On this page
- கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ளவும்
- பரிசோதனை செய்து கொள்ளவும்
- உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்
- ஆதரவு
- கோவிட் மருந்துகளைப் பற்றி கேட்கவும்
- முகக்கவசம் ஒன்றை அணியவும்
- உங்கள் அடுத்த தடுப்பூசி மருந்தளவைப் பெறவும்
- சுத்தமான காற்றை உள்ளே வர விடவும்
- 'கோவிட்-19' நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வருதல்
- நீங்கள் ஒரு தொடர்பாளராக (contact) இருந்தால்
கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ளவும்
கோவிட்-19 நோய்த்தொற்று இப்போதும் சமூகத்தில் பரவி வருகிறது. இது இன்னும் சிலரை மிகவும் சுகவீனப்படுத்தலாம். உங்களைப் பாதுகாத்துக் கொள்வதே மற்றவர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த வழியாகும். நீங்கள் கோவிட் நோய்த்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றால், உங்களால் கோவிட் நோய்த்தொற்றைப் பரப்ப முடியாது.
பரிசோதனை செய்து கொள்ளவும்
பின்வரும் சூழ்நிலையில் நீங்கள் வீட்டிலேயே இருக்கவும், அத்துடன் ஒரு விரைவான காப்பூக்கிச் சோதனையை (rapid antigen test (RAT)) மேற்கொள்ளவும்:
- மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, இருமல், காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல் போன்ற நோயறிகுறிகள் இருந்தால்.
- கோவிட்-19 நோய்த்தொற்றுள்ள ஒருவருடன் தொடர்பில் இருந்திருந்தால்.
உங்கள் பரிசோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால், அடுத்த சில நாட்களுக்கு நீங்கள் விரைவான காப்பூக்கிச் சோதனைகளை (rapid antigen tests) மேற்கொள்ள வேண்டும், அத்துடன் உங்கள் நோயறிகுறிகள் மறையும் வரை வீட்டிலேயே இருக்க வேண்டும்.
நீங்கள் கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தால், ஒரு பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டுமென பொது மருத்துவர் (GP) ஒருவரிடம் கேட்கவும். ஒரு பி.சி.ஆர். பரிசோதனையில் உங்கள் சோதனை முடிவு நேர்மறையாக இருந்தால், உங்கள் சோதனை முடிவைத் தெரிவிக்க வேண்டியதில்லை.
கோவிட்-19 பரிசோதனை ஒன்றைப் பெறுவது பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறியவும்.
உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்
உங்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால், நீங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு பொது மருத்துவர் (GP) ஒருவரிடம் பேச வேண்டும். பெரும்பாலான மக்கள் இலேசான நோயறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள், ஆகவே அவர்கள் வீட்டிலேயே குணமடையலாம். நீங்கள் செய்ய வேண்டியது:
- குறைந்தது 5 நாட்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும். வேலைக்கோ அல்லது பள்ளிக்கோ செல்ல வேண்டாம். மருத்துவமனைகள், முதியோர் பராமரிப்பு இடவசதிகள் மற்றும் ஊனமுற்றோர் சேவைகள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
- ஒரு அவசர காலத்தில் வீட்டை விட்டுக் கட்டாயம் வெளியேற வேண்டிய சூழ்நிலையில் முகக்கவசம் ஒன்றை அணிய வேண்டும். அறுவை சிகிச்சை முகக்கவசம் அல்லது N95 முகக்கவசமே சிறந்த முகக்கவசங்கள் ஆகும்.
- நீங்கள் சமீபத்தில் சந்தித்தவர்களிடம் அல்லது நீங்கள் சமீபத்தில் சென்ற இடங்களில், உங்களுக்கு கோவிட் நோய்த்தொற்று இருப்பதைத் தெரிவிக்கவும்
உங்கள் அறிகுறிகள் இன்னும் மோசமாக ஆனால், நீங்கள் ஒரு மருத்துவரிடம் பேச வேண்டும்.
உங்களால் பொது மருத்துவர் (GP) ஒருவரிடம் பேச முடியாவிட்டால், அவசரகாலப் பராமரிப்புக்காக விக்டோரிய மெய்நிகர் அவசரகால சிகிச்சைப் பிரிவை (Virtual Emergency Department) அழைக்கவும்.
அவசரகால உதவிகளுக்கு மூன்று பூஜ்யம் (000) என்ற எண்ணில் அழைக்கவும்.
