உள்ளடக்கத்துக்குச் செல்

பிலெசிக் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலெசிக் மாகாணம்
Bilecik ili
துருக்கியில் பிலெசிக் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் பிலெசிக் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிகிழக்கு மர்மாரா
துணைப் பகுதிபர்சா
அரசு
 • தேர்தல் மாவட்டம்பிலெசிக்
பரப்பளவு
 • மொத்தம்4,307 km2 (1,663 sq mi)
மக்கள்தொகை
 (2018)[1]
 • மொத்தம்2,23,448
 • அடர்த்தி52/km2 (130/sq mi)
இடக் குறியீடு0228
வாகனப் பதிவு11

பிலெசிக் மாகாணம் (Bilecik Province, துருக்கியம்: Bilecik ili ) என்பது துருக்கியின் நடுமேற்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தின் அண்டை மாகாணங்களாக மேற்கில் பர்சா, வடக்கே கோகேலி மற்றும் சாகர்யா, கிழக்கில் போலு, தென்கிழக்கில் எஸ்கிசெஹிர், தெற்கே கட்டாஹ்யா போன்றவை அமைந்துள்ளன. மாகாணத்தின் பரப்பளவானது 4,307  கிமீ 2 என்றும், மக்கள் தொகையானது 225,381 என்றும் உள்ளது. மாகாணத்தின் பெரும்பாலான பகுதியானது மர்மாரா பிராந்தியத்தில் அமைந்துள்ளது. ஆனால் மாகாணத்தின் கல்பசாரி மற்றும் சாட், அன்ஹிசார், யெனிபஜார் போன்ற மாவட்டங்கள் கருங்கடல் பிராந்தியத்தில் உள்ளன. போசாயிக் மற்றும் சாட் ஆகிய மாவட்டங்களின் சிறிய பகுதிகள் மத்திய அனடோலியா பிராந்தியத்திலும், போஜாய்கின் சிறிய பகுதியானது ஏஜியன் பிராந்தியத்திலும் உள்ளன.

மாவட்டங்கள்

[தொகு]

பிலெசிக் மாகாணம் 8 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):

  • பிலெசிக்
  • போசூயூக்
  • கோல்பசாரா
  • இஷிசர்
  • உஸ்மானெலி
  • பசரியேரி
  • சோகுட்
  • யெனிபஜார்

வரலாறு

[தொகு]

கிமு 3000 ஆம் ஆண்டிலேயே இப்பகுதியில் மக்கள் வசித்து வந்தனர். மேலும் இப்பகுதியானது இட்டைட்டு (கி.மு. 1400-1200 ), பிரிகியர்களின் (கி.மு. 1200-676 ), லிடியா (கி.மு. 595-546 ), பாரசீகர்கள் (கி.மு. 546–334 ), உரோமானியர்கள் (கி.பி 74–395), பைசாந்தியர்கள் போன்ற பல நாகரிகங்கள் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.

1299 ஆம் ஆண்டில் உதுமானியப் பேரரசால் நிறுவப்பட்ட சிறிய நகரமான சாட் என்பதும் இப்பகுதியில் உள்ளது, மேலும் இது முக்கியமான தொல்லியல் மற்றும் பண்பாட்டு கலைப்பொருட்களின் அமைவிடமாகும்.

காணத்தக்க தளங்கள்

[தொகு]

சாத்தில் உள்ள எத்னோகிராஃபிக்கல் அருங்காட்சியகம்.

பிலெசிக் நகரம் பல புதுப்பிக்கபட்ட துருக்கிய வீடுகளுக்கு பிரபலமானது.

மாகாணத்தில் காணத்தக்க வேறு சில தளங்களாக: உஸ்மான் காசி மற்றும் ஓர்ஹான் காசி பள்ளிவாசல்கள், சேஹ் எடெபாலி மற்றும் மால் ஹதுன் கல்லறைகள், கோப்ரேலி மெஹ்மத் பாஷா பள்ளிவாசல், கோப்ராலி கேரவன்செராய், கப்லிகயா கல்லறைகள், ரெஸ்டெம் பாஷா பள்ளிவாசல் மற்றும் கோலலன் பாவ்.

காட்சியகம்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.