கண்டம்
கண்டம் (ⓘ) (Continent) எனப்படுவது தொடர்ச்சியான மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறிக்கும். புவி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை எந்தவொரு குறிப்பிட்ட காரணங்களால் அன்றி மரபுசார்ந்தே அடையாளப்படுத்தப்படுகின்றன. மிகப் பெரியதிலிருந்து சிறியதாக இவை: ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்டிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகும்.[1]
நிலவியல் படிப்பில் கண்டங்கள் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகள் மூலமாக விவரிக்கப்படுகின்றன. முன்னதாகக் கண்டப்பெயர்ச்சி என அறியப்பட்ட கண்டங்களின் நகர்வுகளையும் மோதல்களையும் பிரிகைகளையும் ஆய்வுறும் துறையே தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு கல்வியாகும்.
வரையறைகளும் செயல்பாடுகளும்
[தொகு]மரபுப்படி, "கண்டங்கள் பெரும் நீர்பரப்புகளால் பிரிக்கப்பட்ட, பெரிய, தொடர்ச்சியான, தனித்த நிலத்தொகுதிகளாகும்."[2] பொதுவாக மரபுப்படி அறியப்படும் ஏழு கண்டங்கள் அனைத்துமே நீர்பரப்புகளால் பிரிக்கப்பட்ட தனித்த நிலப்பரப்புகள் அல்ல. "பெரிய" என்ற அளவுகோள் தன்னிச்சையான வகைப்பாடாகும்: 2,166,086 சதுர கிலோமீட்டர்கள் (836,330 sq mi) புறப்பரப்பளவுள்ள கிறீன்லாந்து உலகின் மிகப்பெரும் தீவாகக் கருதப்படுகிறது; ஆனால் 7,617,930 சதுர கிலோமீட்டர்கள் (2,941,300 sq mi) புவிப்பரப்பளவுள்ள ஆத்திரேலியா ஒரு கண்டமாகக் கருதப்படுகிறது. அதே போல, தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அளவுகோலும் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு கண்டத் திட்டுகளும் பெருங்கடல் தீவுகளும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன; வடக்கு, தெற்கு அமெரிக்க கண்டங்களும் இக்கோட்பாட்டிற்கு முரணாக அமைந்துள்ளன. ஐரோவாசியாவும் ஆபிரிக்காவும் எந்தவொரு இயற்கையான நீர்ப்பரப்பாலும் பிரிக்கப்படாதபோதும் இரண்டு கண்டங்களாகக் கருதப்படுகின்றன. தொடர்ச்சியான நிலப்பகுதியான ஐரோப்பாவும் ஆசியாவும் இரு கண்டங்களாகப் பிரிக்கப்படும்போது இந்த முரண் இன்னும் தெளிவாகிறது. புவியின் நிலப்பகுதிகள் ஒரே தொடர்ச்சியான உலகப் பெருங்கடலால் சூழப்பட்டிருக்க இதுவம் பல பெருங்கடல்களாகக் கண்டங்களாலும் பிற புவியியல் அளவீடுகளாலும் பிரிக்கப்பட்டுள்ளது.[3][4] கண்டங்கள் சிலநேரங்களில் முதன்மை நிலப்பரப்புகளிலிருந்தும் விரிவுபடுத்தப்பட்டு உலகின் அனைத்து நிலப்பகுதிகளும் ஏதேனும் ஒரு கண்டத்தின் அங்கமாகக் கொள்ளப்படுகிறது.[5]
கண்டங்களின் பரப்புக்கள்
[தொகு]கண்டம் என்பதன் குறுகிய பொருளாகத் தொடர்ச்சியான[6] நிலப்பரப்பாக அல்லது பெருநிலப்பகுதியாக கொள்ளலாம்; கண்டத்தின் எல்லைகளாகக் கடற்கரைகளும் நில எல்லைகளும் அமைந்தன. இந்தக் கோட்பாட்டின்படி ஐரோப்பிய கண்டம் (சிலநேரங்களில் "தி கான்டினெட்") என்பது ஐரோப்பிய பெருநிலப் பகுதியைக் குறிப்பிடுவதாக அமைந்தது; இதில் தீவுகளான பெரிய பிரித்தானியா, அயர்லாந்து, ஐசுலாந்து போன்றவை நீக்கப்பட்டன. அதேபோல ஆத்திரேலியக் கண்டம் என்ற சொல் ஆத்திரேலியப் பெருநிலப் பகுதியை மட்டுமே குறிக்க தாசுமேனியா , நியூ கினி போன்ற தீவுகள் விலக்கப்பட்டன. இக்கோட்பாட்டின் தொடர்ச்சியாக, ஐக்கிய அமெரிக்கக் கண்டம் என்ற சொல்லாட்சி வட அமெரிக்காவின் மத்தியில் தொடர்ச்சியாக உள்ள 48 மாநிலங்களையும் (கனடாவால் பிரிக்கப்பட்டுள்ள) வடமேற்கிலுள்ள அலாஸ்காவையும் மட்டுமே உள்ளடக்கி அமைதிப் பெருங்கடலில் உள்ள ஹவாய் தீவை விலக்கி வரையறுக்கிறது.
