ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம்
Appearance
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஜெயங்கொண்டத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,17,515 பேர் ஆவர். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 32,388 பேர் ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,906 பேர் ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]
- வெட்டியார்வெட்டு
- வங்குடி
- வாணதிரையன்பட்டினம்
- உட்கோட்டை
- துளாரங்குறிச்சி
- தத்தனூர்
- தண்டலை
- தழுதாழைமேடு
- த. சோழன்குறிச்சி
- சலுப்பை
- பிச்சனூர்
- பிராஞ்சேரி
- பிள்ளைப்பாளையம்
- பிலிச்சிக்குழி
- பெரியவளையம்
- பாப்பாக்குடி
- படநிலை
- முத்துசேர்வாமடம்
- மேலணிக்குழி
- கழுவந்தோண்டி
- கழுமங்கலம்
- காட்டகரம்
- கச்சிப்பெருமாள்
- கல்லாத்தூர்
- குருவாலப்பர்கோவில்
- குண்டவெளி
- கங்கைகொண்டசோழபுரம்
- இறவாங்குடி
- இளையபெருமாள்நல்லூர்
- இடையார்
- தேவாமங்கலம்
- அய்யப்பநாயக்கன்பேட்டை
- அங்கராயநல்லூர்
- ஆமணக்கந்தோண்டி
- ஆலத்திப்பள்ளம்
வெளி இணைப்புகள்
[தொகு]- அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்