மகிசாசூரன்
மகிஷாசூரன் (மகிடாசூரன்) (Mahishasura) தேவர்களின் எதிரிகளான அசுர குலத்தினன் ஆவார். எருமையை வாகனமாகக் கொண்ட மகிஷாசூரனின் குலகுரு சுக்கிராச்சாரி ஆவார். புராணங்களில் குறிப்பாக தேவி மகாத்மியம் எனும் புராண நூலில்[1] மகிஷாசூரனின் வீரமும், வீழ்ச்சியும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடுந்தவம் நோற்று பிரம்மனிடம் ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு இறப்பு நேர வேண்டும் என்ற வரத்தை பெற்ற மகிஷாசூரன், தொடர்ந்து இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப் படுத்துகிறான். தேவர்கள் மற்றும் முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, பார்வதி தேவி துர்க்கையாக அவதரித்து மகிஷாசூரனை வீழ்த்தியதாக புராணங்கள் கூறுகின்றன. மகிஷாசூரனை வீழ்த்தியதால் துர்க்கைக்கு மகிஷாசூரமர்தினி எனும் சிறப்புப் பெயராயிற்று.
மகிஷாசூரனை துர்க்கை வீழ்த்திய கதைகள் பௌத்த மற்றும் சமண சாத்திரங்களிலும் உள்ளது.[2][3]
மகிஷாசூரன் ஆண்ட இராச்சியத்தின் பெயர் மகிசா இராச்சியம் ஆகும்.
தோற்றம்
[தொகு]அரக்கர்குல தலைவன் ரம்பா ஒரு எருமையை மணம் முடித்து அவர்களிருவருக்கும் பிறந்த குழந்தையே மகிஷாசுரன் ஆவான். [சான்று தேவை] ஆணவம் தலைக்கேறிய காரணத்தால் தேவர்கள் மீது அவன் படையெடுக்க அவனை துர்காதேவி வதம் செய்தாள். மகிஷாசுரனை அழித்ததால் துர்க்கை, மகிஷாசுர மர்த்தினி என்று அழைக்கப்படுகிறாள்.
திருவிழாக்கள்
[தொகு]மகிஷாசூரனை வதைத்த துர்க்கையை போற்றும் விதமாக மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை எனும் பெயரில் ஒன்பது நாள் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவின் மைசூரில் தசரா எனும் பெயரில் ஒன்பது நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் ஊரில் ஒன்பது நாள் தசரா திருவிழா நவராத்திரியின் போது வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[4]
மகிஷாசூரனின் தங்கை
[தொகு]கேரளாவில் மகிஷாசூரனின் தங்கையாக மகிஷி என்ற அசுரப் பெண் கருதப்படுகிறாள். மகிஷாசூரனின் மறைவிற்குப் பின் தேவர்களுக்கு எதிராக போரிட்ட மகிஷியைப் போரில் அய்யப்பன் வென்று கொன்றதாக சபரிமலை தல புராணத்தில் கூறப்படுகிறது.
படக்காட்சிகள்
[தொகு]-
மகிஷாசூரனுக்கும் துர்கைக்கும் இடையே நடக்கும் போர் ஓவியம்
-
மகிஷாசூரமர்தனி, விருபாட்சர் கோயில்
-
சாமுண்டி மலையில் மகிஷாசூரனின் சிற்பம், மைசூர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Devi Mahatmyam". Archived from the original on 2016-06-21. பார்க்கப்பட்ட நாள் 2016-06-07.
- ↑ P. 112 Buddhist Art & Antiquities of Himachal Pradesh, Upto 8th Century A.D. By Omacanda Hāṇḍā
- ↑ Jinmanjari: Contemporary Jaina Reflections, Volumes 17-22 By Bramhi Society
- ↑ குலசேகரபட்டிணத்தில் மகிஷாசூரன் வதம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
- Hindu Goddesses: Vision of the Divine Feminine in the Hindu Religious Traditions, David Kinsley. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0379-5)