நிலவியல் அல்லது புவியியல் அணுகுமுறையில், கண்டம் தொடர்ச்சியான நிலப்பகுதியைத் தவிர ஆழமற்ற நீரில் மூழ்கிய அண்மைப்பகுதிகளையும் (கண்டத் திட்டு)[7] அப்பரப்பிலுள்ள தீவுகளையும் (கண்டத் தீவுகள்), உள்ளடக்குகிறது;இவையும் கண்டத்தின் கட்டமைப்பின் அங்கமாக விளங்குகின்றன.[8] இதன்படி கடற்கரைகள் கடலின் ஏற்றத் தாழ்வுகளால் மாறிவருவதால், கடலோர கண்டப்படுகையே உண்மையான எல்லையாகும்.[9] இந்த அணுகுமுறைப்படி பெரிய பிரித்தானியாவின் தீவுகளும் அயர்லாந்தும் ஐரோப்பாவின் அங்கமே; ஆத்திரேலியாவும் நியூ கினியும் இணைந்து ஒரே கண்டமே.
பண்பாட்டுக் கூறுகளின்படி, கண்டத்தின் எல்லை கண்டப்படுகைகளையும் கடந்து தீவுகளையும் கண்டத் துண்டுகளையும் உள்ளடக்குகிறது. இதன்படி, ஐசுலாந்து ஐரோப்பாவின் அங்கமாகவும் மடகாசுகர் ஆபிரிக்காவின் அங்கமாகவும் கருதப்படுகிறது. இக்கோட்பாட்டையே மேலும் விரிவுபடுத்தி, சில புவியியலாளர்கள் ஆஸ்திரேலேசிய புவிப்பொறையுடன் அமைதிப் பெருங்கடலில் உள்ள தீவுகளையும் ஒன்றிணைத்து ஓசியானியா எனக் குறிப்பிடலாயினர். இது புவியின் அனைத்துப்பரப்பையும் கண்டங்களாகவும் கண்டம் போன்ற நிலத்தொகுதிகளாகவும் பிரிக்க வழி செய்கிறது.[10]
கண்டங்கள் பிரிப்பு
[தொகு]ஒவ்வொரு கண்டமும் தனித்த நிலப்பகுதியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டிலிருந்து பொதுவாகத் தன்னிச்சையான, வரலாற்று மரபுகளால் விலக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஏழு கண்டங்களில் ஆத்திரேலியாவும் அன்டார்க்டிக்காவும் மட்டுமே மற்ற கண்டங்களிலிருந்து தனித்து உள்ளன.
பல கண்டங்கள் முற்றிலும் தனித்த பகுதிகளாக வரையறுக்கப்படவில்லை; " ஏறக்குறைய தனித்த நிலப்பரப்புகளாக"பிரிக்கப்பட்டுள்ளன.[11] ஆசியாவும் ஆபிரிக்காவும் சூயஸ் குறுநிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன; வடக்கு, தெற்கு அமெரிக்காக்கள் பனாமா குறுநிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு குறுநிலங்களுமே (isthmus) அவை இணைக்கும் பெருநிலப்பகுதிகளை விட மிகக் குறுகியவை. இவற்றின் குறுக்காகச் செயற்கையான நீர்வழிகள் ( முறையே சூயஸ் , பனாமா கால்வாய்கள்) இந்த நிலப்பரப்புகளைப் பிரிக்கின்றன.