நீங்கள் 10 நாட்கள் வரை தொற்றுநோயைப் பரப்புபவராக இருக்கக்கூடும். உங்களுக்கு மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, இருமல், காய்ச்சல், குளிர் காய்ச்சல், வியர்வை அல்லது மூச்சுத் திணறல் இருந்தால் நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். விரைவான காப்பூக்கிச் சோதனை (rapid antigen test) ஒன்றை மேற்கொள்ளவும், அல்லது உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால் ஒரு பொது மருத்துவரிடம் (GP) பேசவும்.
ஆதரவு
மேலதிகத் தகவல்களுக்கு:
- உங்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால் என்ன செய்வது என்பதற்கு, கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான சரிபார்ப்புப் பட்டியல் என்ற பக்கத்தைப் பார்வையிடவும்
- நோயறிகுறிகளுக்கும், வீட்டிலேயே உங்கள் ஆரோக்கியத்தைப் பார்த்துக்கொள்வதற்கும், கோவிட்-19 நோய்த்தொற்றை நிர்வகித்தல் என்ற பக்கத்தைப் பார்வையிடவும்.
யாராவது ஒருவரிடம் பேசுவதற்கு:
- மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்த்துரைத்தல் சேவையை 131 450 என்ற எண்ணில் அழைக்கவும்.
கோவிட் மருந்துகளைப் பற்றி கேட்கவும்
கோவிட் மருந்துகள் உயிர்களைக் காப்பாற்றுகின்றன மற்றும் மக்கள் கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் நோய்வாய்ப்படுவதைத் தடுக்கின்றன. அவை சிறப்பாகச் செயல்பட, முடிந்தவரை விரைவாகவும், நோய்வாய்ப்பட்ட 5 நாட்களுக்குள்ளும் அவை எடுக்கப்பட வேண்டும்.
நீங்கள் 'கோவிட்' மருந்துகளைப் பெறத் தகுதியுள்ளவரா என்பதைக் கண்டறிய இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும். நீங்கள் தகுதியானவர் என்று நீங்கள் நினைத்தால், பொது மருத்துவர் (GP) ஒருவரிடம் பேசவும். தகுதியானவர்கள் விரைவில் சிகிச்சை பெறுவதை உறுதிசெய்ய ஒரு பொது மருத்துவர் (GP) உதவ முடியும்
மேலதிகத் தகவல்களுக்கு, வைரஸ் தடுப்பு மருந்துகள் மற்றும் பிற மருந்துகளைப் பார்க்கவும்.
முகக்கவசம் ஒன்றை அணியவும்
கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு நீங்கள் ஆளாவதிலிருந்தும், நீங்கள் பரப்புவதிலிருந்தும் முகக்கவசங்கள் உங்களைத் தடுக்கமுடியும். முகக்கவசங்கள் நல்ல தரமானதாகவும், முகத்தில் நன்கு பொருந்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும். N95 மற்றும் P2 முகக்கவசங்கள் (சுவாசக் கருவிகள்) அதிகப் பாதுகாப்பைக் கொடுக்கின்றன.
பின்வரும் சூழ்நிலைகளில் நீங்கள் முகக்கவசம் ஒன்றை அணிய வேண்டும்:
- பொதுப் போக்குவரத்தில், ஒரு பொது இடத்தின் உள்ளே, மற்றும் வெளியே ஒரு நெரிசலான இடத்தில்.
- நீங்கள் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்து, வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தால்
- மிகவும் நோய்வாய்ப்படும் அதிக அபாயத்தில் நீங்கள் இருந்தால் அல்லது அப்படி உள்ள ஒருவருடன் இருந்தால்.
மூச்சுத் திணறல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் உள்ளதால், 2 அல்லது அதற்குக் குறைவான வயதுள்ள குழந்தைகள் முகக்கவசத்தை அணியக்கூடாது.
மேலதிகத் தகவல்களுக்கு முகக்கவசங்கள் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
உங்கள் அடுத்த தடுப்பூசி மருந்தளவைப் பெறவும்
கோவிட்-19 நோய்த்தொற்றால் தீவிர நோய்வாய்ப்படுவதிலிருந்து உங்களையும், உங்களுடைய குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்கான மிகச் சிறந்த வழி தடுப்பூசிகளேயாகும். உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளைப் போடுவதைப் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எத்தனை மருந்தளவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்பதை அறிய, பொது மருத்துவர் (GP) ஒருவரிடம் பேசவும்.
