உள்ளடக்கத்துக்குச் செல்

பேட் மேன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேட் மேன்
இயக்கம்டிம் பேர்ட்டென்
தயாரிப்புபீட்டர் கியூபெர்
ஜொன் பீட்டர்ஸ்
கதைசாம் ஹாம்
வோப் கேன்
வாரென் ஸ்காரென்
இசைடானி எல்ப்மேன்
பிரின்ஸ் (இசையமைப்பாளர்)
நடிப்புமைக்கேல் கீட்டன்
ஜாக் நிக்கோல்சன்
கிம் பேசிங்கர்
பில்லி டீ வில்லியம்ஸ்
விநியோகம்வார்னெர் ப்ரோஸ்.
வெளியீடுஜூன் 23, 1989
ஓட்டம்126 நிமிடங்கள்.
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$35,000,000 அமெரிக்க டாலர்கள்
பின்னர்பேட்மேன் ரிட்டேர்ன்ஸ்

பேட் மேன் (Batman)திரைப்படம் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.சிறந்த கலை அமைப்பிற்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற திரைப்படம் பேட்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.வோப் கேன் மற்றும் பில் பின்கெர் போன்றவர்களின் கண்டுபிடிப்பில் வெளிவந்த வவ்வால் மனிதன் இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர் சிறுவர்களுக்கான நாவல் முறையில் வெளிவந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கொலை கொள்ளைகள் என நிகழும் கோதாம் நகரத்தில் புதிதாக வந்த வௌவால் மனிதன் என்றழைக்கப்பட்டவனால் பொது மக்கள் காப்பாற்றப் படுகின்றனர்.இவ்வௌவால் மனிதன் யார் என்பதனை அறியப் பலரும் விருப்பம் கொண்டனர்.ஆனால் எவராலும் வௌவால் மனிதன் பற்றிய விடயங்கள் அறிய முடியாமல் இருந்தது.ஆனால் பிந்தைய காலங்களில் வௌவால் மனிதன் ஒரு சாதாரண மனிதனான புரூஷ் வேய்ன் என்பவர் என்பதனை அறிந்து கொள்கின்றாள் கோதாம் நகரப் புகைப்படம் எடுப்பவரான விக்கி வேல் என்னும் ஒரு பெண்.பின்னர் அங்கு பொதுமக்களின் அழிப்பிற்குக் காரணமாக விளங்குகின்றான் ஜோக்கர் என்றழைக்கப்பட்டவன் கோதாம் நகரின் அழிவைத் தானே ஏற்படுத்தப்போவாதாக அனைவரையும் பயமுறுத்துகின்றான்.மேலும் புகைப்படம் எடுப்பவளான விக்கி வேலை தன்னுடன் கடத்திச் செல்கின்றான். பேட்மேனை கோதாம் நகரத்தில் இருந்து அழித்து அந்நகரத்தினை தானே ஆளவேண்டும் என்ற அவாவினால் விக்கி வேலைக் கடத்திச் செல்கின்றான்.இதனை அறிந்த வவ்வால் மனிதனான புரூஷ் அவனை அழித்து விக்கியைக் காப்பாற்றுகின்றான்.