எந்தவொரு கடலும் பிரிக்காத ஐரோவாசியாவை ஆசியா என்றும் ஐரோப்பா என்றும் பிரிப்பது பிறழ்வு ஆகும். ஐரோவாசியாவை ஒரே கண்டமாக ஏற்றுக்கொண்டால் உலகில் ஆறு கண்டங்களாகப் பிரிக்கலாம். இந்த அணுகுமுறை நிலவியலிலும் புவியியலிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஐரோவாசியாவை ஐரோப்பா என்றும் ஆசியா என்றும் பிரிப்பது ஐரோப்பிய மையவாதத்தின் எச்சமாகக் கருதப்படுகிறது: "நிலப்பரப்பு, பண்பாடு மற்றும் வரலாற்று பன்முகத்தில், சீன மக்கள் குடியரசும் இந்தியாவும் முழுமையான ஐரோப்பிய நிலப்பரப்பிற்கு ஒத்தது; எந்தவொரு தனி ஐரோப்பிய நாட்டிற்கும் அல்ல. ஒரு சிறந்த மாற்றாக (அப்போதுகூட முழுமையற்ற) பிரான்சை, முழுமையான இந்தியாவுடன் அல்லாது, உத்தரப் பிரதேசம் போன்ற ஒரு இந்திய மாநிலத்துடன் ஒப்பிடுவதே சரியானதாகும்."[12] இருப்பினும், வரலாற்று, பண்பாட்டுக் காரணங்களுக்காக, ஐரோப்பாவை தனி கண்டமாகப் பல வகைப்படுத்தல்களிலும் கருதப்படுகிறது.
ஏழு கண்டங்கள் கோட்பாட்டில் வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் தனி கண்டங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும் அவற்றை ஒரே கண்டமாக, அமெரிக்காவாகவும் பார்க்கலாம். இந்தப் பார்வை இரண்டாம் உலகப் போர் வரை ஐக்கிய அமெரிக்காவில் நிலவியது; சில ஆசிய ஆறு கண்ட கோட்பாடுகளிலும் இது கடைபிடிக்கப்படுகிறது.[13] மேலும் எசுப்பானியா, போர்த்துக்கல் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில், இவை ஒரே கண்டமாகக் கருதப்படுகின்றன. இந்தப் பயன்பாட்டை அமெரிக்க நாடுகளின் அமைப்பு போன்ற பெயர்களில் காணலாம். 19வது நூற்றாண்டிலிருந்து சிலர் "அமெரிக்காக்கள்" என்ற சொல்லாக்கத்தை பயன்படுத்துகின்றனர்.
கண்டங்களைத் தனித்த நிலப்பகுதிகளாக வரையறுத்து அனைத்து தொடர்ச்சியான நிலப்பகுதிகளையும் ஒன்றிணைத்தால், ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா அடங்கிய ஒற்றை நிலப்பகுதி ஆப்பிரிக்க-யூரேசியா என்றழைக்கப்படுகிறது. இதன்படி நான்கு கண்டங்கள் உள்ளன: ஆப்பிரிக்க-யூரேசியா, அமெரிக்கா, அன்டார்ட்டிகா மற்றும் ஆத்திரேலியா.
