சென்னை மத்திய மெட்ரோ நிலையம்

'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய மெட்ரோ' இரயில் நிலையம், சென்னை, தமிழ்நாட

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம், பொதுவாக சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம் என்று அழைக்கப்படுகிறது, இந்தியாவின் சென்னையில் உள்ள ஒரு நிலத்தடி மெட்ரோ தொடர்வண்டி நிலையமாகும்.[1]


புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம்
Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central metro station
சென்னை மெட்ரோ நிலையம்
நிலைய நுழை வாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்கண்ணப்பர் திடல், பூங்காவனபுரம், சென்னை, 600003, தமிழ்நாடு
 India
ஆள்கூறுகள்13°04′53″N 80°16′22″E / 13.081464°N 80.272752°E / 13.081464; 80.272752
உரிமம்சென்னை மெட்ரோ
இயக்குபவர்சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட்
தடங்கள்
நடைமேடைதீவு நடைமேடை
இருப்புப் பாதைகள்6
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலத்தடி நிலையம்
ஆழம்28 மீட்டர்கள் (92 அடி)
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்இலவச மிதிவண்டி
மற்ற தகவல்கள்
வலைத்தளம்http://chennaimetrorail.org
வரலாறு
திறக்கப்பட்டதுமே 25, 2018 (2018-05-25) (Green Line)
பெப்ரவரி 10, 2019 (2019-02-10) (Blue Line)
பயணிகள்
பயணிகள் 20199,500
சேவைகள்
முந்தைய நிலையம்   சென்னை மெட்ரோ   அடுத்த நிலையம்
நீல வழித்தடம்
Terminusபச்சை வழித்தடம்
அமைவிடம்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் is located in சென்னை
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம்
சென்னை இல் அமைவிடம்

சென்னை மெட்ரோ இரு தடங்களிலும் தன் சேவையை செய்கிறது. மத்திய மெட்ரோ நிலையம் சுமார் 30,000 சதுர மீட்டர் (320,000 சதுர அடி) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ நிலையம்

தொகு

சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் மற்றும் ரிப்பன் கட்டிடம் ஆகியவற்றின் முன் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மேல் சென்னை மத்திய மெட்ரோ நிலையம் இரண்டு நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு நிலத்தடி இரயில் நிலையமாகும்.[2]. மெட்ரோ திட்டத்தின் கீழ் செயல்படும் இரண்டு நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். நடைமேடை ஒன்றில் விமான நிலையம் முதல் வண்ணாரப் பேட்டை வரையும், நடைமேடை இரண்டில் சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் முதல் பரங்கிமலை வழியாக எழும்பூர் மற்றும் கோயம்பேடு வரை இணைப்பு நிலையமாகவும் இது செயல்படுகிறது. மற்றொன்று ஆலந்தூர் மெட்ரோ நிலையமாகும். இந்த மெட்ரோ நிலையம், 28 மீ ஆழத்தில் கட்டப்பட்டு 30,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. சென்னை நகரத்தின் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் ஆலந்தூரே மிகப்பெரிய மெட்ரோ நிலையமாகும்[3]. மூன்றாம் நிலை மெட்ரோ நிலையம் 410 மீட்டர் நீளத்தையும் 35 மீட்டர் அகலத்தையும் கொண்டிருக்கும்.[1] பிற மெட்ரோ நிலையங்களைப் போல இல்லாமல் இது நான்கு நுழைவு முனைகளை கொண்ட நிலையமாகும். சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்தை அணுக ஆறு நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் அமைந்துள்ளன. அவை பூங்கா நிலையம், பூங்கா நகரம், ரிப்பன் கட்டிடம் மற்றும் ராசீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் போன்றவை ஆகும்.[4][5] இந்த நிலையம் சென்னை சென்ட்ரல், பார்க் டவுன் மற்றும் பார்க் இரயில் நிலையங்களில் இருந்து பயணிகளை கொண்டு செல்லும் போக்குவரத்து இடமாக செயல்படுகிறது.[6] மெட்ரோ நிலையத்தை நாள்தோறும் 100,000 நபர்களுக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்துவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[7]

மத்திய மெட்ரோ நிலையத்தில் தாழ்வாரத்தில் வாகனங்களை நிறுத்தும் வசதியைக் கொண்ட சில இரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ இரயில் நிலையமும் ஒன்றாகும்.[8] . சுமார் 500 கார்கள் மற்றும் 1,000 இரு சக்கர வாகனங்களை நிறுத்த இங்குள்ள அடித்தளப் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நிலையத்தின் ஒரு அடித்தள மட்டத்தில் விமான நிலையத்தின் சரிபார்க்கும் செயல்முறை வசதியைக் கொண்டு வருவதற்கான திட்டங்களும் உள்ளன. இது விமானப் பயணிகள் நிலையத்திலேயே தங்கள் சரிபார்க்கும் நடைமுறைகளை முடித்துக் கொள்ள அனுமதியளிக்கும்.[9] இம்மெட்ரோ நிலையத்திற்கு எதிரே ஒரு பேருந்து நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.[10] சென்னை மெட்ரோ இரயில் வலைப்பின்னலில் அமைந்துள்ள மூன்று நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இது மாநிலத்தின் மின்சார தொகுப்பிலிருந்து துணை நிலையங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக 230- கிலோ வோல்ட்டு மின்சாரத்தை பெறும் வசதியை பெற்றுள்ளது. மற்ற இரண்டு மெட்ரோ நிலையங்கள் கோயம்பேடு மற்றும் ஆலந்தூர் முதலியனவாகும்.[11]

சென்னை மத்திய மெட்ரோ இரயில் நிலையம் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாளன்று திறக்கப்பட்டது.[1] 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, இந்த நிலையத்தில் தினசரி 7,700 பயணிகள் வந்து செல்கிறார்கள்.[12].

