அமெரிக்கா $60 விலையில் எல்.ஈ.டி விளக்குகளை அறிமுகப்படுத்தியது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, ஏப்பிரல் 22, 2012

20 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய எல்.ஈ.டி விளக்குகளை ஐக்கிய அமெரிக்கா இன்று புவி நாள் அன்று அறிமுகப்படுத்தியது.


நெதர்லாந்தைச் சேர்ந்த பிலிப்சு நிறுவனம் இந்த விளக்குகளை உருவாக்கியுள்ளது. மிக நீண்ட காலம் பாவிக்கக்கூடிய இந்த விளக்குகளின் அறிமுக விலையாக 60 அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


60-வாட்டு வலுவுள்ள பழைய வெள்ளொளிர்வு விளக்குகளுக்கான மாற்றீடாக விளக்குகளை உருவாக்க ஆற்றலுக்கான அமெரிக்க அரசுத் திணைக்களம் "ஒளிமயமான நாளை" என்ற போட்டியொன்றை அறிவித்திருந்தது. இப்போட்டியில் பங்கு பற்றிய பிலிப்சு நிறுவனம் இந்த எல்.ஈ.டி விளக்குகளை உருவாக்கியமைக்காக பரிசு பெற்றிருக்கிறது. இப்போட்டியில் பிலிப்சு நிறுவனம் மட்டுமே பங்குபற்றியிருந்தது. இந்த விளக்கு 18 மாதங்களாகச் சோதிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.


நீண்ட காலம் பயன்படுத்தக்கூடியதும் மலிவானதுமான உடனொளிர்வு விளக்குகள் எல்.ஈ.டி. விளக்குகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் 100 வாட்டு வலுவுள்ள வெள்ளோளிர்வு விளக்குகளின் தயாரிப்பு ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. 60 வாட்டு வலுவுள்ள விளக்குகளின் தயாரிப்பு ஐரோப்பாவில் நிறுத்தப்பட்டு விட்டன. அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டு விடும். 2014 ஆம் ஆண்டில் இருந்து 40 வாட்டு அல்லது அதற்கு மேல் இவ்விளக்குகளைப் பயன்படுத்தப்படுவது 2014 ஆம் ஆண்டில் இருந்து தடை செய்யப்படும்.


மூலம்

தொகு