திபெத்திய மக்கள்

திபெத்திய மக்கள் (Tibetan people) திபெத்தை இயலிடமாகக் கொண்ட மக்களையும் மேற்கில் நடுவண் ஆசியாவிலிருந்து மியான்மார், சீனா வரையில் பரந்து வாழும் மக்களையும் குறிக்கும்.

திபெத்தியர்கள்
Tibetans
மொத்த மக்கள்தொகை
5 முதல் 10 மில்லியன் வரை
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 திபெத் ( சீனாவினால் கோரப்பட்டது),  நேபாளம்,  பூட்டான்,  இந்தியா,  ஐக்கிய அமெரிக்கா
மொழி(கள்)
திபெத்திய மொழி
சமயங்கள்
திபெத்திய பௌத்தம், போன்
தொடர்புள்ள இனக்குழுக்கள்

திபெத்திய மக்களின் எண்ணிக்கை 1959 ஆம் ஆண்டில் இருந்து 6,330,567 முதல் 5.4 மில்லியன் வரையில் குறைந்துள்ளதாக நாடு கடந்த நிலையில் உள்ள திபெத்திய அரசு தெரிவித்துள்ளது[1] பரணிடப்பட்டது 2011-02-24 at Wikiwix. ஆனாலும் மக்கள் சீனக் குடியரசு திபெத்தியர்களின் எண்ணிக்கை 2.7 மில்லியனில் இருந்து 5.4 மில்லியன் வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது[2] பரணிடப்பட்டது 2007-11-24 at the வந்தவழி இயந்திரம். திபெத்துக்கு வெளியே இந்தியாவில் 125,000 பேரும், நேபாளத்தில் 60,000 பேரும், பூட்டானில் 4,000 பேரும் வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1950 இல் மக்கள் விடுதலை இராணுவம் திபெத்தில் நுழைந்தது முதல் கிட்டத்தட்ட 1,200,000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டதாக திபெத்துக்கு வெளியே வாழும் திபெத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு