உள்ளடக்கத்துக்குச் செல்

ஒடிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஓடிஸா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒடிசா
ஒரிசா

சின்னம்
பண்: பாண்டே உத்கலா சனானி
(அன்னை உத்கலா, நான் உன்னை வணங்குகிறேன்! )
ஒடிசா வரைபடம்
ஒடிசா வரைபடம்
நாடு இந்தியா
பகுதிகிழக்கு இந்தியா
நிறுவப்பட்ட நாள்1 ஏப்ரல் 1936 (ஒடிசா நாள்)
தலைநகரம் மற்றும்
மிகப்பெரிய நகரம்
புவனேசுவர்
மாவட்டங்கள்
அரசு
 • நிர்வாகம்ஒடிசா அரசு
 • ஆளுநர்கணேசி லால்
 • முதலமைச்சர்நவீன் பட்நாய்க்
 • சட்டப் பேரவைஒடிசா சட்டமன்றம்
ஓரவை (147 உறுப்பினர்கள்)
 • நாடாளுமன்ற தொகுதிகள்
 •  உயர் நீதிமன்றம்ஒரிசா உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்1,55,707 km2 (60,119 sq mi)
 • பரப்பளவு தரவரிசை8வது
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்4,19,74,218
 • தரவரிசை11வது
GDP (2021–22)
 • மொத்தம்5.86 டிரில்லியன் (US$73 பில்லியன்)
 • தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி1,27,383 (US$1,600)
மொழி
 • அலுவல்மொழிஒடியா மொழி[4]
நேர வலயம்ஒசநே+05:30 (இசீநே)
தொலைபேசி+91
ஐஎசுஓ 3166 குறியீடுIN-OR
வாகனப் பதிவுOR
மனித மேம்பாட்டுச் சுட்டெண்(2018)Increase 0.606[5]
medium · 32வது
படிப்பறிவு73.45%[6]
இணையதளம்odisha.gov.in
சின்னங்கள்
சின்னம்ஒடிசா அரசு சின்னம்
பாடல்பாண்டே உத்கலா ஜனானி
நடனம்
ஒடிசி
விலங்கு
கடமான்[7]
பறவை
பனங்காடை[8][9]
மீன்
மகாநதி மஹ்சீர்[10]
மலர்
அசோகு[7]
மரம்
அரச மரம்[7][11]

ஒடிசா (Odisha, பழைய பெயர் ஒரிசா (Orissa)), இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும்.[12] ஒடிசா, தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரம். கட்டக், கொனார்க், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள செகன்னாத் புரி கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி ஒடியா.[13] ஒடிசாவின் வடக்கில் சார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சத்தீசுகர் மாநிலமும் அமைந்துள்ளன.

மாவட்டங்கள்

[தொகு]
ஒடிசாவின் மாவட்டங்கள்

ஒரிசா 30 வருவாய் மாவட்டங்களை கொண்டது. அவையாவன:

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 41,974,218 ஆக உள்ளது. நகர்புறங்களில் 16.69% மக்களும்; கிராமப்புறங்களில் 83.31% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 14.05% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 21,212,136 ஆண்களும் மற்றும் 20,762,082 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 270 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 72.87% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.59% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.01% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,273,194 ஆக உள்ளது.[14]

சமயம்

[தொகு]

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 39,300,341 (93.63%) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 911,670 (2.17%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,161,708 (2.77%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 21,991 (0.05%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 9,420 (0.02%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 13,852 (0.03%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 478,317 (1.14%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 76,919 (0.18%) ஆகவும் உள்ளது.

மொழிகள்

[தொகு]

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஒரியா மொழியுடன், வங்காளம், தெலுங்கு, இந்தி மற்றும் உருது மொழிகளும் பேசப்படுகிறது.

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

[தொகு]

ஒரிசாவில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்; கொனார்க் சூரியக் கோயில், புரி செகன்நாதர் கோயில் மற்றும் லிங்கராசர் கோயில்

விழாக்கள்

[தொகு]

ஒரிசாவின் புரி நகரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நடைபெறும் புரி செகன்நாதர் தேரோட்டம் புகழ் வாய்ந்தது.

கலை

[தொகு]

ஒரிசா மாநிலத்தின் சிறப்பான நடனம் ஒடிசி ஆகும்.

போக்குவரத்து

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.census2011.co.in/census/state/orissa.html
  2. https://www.census2011.co.in/census/state/orissa.html
  3. "Odisha Budget analysis". PRS India. 18 February 2020. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
  4. "Report of the Commissioner for linguistic minorities: 47th report (July 2008 to June 2010)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. pp. 122–126. Archived from the original (PDF) on 13 May 2012. பார்க்கப்பட்ட நாள் 16 February 2012.
  5. "Sub-national HDI – Subnational HDI – Global Data Lab". globaldatalab.org. பார்க்கப்பட்ட நாள் 17 April 2020.
  6. "State of Literacy" (PDF). Census of India. p. 110. Archived (PDF) from the original on 6 July 2015. பார்க்கப்பட்ட நாள் 5 August 2015.
  7. 7.0 7.1 7.2 Blue Jay (PDF), Orissa Review, 2005, p. 87
  8. "Palapitta: How a mindless dasara ritual is killing our state bird palapitta – Hyderabad News". The Times of India. 29 September 2017. பார்க்கப்பட்ட நாள் 7 October 2019.
  9. Blue Jay (PDF), Orissa Review, 2005
  10. "State Fishes of India" (PDF). National Fisheries Development Board, Government of India. பார்க்கப்பட்ட நாள் 25 December 2020.
  11. Pipal(Ficus religiosa) – The State Tree of Odisha (PDF), RPRC, 2014
  12. ஒடிசா என பெயர் மாற்றத்தை இந்திய அரசின் மேலவை ஏற்றுக்கொண்டு குடியரசு தலைவர் பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். எனவே இது இனி எல்லா அரசு உத்தரவுகளிலும் ஒடிசா என்றே அழைக்கப்படும்இந்திய மேலவையில் தீர்மானம் ஏற்பு பரணிடப்பட்டது 2011-12-21 at the வந்தவழி இயந்திரம்குடியரசு தலைவர் ஒப்புதல்
  13. ஒரியா ஒடியா என மாற்றம்
  14. http://www.census2011.co.in/census/state/orissa.html
  15. http://indiarailinfo.com/departures/bhubaneswar-bbs/238
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடிசா&oldid=3806561" இலிருந்து மீள்விக்கப்பட்டது