண்டுமேன்றே தொகுத்தலில் ஈடுபடும் செயலானது காழ்ப்புணர்ச்சி அல்லது நாசவேலை எனப்படுகிறது.

இது, விக்கிப்பீடியாவின் முக்கிய உள்ளடக்கக் கொள்கைகளான நடுநிலை நோக்கு , புத்தாக்க ஆய்வு கூடாது, மெய்யறிதன்மை ஆகியவற்றை பொருட்படுத்தாமல் வேண்டுமென்றே கலைக்களஞ்சிய உள்ளடக்கத்தை தீங்கிழைக்கும் வகையில் நீக்குவது அல்லது மாற்றுவது ஆகியவற்றை உள்ளடக்குகிறது. ஏதேனும் ஒரு பக்கத்தில் (உரையாடல் பக்கம் உட்பட) பொருத்தமற்ற ஆபாசங்கள் அல்லது கொச்சையான நகைச்சுவைகளைச் சேர்ப்பது, கொள்கைகளுக்குப் புறம்பாகப் பக்கங்களை வெறுமையாக்குவது மற்றும் ஒரு பக்கத்தில் அர்த்தமற்ற தகவல்களைச் செருகுவது போன்ற பல நாசவேலை வடிவங்கள் உள்ளன. தவறான பெயர்களில் கட்டுரை அல்லது பயனர் பெயர் உருவாக்கம் மற்றும் ஐபி முகவரிகளைப் பயன்படுத்துவதும் காழ்ப்புணர்ச்சியாக இருக்கலாம்.

நாசவேலைகளின் வகைகள்

[தொகு]

மீளமைத்தல்

[தொகு]

விளம்பரம், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும்/அல்லது துன்புறுத்தல் போன்ற சமீபத்திய திருத்தங்களை மீளமைத்தல் (தெரியாமல்/தவறுதலாகச் செய்யப்பட்டதைத் தவிர).

பக்கம் நகர்த்தும் காழ்ப்புணர்ச்சி

[தொகு]

பக்கங்களின் பெயர்களை சீர்குலைக்கும் அல்லது பொருத்தமற்ற பெயர்களாக மாற்றுதல். தானாக உறுதிப்படுத்தப்பட்ட அல்லது உறுதிப்படுத்தப்பட்ட பயனர்கள் மட்டுமே பக்கங்களை நகர்த்த முடியும். இதன் காரணமாக, இந்த வகையைச் சேர்ந்த நாசக்காரர்கள் தானாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையைப் பெற பெரும்பாலும் "ஊடாளிக் (பொய்க்) கணக்குகளை" கணக்குகளை உருவாக்குவார்கள்.

உரையாடல் பக்கம்

[தொகு]

பிற பயனர்களின் கருத்துகளை அகற்றுவது, திருத்துவது அல்லது புண்படுத்தும் கருத்துகளைச் சேர்த்தல். இருப்பினும், காழ்ப்புணர்ச்சி, உள் ஸ்பேம் அல்லது துன்புறுத்தல் அல்லது தனிப்பட்ட தாக்குதலைக் கொண்ட வெற்றுக் கருத்துகளை ஏற்கலாம். கையொப்பமிடாத கருத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. பயனர்கள் தங்கள் சொந்த பயனர் பேச்சுப் பக்கங்களிலிருந்து கருத்துகளை நீக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள் (எச்சரிக்கைச் செய்திகளை சமூக ஒப்புதலோடு நீக்க வேண்டும்).

துன்புறுத்தல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் - வித்தியாசம்

[தொகு]

விக்கிப்பீடியாவில் தனிப்பட்ட தாக்குதல் மற்றும் துன்புறுத்தல் அனுமதிக்கப்படாது. பயனர் பக்கத்தை நாசப்படுத்துதல் அல்லது தனிப்பட்ட தாக்குதலை ஒரு கட்டுரையில் செருகுவது ஆகிய துன்புறுத்தல்கள் நாசவேலையாக இருந்தாலும், அவை காழ்ப்புணர்ச்சிகளைப் போல் அல்லாது வித்தியாசமாகக் கையாளப்பட வேண்டும்.

காழ்ப்புணர்ச்சியை எவ்வாறு கண்டறிவது

[தொகு]

காழ்ப்புணர்ச்சியைக் கண்டறிவதற்கான பயனுள்ள வழிகள் பின்வருமாறு:

  • சந்தேகத்திற்கிடமான திருத்தங்களைக் கண்டறிய வடிப்பான்களுடன் அண்மைய மாற்றங்களின் இணைப்பைப் பயன்படுத்தி அண்மைய மாற்றங்களைக் கண்காணித்தல்,
  • கண்காணிப்புப் பட்டியலைத் தொடர்ந்து கண்காணித்தல்.
  • ஒரு கட்டுரையின் திருத்த வரலாற்றில் சமீபத்திய சந்தேகத்திற்கிடமான திருத்தங்களைச் சரிபார்க்கலாம். திடீரென அதிகமாகக் குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ சரிபார்க்கலாம். மேலும், தகவல் இற்றைக்கான அளவிற்கும் தொகுப்புச் சுருக்கத்திற்கும் வேறுபாடு இருக்கு போது. (எ.கா. 100 பைட்டுகளை அகற்றும் போது "அச்சுப் பிழையை சரிசெய்தல்") என்பது அது காழ்ப்புணர்ச்சியின் அறிகுறியாகும்.