நீங்கள் ஏற்கனவே கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இன்னமும் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் அடுத்த மருந்தளவைப் பெற பொது மருத்துவரிடம் (GP) அல்லது உள்ளூர் மருந்தகத்தில் முன்பதிவு செய்யத் தடுப்பூசி மருத்துவ நிலைய கண்டுபிடிப்பானைப் பயன்படுத்தவும்.
மேலதிகத் தகவல்களுக்கு, கோவிட்-19 தடுப்பூசி என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
சுத்தமான காற்றை உள்ளே வர விடவும்
கோவிட்-19 காற்றில் பரவுகிறது. சுத்தமான காற்றை உள்ளிடத்துக்குக் கொண்டு வருவது, கோவிட்-19 நோய்த்தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கும். மற்றவர்களுடன் உள்ளிடத்தில் ஒன்றுகூடும் சாத்தியம் இருக்கும்போது, ஜன்னல்கள் அல்லது கதவுகளைத் திறந்துவிடவும். உங்களால் அது முடியாவிட்டால், காற்றில் இருந்து தூசித் துகள்களை அகற்றும் கையடக்க, காற்றைச் சுத்தப்படுத்தும் சாதனத்தைப் (HEPA வடிகட்டி) பயன்படுத்தலாம்.
மேலதிகத் தகவல்களுக்குக் காற்றோட்டம் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
'கோவிட்-19' நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வருதல்
நோய்த்தொற்றைப் பரப்பாதவராக இருக்கும் காலத்துக்குப் பிறகும், கோவிட்-19 நோய்த்தொற்றால் பலர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பார்கள். சரியான முறையில் மீண்டு வருவதற்கான பராமரிப்பையும் நேரத்தையும் உங்கள் உடலுக்குக் கொடுக்கவும்.
நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு, அடுத்த தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்னதாக, நீங்கள் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இது வைரசுக்கு எதிராக நீங்கள் சிறந்த பாதுகாப்பைப் பெற்றிருப்பதை உறுதி செய்யும்.
நீங்கள் குணமடைந்த 4 வாரங்களுக்குப் பிறகும் மீண்டும் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு நீங்கள் ஆளாகலாம். நோய்த்தொற்றுக்கு ஆளாகி 4 வாரங்கள் அல்லது அதற்கு மேல் உங்களுக்கு நோயறிகுறிகள் இருந்தால், நீங்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நீண்ட கோவிட் (Long COVID) என்பது கோவிட்-19 நோய்த்தொற்றின் நோயறிகுறிகள் 3 மாதங்களுக்கு மேல் நீடிப்பதாகும். உங்கள் பொது மருத்துவரை (GP) நீங்கள் பார்க்க வேண்டும், அவர் உங்கள் அறிகுறிகளை நிர்வகிப்பதில் உங்களுக்கு உதவக்கூடும் அல்லது தேவைப்பட்டால் ஒரு நிபுணரிடம் உங்களைப் பரிந்துரைக்கக் கூடும்.
நீண்ட கோவிட் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறியவும்.
நீங்கள் ஒரு தொடர்பாளராக (contact) இருந்தால்
நீங்கள் ஒரு வீட்டை இன்னொருவருடன் பகிர்ந்து கொண்டாலோ, அல்லது சோதனை முடிவு நேர்மறையாக வந்த ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருந்தாலோ, உங்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
நோய்த்தொற்று உறூதிப்படுத்தப்பட்ட ஒருவருடன் நீங்கள் தொடர்புகொண்டதிலிருந்து 7 நாட்களுக்கு உங்களுக்கு நோயறிகுறிகள் இருக்கின்றனவா என்பதை நீங்கள் கண்காணித்துவர வேண்டும், அத்துடன் பரிசோதனைகளைத் தவறாமல் செய்து கொண்டு வரவேண்டும். இந்தச் சமயத்தில், பின்வருவன உங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன:
- மருத்துவமனைகள், முதியோர் பராமரிப்பு இடவசதிகள் மற்றும் ஊனமுற்றோர் சேவைகளைத் தவிர்க்கவும்
- பொதுப் போக்குவரத்து மற்றும் வேலை, பள்ளி போன்ற உட்புற இடங்கள் போன்றவை உட்பட, வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் முகக்கவசம் ஒன்றை அணியவும்
- சாத்தியப்படும்போது, ஜன்னல்களைத் திறப்பதன் மூலம் சுத்தமான காற்றை உள்ளிடங்களுக்கு வரவிடவும்
மேலதிகத் தகவல்களைத் தொடர்பாளர்களுக்கான சரிபார்ப்புப் பட்டியல் என்ற பக்கத்தில் காணலாம்.
This page has been produced in consultation with and approved by: