உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011

← 2009 17 மார்ச் 2011, 23 சூலை 2011, 8 அக்டோபர் 2011 2018 →

322 உள்ளூராட்சி சபைகளுக்கு 4,327 இடங்கள்
வாக்களித்தோர்65.52%
  First party Second party Third party
 
தலைவர் மகிந்த ராசபக்ச ஆர். சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்க
கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
மொத்த வாக்குகள் 4,821,203 255,078 2,710,222
விழுக்காடு 56.45% 2.99% 31.73%
உறுப்பினர்கள் 2,611 274 1,157
உள்ளூராட்சி சபைகள் 270 32 9

2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இலங்கையில் 2011, மார்ச் 17, சூலை 23, அக்டோபர் 8 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இலங்கை முழுவதிலும் மொத்தம் உள்ள 335 உள்ளூராட்சிச் சபைகளில் 322 உள்ளூராட்சி சபைகளுக்கு 4,327 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடைபெற்றன. மொத்தம் 13.7 மில்லியன் இலங்கையர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். மீள்குடியிருப்பு மற்றும் மிதிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையாததால், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய இரண்டு சபைகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 2008, 2009 ஆம் ஆண்டுகளில் தேர்தல்கள் நடந்த 11 உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலங்கள் இன்னும் முடிவடையாததால் அச்சபைகளுக்கும் 2011ல் தேர்தல்கள் நடைபெறவில்லை.

ஆரம்பத்தில் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்த வேட்பு மனு கோரப்பட்டது. இலங்கையில் நடைபெறும் துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகள் காரணமாக ஏனைய 23 சபைகளுக்கு தேர்தல்கள் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட 301 சபைகளில் 452 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன[1]. இதற்கு எதிராக பல கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து யாழ்ப்பாண மாவட்டம் உட்பட 67 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு அவற்றில் 65 சபைகளுக்கு 2011 சூலை 23 ஆம் நாள் தேர்தல்கள் நடந்தன. மேலும் 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் 2011 அக்டோபர் 8 இல் இடம்பெற்றன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 270 சபைகளைக் கைப்பற்றியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 32 சபைகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 9 சபைகளையும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 5 சபைகளையும், சுயேட்சைக் குழு ஒரு சபையையும் கைப்பற்றியது[2]. 5 உள்ளூராட்சி சபைகளில் எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை, ஆனாலும் ஐமசுகூ 3 சபைகளிலும், ஐதேக ஒரு சபையிலும் (கொழும்பு), மமமு ஒரு சபையிலும் அதிக இடங்களைக் கைப்பற்றியது.

முன்னைய தேர்தல்களைப் போலவே இத்தேர்தலிலும் தேர்தல் வன்முறைகள் பரந்த அளவில் இடம்பெற்றன.

முடிவுகள்

[தொகு]

முதல் கட்டம் - 17 மார்ச் 2011

[தொகு]

ஐமசுகூ 205 உள்ளூராட்சி சபைகளையும் (தேசிய காங்கிரசு சார்பில் 2 இடங்கள் உட்பட), ததேகூ 12 சபைகளையும், ஐதேக 9 சபைகளையும், முகா 4 இடங்களையும், ஐமசுகூ ஆதரவில் சுயேட்சைக் குழு ஒர் இடத்தையும் கைப்பற்றின[3][4] [5][6]. 3 சபைகளை எக்கட்சியும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை. ஆனாலும் இரண்டில் ஐமசுகூயும், ஒன்றில் UCPF உம் பெரும்பான்மையைப் பெற்றன.

கூட்டணிகள் வாக்குகள் % இடங்கள் உள்ளூராட்சி
சபைகள்
ஐமசுகூ/தேகா 3,352,483 55.90% 1,854 205
ததேகூ 70,171 1.17% 76 12
ஐதேக 2,031,891 33.88% 889 9
ஜவிபெ 181,285 3.02% 55 0
ஏனையோர் 361,977 6.04% 158 5
கட்டுப்பாட்டில் வராதவை 3
மொத்தம் 5,997,807 100.00% 3,032 234

இரண்டாம் கட்டம் - 23 சூலை, 2011

[தொகு]

ஐமசுகூ 44 உள்ளூராட்சி சபைகளையும், ததேகூ 20 சபைகளையும் (தவிகூயின் 2 இடங்கள் உட்பட) கைப்பற்றின[7][8]. ஒரு சபையை எக்கட்சியும் கைப்பற்றவில்லை, ஆனாலும் ஐமசுகூ பெரும்பான்மை இடங்களைப் பெற்றது.

கூட்டணிகள் வாக்குகள் % இடங்கள் உள்ளூராட்சி
சபைகள்
ஐமசுகூ 943,724 61.21% 512 44
ததேகூ/தவிகூ 174,996 11.35% 195 20
ஐதேக 329,031 21.34% 137 0
ஜவிபெ 42,190 2.74% 13 0
ஏனையோர் 51,863 3.36% 18 0
கட்டுப்பாட்டுக்குள் வராதவை 1
மொத்தம் 1,541,804 100.00% 875 65

மூன்றாம் கட்டம் - 8 அக்டோபர், 2011

[தொகு]

கொழும்பு மாநகரசபை உட்பட எஞ்சியுள்ள 16 மாநகர சபைகள் (அநுநாதபுரம், பதுளை, கொழும்பு, தெகிவளை-கல்கிசை, காலி, கம்பகா, கல்முனை, கண்டி, குருனாகலை, மாத்தளை, மாத்தறை, மொரட்டுவை, நீர்கொழும்பு, நுவரேலியா, இரத்தினபுரி, சிறீ ஜயவர்த்தனபுர கோட்டே, அம்பாந்தோட்டை), ஒரு நகரசபை (கொலன்னாவை), மற்றும் 5 பிரதேச சபைகளுக்கான (அம்பாந்தோட்டை, கங்கவட்ட கோறளை, கொட்டிகாவத்த - முல்லேரியா, குண்டசாலை, சூரியவெவெ) வேட்பு மனுக்கள் 2011 ஆகத்து 18 முதல் 25 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்களம் 2011 ஆகத்து 4 இல் அறிவித்தது[9]. தேர்தல் 2011 அக்டோபர் 8 இல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டது[10]. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று சபைகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை[11].

மொத்தம் 23 சபைகளில் 21 இல் ஐமசுகூ வெற்றி பெற்றது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகரசபையைக் கைப்பற்றியது.[12][13] கொழும்பு மாநகர சபையில் எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. ஐதேக ஆகக்கூடிய இடங்களைக் கைப்பற்றியது.

கூட்டணிகள் வாக்குகள் % இடங்கள் உள்ளூராட்சி
சபைகள்
ஐமசுகூ 524,996 51.94% 245 21
ஐதேக 349,300 34.56% 131 0
ஜேவிபி 19,027 1.88% 6 0
ததேகூ 9,911 0.98% 4 0
ஏனையோர் 107,542 10.64% 34 1
அறுதிப் பெரும்பான்மை பெறாத சபை(கள்) 1
மொத்தம் 1,010,776 100.00% 420 23

மொத்த முடிவுகள்

[தொகு]
கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % உறுப்பினர்கள் உள்ளூராட்சி
சபைகள்
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி1 4,821,203 56.45% 2,611 270
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு5 255,078 2.99% 275 32
  ஐக்கிய தேசியக் கட்சி 2,710,222 31.73% 1,157 9
  இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்4 140,727 1.65% 72 5
சுயேட்சைக் குழு 219,998 2.58% 77 1
  ஜனதா விமுக்தி பெரமுன 242,502 2.84% 74 0
  மலையக மக்கள் முன்னணி 41,798 0.49% 21 0
ஜனநாயக மக்கள் முன்னணி 34,423 0.40% 10 0
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்2 17,869 0.21% 6 0
இலங்கை சனநாயக ஒற்றுமைக் கூட்டணி 13,000 0.15% 6 0
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி 15,772 0.18% 5 0
லங்கா சமசமாசக் கட்சி3 9,872 0.12% 4 0
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 4,622 0.05% 3 0
சனநாயக ஐக்கியக் கூட்டணி 7,830 0.09% 2 0
இலங்கை லிபரல் கட்சி 5,273 0.06% 2 0
பிரஜைகள் முன்னணி 903 0.01% 2 0
ஏனையோர் 12,278 0.14% 0 0
கட்டுப்பாட்டில் வராதவை 5
செல்லுபடியான வாக்குகள் 8,541,092 100.00% 4,327 322
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 405,279
மொத்த வாக்களிப்பு 8,946,371
பதியப்பட்ட வாக்காளர்கள் 13,653,524
Turnout 65.52%
மூலம்: தேர்தல்கள் திணைக்களம் பரணிடப்பட்டது 2011-05-11 at the வந்தவழி இயந்திரம், தேர்தல்கள் திணைக்களம் பரணிடப்பட்டது 2011-08-07 at the வந்தவழி இயந்திரம்

1. ஐமசுகூ இரண்டு சபைகளில் தேசிய காங்கிரசின் கீழும், 294 சபைகளில் ஐமசுகூ என்ற பெயரிலும் போட்டியிட்டது.
2. அகில இலங்கை முஸ்லும் காங்கிரஸ் 4 சபைகளில் தனித்துப் போட்டியிட்டது, ஏனையவற்றில் ஐமசுகூ இன் கீழ் போட்டியிட்டது
3. லங்கா சமசமாசக் கட்சி 2 சபைகளில் தனித்தும் ஏனையவற்றில் ஐமசுகூ இன் கீழும் போட்டியிட்டது.
4. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 51 சபைகளில் தனித்தும் ஏனையவற்றில் ஐமசுகூ இன் கீழும் போட்டியிட்டது.
5. ததேகூ 2 சபைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி இன் கீழும் 40 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழும் போட்டியிட்டது.

அனைத்து தேர்தல் முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Perera, Chaminda (28 January 2011). "LG polls on March 17". Daily News, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 31 ஜனவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110131184933/http://www.dailynews.lk/2011/01/28/pol01.asp. 
  2. Daysri, Gomin (26 சூலை 2011). "WHAT THE local council ELECTION RESULTS FORETELL". டெய்லி மிரர் இம் மூலத்தில் இருந்து 2012-03-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120330020928/http://print.dailymirror.lk/opinion1/51122.html. 
  3. Sandun A. Jayasekera and Kelum Bandara (19 மார்ச் 2011). "A Resounding victory for UPFA". டெய்லி மிரர் இம் மூலத்தில் இருந்து 2011-03-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110322053355/http://print.dailymirror.lk/news/front-page-news/38687.html. 
  4. "UPFA sweeps polls, bags 205 out of 234 councils ITAK second, UNP third, JVP nowhere". தி ஐலண்ட். 18 மார்ச் 2011 இம் மூலத்தில் இருந்து 2011-08-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110810041132/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=21008. 
  5. "MR hat-trick as UNP loses by 10 wickets". சண்டே டைம்ஸ்]]. 20 மார்ச் 2011. http://www.sundaytimes.lk/110320/Columns/political.html. 
  6. "President’s leadership and personality clinch UPFA victory". த நேஷன். 20 மார்ச் 2011 இம் மூலத்தில் இருந்து 2011-09-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110901190101/http://www.nation.lk/2011/03/20/newsfe1.htm. 
  7. "UPFA wins in South, TNA sweeps North". டெய்லி மிரர். 25 சூலை 2011 இம் மூலத்தில் இருந்து 2012-03-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120330021028/http://print.dailymirror.lk/news/front-page-news/51041.html. 
  8. "Impressive win for UPFA, TNA victorious in North". தி ஐலண்ட். 25 சூலை 2011 இம் மூலத்தில் இருந்து 2012-10-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022080841/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=30912. 
  9. "Other LG polls in October". டெய்லி மிரர். 5 ஆகத்து 2011 இம் மூலத்தில் இருந்து 2012-03-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120330021156/http://print.dailymirror.lk/news/front-page-news/52188.html. 
  10. "Elections to 23 LG bodies on Oct. 15". தி ஐலண்ட். 19 ஆகத்து 2011. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=32728. [தொடர்பிழந்த இணைப்பு]
  11. "புதுக்குடியிருப்பு - கரைதுறைபற்று: தேர்தலை நடத்தும் சூழல் இல்லை". தினகரன். 20 ஆகத்து 2011. http://www.thinakaran.lk/2011/08/20/?fn=n1108204. [தொடர்பிழந்த இணைப்பு]
  12. "UPFA bags 21 out of 23 LG bodies". தி ஐலண்ட். 10 அக்டோபர் 2011 இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303232134/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=36511. 
  13. "UPFA sweeps polls but lose Colombo". டெய்லிமிரர். 9 அக்டோபர் 2011. http://www.dailymirror.lk/news/14008-upfa-sweeps-polls-but-lose-colombo.html. 


வெளி இணைப்புகள்

[தொகு]