பனி யுகத்தில், கடல்மட்டம் தாழ்ந்திருந்தபோது பல கண்டப்படுகைகள் உலர்நிலமாக, நிலப்பாலங்களாக வெளிப்பட்டன; அக்காலத்தில் ஆத்திரேலியா (கண்டம்) ஒரே தொடர்ச்சியான நிலப்பகுதியாக இருந்தது. அதேபோல அமெரிக்காக்களும் ஆபிரிக்க-யூரேசியாவும் பெரிங் பாலத்தால் இணைக்கப்பட்டிருந்தன. பெரிய பிரித்தானியா போன்ற பிற தீவுகளும் தங்கள் கண்டத்தின் பெருநிலப்பகுதிகளுடன் இணைந்திருந்தன. அக்காலத்தில் மூன்று கண்டங்களே இருந்தன: ஆபிரிக்க-யூரேசிய-அமெரிக்கா, அன்டார்ட்டிகா, ஆத்திரேலியா-நியூ கினியா.
கண்டங்களின் எண்ணிக்கை
[தொகு]பலவேறு முறைகளில் கண்டங்கள் பிரிக்கப்படுகின்றன:
மாடல்கள் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
4 கண்டங்கள்[14] | ||||||||
5 கண்டங்கள் [15][16][17] |
||||||||
6 கண்டங்கள்[18] | ||||||||
6 கண்டங்கள் [15][19] |
||||||||
7 கண்டங்கள் [1][19][20][21][22][23] |
ஆஸ்திரேலியா |
- ஏழு கண்டங்களக்ச் சீன மக்கள் குடியரசு, இந்தியா, மேற்கு ஐரோப்பாவின் சிலபகுதிகள் மற்றும் பெரும்பாலான ஆங்கிலமொழி பேசும் நாடுகளில் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
- அமெரிக்காவை ஒரே கண்டமாகக் கொண்ட ஆறு கண்டங்கள் வடிவம் எசுப்பானிய மொழி பேசும் நாடுகளிலும்[24] கிரீசு போன்ற சில ஐரோப்பிய நாடுகளிலும் (சிலவற்றில் மனித நடமாட்டம் இல்லாத அன்டார்க்டிக்காவை தவிர்த்து ஐந்தாகவும்) கற்றுக் கொடுக்கப்படுகிறது.[18]
மனித நடமாட்டம் இல்லாத அன்டார்க்டிக்காவைத் தவிர்த்த ஐந்து கண்ட வடிவத்தைப் பன்னாட்டு ஒலிம்பிக் குழு ஏற்றுக்கொண்டு[16][17] ஒலிம்பிக் சின்னங்கள்#ஒலிம்பிக் சின்னத்தில் ஐந்து வளையங்களைக் கொண்டுள்ளது.[25]
ஆத்திரேலியாவையும் அடுத்துள்ள பசிபிக் மற்றும் அமைதிப் பெருங்கடல் தீவுகளையும் குறிக்க சிலநேரங்களில் ஓசியானியா அல்லது ஆஸ்திரேலியா என்ற சொற்பயன்பாட்டையும் காணலாம். இப்பயன்பாட்டை கனடா [20] இத்தாலி, கிரேக்கம் (நாடு)[18] மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள், போர்த்துக்கல், எசுப்பானியா நாட்டு பாடப்புத்தகங்களில் காணலாம்.
பரப்பளவும் மக்கட்தொகையும்
[தொகு]கீழ்வரும் அட்டவணையில் ஒவ்வொரு கண்டத்தின் பரப்பளவும் மக்கள் தொகையும் தொகுக்கப்பட்டுள்ளது.[26]
கண்டம் | பரப்பு (கிமீ²) | தோராய மக்கட்தொகை 2002 |
மக்கட்தொகை சதவிகிதம் |
சதுர கி.மீ.க்கு மக்களடர்த்தி |
---|---|---|---|---|
ஆப்பிரிக்க-யுரேசியா | 84,360,000 | 5,400,000,000 | 86% | 64.0 |
யுரேசியா | 53,990,000 | 4,510,000,000 | 72% | 83.5 |
ஆசியா | 43,810,000 | 3,800,000,000 | 60% | 86.7 |
அமெரிக்காக்கள் | 42,330,000 | 886,000,000 | 14% | 20.9 |
ஆப்பிரிக்கா | 30,370,000 | 890,000,000 | 14% | 29.3 |
வட அமெரிக்கா | 24,490,000 | 515,000,000 | 8% | 21.0 |
தென் அமெரிக்கா | 17,840,000 | 371,000,000 | 6% | 20.8 |
அண்டார்டிக்கா | 13,720,000 | 1,000 | 0.00002% | 0.00007 |
ஐரோப்பா | 10,180,000 | 710,000,000 | 11% | 69.7 |
ஓசியானியா | 9,010,000 | 33,552,994 | 0.6% | 3.7 |
ஆஸ்திரேலியா -நியூ கினியா | 8,500,000 | 30,000,000 | 0.5% | 3.5 |
ஆஸ்திரேலியா | 7,600,000 | 21,000,000 | 0.3% | 2.8 |
எல்லாக் கண்டங்களும் சேர்த்து மொத்தப் பரப்பளவு 148,647,000 ச.கி.மீ. இது உலகின் பரப்பில் ஏறத்தாழ 29.1 சதவிகிதம் ஆகும்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Continents: What is a Continent?". National Geographic. பார்க்கப்பட்ட நாள் 2009-08-22. "Most people recognize seven continents—Asia, Africa, North America, South America, Antarctica, Europe, and Australia, from largest to smallest—although sometimes Europe and Asia are considered a single continent, Eurasia."