நில அமைப்பு

தொகு

சென்னை மத்திய மெட்ரோ நிலையத்தின் மீது ஒரு பூங்காவை உருவாக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மத்திய நிலத்தடி மெட்ரோ நிலையம் மீது இரிப்பன் கட்டிட பூங்காவை விரிவுபடுத்தும் சென்னை மாநகராட்சியின் திட்டத்திற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. பூங்காவை உருவாக்க வசதியாக நிலையத்தின் மீது நீர்ப்புகா கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இரிப்பன் கட்டிடம் மற்றும் விக்டோரியா பொதுப் பூங்கா வளாகத்தின் ஆறு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட ஒரு பகுதி நீர்ப்புகா கருங்கல் பலகை 210 மீட்டருக்கு 10 மீட்டர் என்ற அளவுகளில் அமைக்கப்படும். இரிப்பன் கட்டிட பூங்கா, அம்மா மாளிகை மற்றும் விக்டோரியா பொதுப் பூங்கா ஆகியவற்றிற்கு வருபவர்கள் மத்திய மெட்ரோ நிலையத்தை அதன் ஏழு நுழைவு வாயில்கள் ஒன்றின் வழியாக அணுகலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Xavier Lopez, Aloysius (14 September 2014). "Civic body plans spot of greenery over Metro station". The Hindu (Chennai). http://www.thehindu.com/news/cities/chennai/civic-body-plans-spot-of-greenery-over-metro-station/article6408320.ece. பார்த்த நாள்: 2 Oct 2014. 
  2. "Entry to Ripon Buildings from P.H. Road opens up". The Hindu (Chennai). 4 February 2014. http://www.thehindu.com/news/cities/chennai/entry-to-ripon-buildings-from-ph-road-opens-up/article5650140.ece. பார்த்த நாள்: 16 February 2014. 
  3. Jun 7, TNN | Updated; 2019; Ist, 6:23. "After snatching case, CMRL to install more cameras in stations | Chennai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-09. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  4. Sekar, Sunitha (11 December 2013). "When Chennai Central becomes the city's transport hub". The Hindu (Chennai). http://www.thehindu.com/news/cities/chennai/when-chennai-central-becomes-the-citys-transport-hub/article5444943.ece?homepage=true. பார்த்த நாள்: 19 January 2014. 
  5. Sekar, Sunitha (12 July 2018). "New entry point for Central Metro opens". The Hindu (Chennai). https://www.thehindu.com/news/cities/chennai/new-entry-point-for-central-metro-opens/article24393806.ece. பார்த்த நாள்: 15 July 2018. 
  6. "Metro rail seals fate of shops near Central". The Hindu (Chennai). 22 July 2012. http://www.thehindu.com/news/cities/chennai/article3666956.ece. பார்த்த நாள்: 5 August 2012. 
  7. Ayyapan, V; Christin Mathew Philip (30 August 2011). "Chennai Central, the hulk among Metro stations". The Times of India (Chennai) இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131105204237/http://articles.timesofindia.indiatimes.com/2011-08-30/chennai/29944669_1_metro-station-unpaid-area-underground-stations. பார்த்த நாள்: 24 November 2012. 
  8. "Single train trip to equal 16 buses, 300 cars and 600 bikes". The Hindu (Chennai). 29 August 2012. http://www.thehindu.com/news/cities/chennai/article3832896.ece. பார்த்த நாள்: 25 November 2012. 
  9. Sekar, Sunitha (20 December 2013). "Parking lot for Chennai Metro station to come up under land". The Hindu (Chennai). http://www.thehindu.com/news/cities/chennai/parking-lot-for-chennai-metro-station-to-come-up-under-land/article5479596.ece. பார்த்த நாள்: 19 January 2014. 
  10. Ayyappan, V. (8 August 2014). "At 40m, Ashok Nagar to be highest metro station". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/city/chennai/At-40m-Ashok-Nagar-to-be-highest-metro-station/articleshow/39850852.cms. பார்த்த நாள்: 4 October 2014. 
  11. "Metro rail sets up units to power trains, stations to meet year-end deadline to start services". The Times of India (Chennai). 15 April 2014. http://timesofindia.indiatimes.com/City/Chennai/Metro-rail-sets-up-units-to-power-trains-stations-to-meet-year-end-deadline-to-start-services/articleshow/33757188.cms. பார்த்த நாள்: 18 Apr 2014. 
  12. Sekar, Sunitha (21 February 2019). "Metro users jump to 90,000". The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/metro-users-jump-to-90000/article26324880.ece. 

புற இணைப்புகள்

தொகு