உள்ளடக்கத்துக்குச் செல்

நாகாலாந்தின் இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகாலாந்து மாநிலத்தின் இசை, நாகாலாந்து பழங்குடியினரின் நாட்டுப்புறப் பாடல்களாலும், பாரம்பரிய இசைக் கருவிகளாலும் அமைந்தது

நாட்டுப்புற இசை

[தொகு]

நாட்டுப்புறக் கதைகளும் பாடல்களும் தலைமுறைகள் தாண்டி நிலைக்கிறது. உழவுக் காலத்திற்கேற்ப தனித்துவமான பாடல்களும் உண்டு.[1] பல பாடல்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்தும், வீரர்களை புகழ்ந்தும் பாடப்படுகின்றன. பழங்கால காதல் கதைகளும் பாடல் வடிவம் பெற்றிருக்கின்றன.[2]

இசைக் கருவிகள்

[தொகு]

மேளம், மூங்கில்கள் செய்த புல்லாங்குழல், வயலின் உள்ளிட்ட கருவிகளை இயக்கி, இசையமைக்கின்றனர்.[3]

நடனம்

[தொகு]

பெரும்பாலான நடனங்களில் மக்கள் குழுக்களாய் இணைந்து ஆடுகின்றனர். சிலியாங் இனத்தில் ஆண்கள் மட்டும் நடனமாடும் வழக்கம் உள்ளது. மற்ற இனத்தவர் அனைவரும், ஆண்கள், பெண்களுடன் இணைந்தே ஆடுகின்றனர். நடனங்களில் கைத்தட்டுவதும், ஒலியெழுப்புவதும் முக்கியத்துவம் பெறுகின்றனர். வண்ணம் மிக்க ஆடைகளை அணிந்து நடனமாடுவர்.[4]

இசைப் பாடம்

[தொகு]

நாகாலாந்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பாரம்பரிய இசையும் ஒரு பாடமாக நடத்தப்படுகிறது. [5]

சான்றுகள்

[தொகு]
  1. Shikhu, Inato Yekheto. A Re-discovery and Re-building of Naga Cultural Values: An Analytical Approach with Special Reference to Maori as a Colonized and Minority Group of People in New Zealand (Daya Books, 2007) p 210
  2. Nagaland music- Rattle and Hum Music Society
  3. Mongro, Kajen & Ao, A Lanunungsang. Naga cultural attires and musical instruments (Concept Publishing Company, 1999), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7022-793-3
  4. Dance and Music பரணிடப்பட்டது 2009-09-04 at the வந்தவழி இயந்திரம் nagalandonline.com
  5. NBSE பரணிடப்பட்டது 2015-12-20 at the வந்தவழி இயந்திரம் official website

இணைப்புகள்

[தொகு]