- ↑ Lewis, Martin W. (1997). The Myth of Continents: a Critique of Metageography. Berkeley: University of California Press. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-20742-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-20743-2.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ "Ocean பரணிடப்பட்டது 2011-01-26 at the வந்தவழி இயந்திரம்". The Columbia Encyclopedia (2006). New York: Columbia University Press. Retrieved 20 February 2007.
- ↑ "Distribution of land and water on the planet பரணிடப்பட்டது 2008-05-31 at the வந்தவழி இயந்திரம்." UN Atlas of the Oceans (2004). Retrieved 20 February 2007.
- ↑ "Definition of a continent in Miriam-Webster Dictionary". Miriam Webster. பார்க்கப்பட்ட நாள் 2013-03-08. "one of the six or seven great divisions of land on the globe"
- ↑ "continent n. 5. a." (1989) Oxford English Dictionary, 2nd edition. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ; "continent1 n." (2006) The Concise Oxford English Dictionary, 11th edition revised. (Ed.) Catherine Soanes and Angus Stevenson. Oxford University Press; "continent1 n." (2005) The New Oxford American Dictionary, 2nd edition. (Ed.) Erin McKean. Oxford University Press; "continent [2, n] 4 a" (1996) Webster's Third New International Dictionary, Unabridged. ProQuest Information and Learning ; "continent" (2007) பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். Retrieved 14 January 2007, from Encyclopædia Britannica Online.
- ↑ "continent [2, n] 6" (1996) Webster's Third New International Dictionary, Unabridged. ProQuest Information and Learning. "a large segment of the earth's outer shell including a terrestrial continent and the adjacent continental shelf"
- ↑ Monkhouse, F. J. (1978). A Dictionary of the Natural Environment. London: Edward Arnold. pp. 67–68.
structurally it includes shallowly submerged adjacent areas (continental shelf) and neighbouring islands
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Ollier, Cliff D. (1996). Planet Earth. In Ian Douglas (Ed.), Companion Encyclopedia of Geography: The Environment and Humankind. London: Routledge, p. 30. "Ocean waters extend onto continental rocks at continental shelves, and the true edges of the continents are the steeper continental slopes. The actual shorelines are rather accidental, depending on the height of sea-level on the sloping shelves."
- ↑ Lewis, Martin W. (1997). The Myth of Continents: a Critique of Metageography. Berkeley: University of California Press. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-20742-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-20743-2.
The joining of Australia with various Pacific islands to form the quasi continent of Oceania ...
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Lewis, Martin W. (1997). The Myth of Continents: a Critique of Metageography. Berkeley: University of California Press. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-20742-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-20743-2.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Lewis, Martin W. (1997). The Myth of Continents: a Critique of Metageography. Berkeley: University of California Press. pp. ?. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-20742-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-20743-2.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Lewis, Martin W. (1997). "1". The Myth of Continents: a Critique of Metageography. Berkeley: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-20742-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-20743-2.
