வருவாய் கோட்டம்
Appearance
(வருவாய் கோட்டங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வட்டங்களை உள்ளடக்கி வருவாய் கோட்டம் (REVENUE DIVISION) அல்லது வருவாய்த்துறைக் கோட்டம் அமைக்கப்படுகின்றன. இவற்றின் தலைமை அதிகாரிகளாக சார் ஆட்சியர் அல்லது துணை ஆட்சியர் பதவியில் உள்ளவர்களை வருவாய் கோட்டாட்சியர் பணியிடத்தில் நியமிக்கப்படுகிறார்கள். இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் சார் ஆட்சியர் (Sub Collector) என்றும், பதவி உயர்வு வழியாக நியமிக்கப்பட்டால் வருவாய்க் கோட்டாட்சியர் (Revenue Divisional Officer) என்றும் அழைக்கப்படுகிறார்.
வருவாய் கோட்டாட்சியரின் கடமைகளும், பொறுப்புகளும்
[தொகு]வருவாய் கோட்டாட்சியரின் கடமைகளையும், பொறுப்புகளையும், வருவாய்த் துறை நிர்ணயம் செய்துள்ளது.[1]
- வருவாய்க் கோட்ட அலுவலகங்களில் வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற வேண்டிய சில சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரைகளின்படி கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர் நிலையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
- மாவட்டத்தில் வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்க கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர்கள்தான் நியமிக்கப்படுகிறார்கள்.
- மாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவலகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள வருவாய்த்துறை அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.
இதையும் பார்க்க
[தொகு]- வருவாய் கிராமம்
- குறுவட்டம் (பிர்கா)
- வருவாய் வட்டம் (தாலுக்கா)
- வருவாய் கோட்டம்
- மாவட்டம்
- வருவாய் துறை
- வட்டாட்சியர்
- மண்டல துணை வட்டாட்சியர்
- வருவாய் ஆய்வாளர்
- கிராம நிர்வாக அலுவலர்
- மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "வருவாய் கோட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்". Archived from the original on 2017-10-24. பார்க்கப்பட்ட நாள் 2017-09-15.