உள்ளடக்கத்துக்குச் செல்

கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ko, mg, pl, ru
வரிசை 34: வரிசை 34:
[[பகுப்பு:இடங்கள்]]
[[பகுப்பு:இடங்கள்]]
[[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]]
[[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]]

[[ko:கோயில்]]
[[mg:கோயில்]]
[[pl:கோயில்]]
[[ru:கோயில்]]

15:58, 18 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

பகுப்பதம்

கோ + இல்

பெயர்ச்சொற்கள்

கோயில்(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 # சன்னதி;சந்நிதி;சன்னிதி;ஆலயம்;கோவில்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் temple
விளக்கம்
  • கோவிலா? கோயிலா?
தமிழில் உடம்படுமெய் என்று ஓர் இலக்கணச் செய்தி உளது. நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வருமாயின் அவ்விரண்டு உயிர்களையும் இணைத்திட (உடம்படுத்த)ப் பயன்படும் மெய்யெழுத்துகள் ய், வ் என்றிரண்டு. கோ (க்+ஓ) இல் (இ) கோ என்பதில் ஓ எனும் உயிரும், இல்லில் இ எனும் உயிரும் இணையுமிடத்தில் வ் எனும் மெய்யெழுத்து தோன்றும். ஆதலின் கோ + வ்+ இல் = கோவில் என்பதே சரியானது.
கோயில் என்னும்போது கோ+ய்+இல் = கோயில் என்று "ய்" உடம்படுமெய்யாக வந்துள்ளது. ஆனால் நன்னூல் இலக்கணம் என்ன சொல்லுகிறது என்றால்,
"இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும்
"ஏ முன் இவ்விருமையும் உடம்படு மெய் என்றாகும்"
கோவில் ஓகாரம் இருப்பதால் "வ்" உடன்படு மெய்தான் வர வேண்டும். ஆயினும் மக்கள் வழக்கத்தில் கோயிலும் இடம் பெற்றுவிட்டது. இது ஏற்கத்தக்க பிழையே.
மணி + அடித்தான் = மணியடித்தான் (இகரத்தின் முன் "ய்" உடம்படு மெய் வந்துள்ளது.
தே + ஆரம் = தேவாரம் (ஏகாரத்தின் முன் வ் உடம்படு மெய் வந்தது. அவனே + அழகன் (ஏகாரத்தின் முன் "வ்" உடன்படு மெய் வந்தது)
அவனே + அழகன் (ஏகாரத்தின் முன் "ய்" உடம்படுமெய் வந்தது. அவனேயழகன் என்றானது. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, தினமணிக்கதிர், 12 Dec 2010)

{ஆதாரம்} --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கோயில்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோயில்&oldid=1181455" இலிருந்து மீள்விக்கப்பட்டது