While it might seem surprising to find North and South America still joined into a single continent in a book published in the United States in 1937, such a notion remained fairly common until World War II. [...] By the 1950s, however, virtually all American geographers had come to insist that the visually distinct landmasses of North and South America deserved separate designations.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ R. W. McColl, ed. (2005, Golson Books Ltd.). 'continents' - Encyclopedia of World Geography, Volume 1. p. 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780816072293. பார்க்கப்பட்ட நாள் 2012-06-26.
And since Africa and Asia are connected at the Suez Peninsula, Europe, Africa, and Asia are sometimes combined as Afro-Eurasia or Eurafrasia.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ 15.0 15.1 "Continent". The Columbia Encyclopedia. 2001. New York: Columbia University Press - Bartleby.
- ↑ 16.0 16.1 Océano Uno, Diccionario Enciclopédico y Atlas Mundial, "Continente", page 392, 1730. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-494-0188-7
- ↑ 17.0 17.1 Los Cinco Continentes (The Five Continents), Planeta-De Agostini Editions, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-395-6054-0
- ↑ 18.0 18.1 18.2 [1] official Greek Paedagogical Institute 6th grade Geography textbook, 5+1 continents combined-America model, Pankosmios Enyklopaidikos Atlas, CIL Hellas Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-407-0470-4, page 30, 5+1 combined-America continents model, Neos Eikonographemenos Geographikos Atlas, Siola-Alexiou, 6 continents combined-America model, Lexico tes Hellenikes Glossas, Papyros Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-960-6715-47-1, lemma continent(epeiros), 5 continents model,[2] Lexico Triantaphyllide online dictionary , Greek Language Center (Kentro Hellenikes Glossas), lemma continent(epeiros), 6 continents combined-America model, Lexico tes Neas Hellenikes Glossas, G.Babiniotes, Kentro Lexikologias(Legicology Center) LTD Publications , பன்னாட்டுத் தரப்புத்தக எண் 960-86190-1-7, lemma continent(epeiros), 6 continents combined-America model.Note and clarification on the above: the sometimes used in Greece 5 and 5+1 continents models mentioned above are equivalent to the 6 (inhabited) continents combined-America model excluding/including (separately mentioning) the uninhabited and once lesser-known or unknown Antarctica (just like the Olympic Circles-Logo); they don't refer to some other 5 or other number continent modeling scheme.
- ↑ 19.0 19.1 "Continent". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2006. Chicago: Encyclopædia Britannica, Inc.
- ↑ 20.0 20.1 The World - Continents பரணிடப்பட்டது 2006-02-21 at the வந்தவழி இயந்திரம், Atlas of Canada
- ↑ The New Oxford Dictionary of English. 2001. New York: Oxford University Press.
- ↑ "Continent பரணிடப்பட்டது 2009-10-28 at the வந்தவழி இயந்திரம்". MSN Encarta Online Encyclopedia 2006.. 2009-10-31.
- ↑ "Continent". McArthur, Tom, ed. 1992. The Oxford Companion to the English Language. New York: Oxford University Press; p. 260.
- ↑ (in Spanish) http://lema.rae.es/dpd/?key=norteamerica.
{{cite book}}
: Missing or empty|title=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ The Olympic symbols. பன்னாட்டு ஒலிம்பிக் குழு. 2002. Lausanne: Olympic Museum and Studies Centre. The five rings of the Olympic logo represent the five inhabited, participating continents (Africa, America, Asia, Europe, and Oceania பரணிடப்பட்டது 2009-03-24 at the வந்தவழி இயந்திரம்); thus, Antarctica is excluded from the flag. Also see Association of National Olympic Committees: [3] பரணிடப்பட்டது 2019-04-22 at the வந்தவழி இயந்திரம் [4] [5] [6] [7]
- ↑ "Total Population – Both Sexes". World Population Prospects, the 2010 Revision. United Nations Department of Economic and Social Affairs. 28 June 2011. Retrieved 24 October 2011. (Per linked individual article definitions, North America includes UN population estimates for North America, Central America and Caribbean; Australia includes Australia and Papua New Guinea.)
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் கண்டங்கள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.