உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாமலை குப்புசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ணாமலை குப்புசாமி
அண்ணாமலை (2024)
தமிழக மாநில தலைவர், பாரதிய சனதா கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
16 சூலை 2021
முன்னையவர்எல். முருகன்
தமிழக மாநில துணை தலைவர், பாரதிய சனதா கட்சி
பதவியில்
29 ஆகத்து 2020 – 7 சூலை 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அண்ணாமலை

சூன் 4, 1984 (1984-06-04) (அகவை 40)[1]
தொட்டம்பட்டி, சின்னதாராபுரம், கரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா[2]
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியர்
துணைவர்அகிலா சுவாமிநாதன்
பிள்ளைகள்2
பெற்றோர்குப்புசாமி கவுண்டர்
பரமேஸ்வரி
வாழிடம்(s)கரூர், தமிழ்நாடு
முன்னாள் கல்லூரிபூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
இந்திய மேலாண்மை கழகம் லக்னோ
வேலைஅரசியல்வாதி
தொழில்முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி,
விவசாயி

அண்ணாமலை குப்புசாமி (Annamalai Kuppusamy) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் காவல்துறை அதிகாரியும் ஆவார்.[3][4] இவர் தமிழ்நாட்டின் பாரதிய சனதா கட்சியின் மாநிலத் தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 8 சூலை 2021 இல் நியமிக்கப்பட்டார்.[5]

ஆரம்ப கால மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

இவர் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் என்ற சிற்றூரை அடுத்த தொட்டம்பட்டி என்ற கிராமத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக விவசாயக் குடும்பத்தில் 4 சூன் 1984 ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர் குப்புசாமி கவுண்டர் மற்றும் பரமேஸ்வரி ஆகியோர் ஆவர்.[6]

அண்ணாமலை கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து, பொது சேர்க்கைத் தேர்வில் தேர்ச்சி பெற்று இவர் முதுநிலை வணிக நிர்வாகப் படிப்பை உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில் முடித்தார். பின்னர் மத்திய அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் 2011 ஆம் ஆண்டிற்கான இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றார்.[7]

இவர் தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.[8] இவர் அகிலா சுவாமிநாதன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[9]

காவல்துறை பணி

அண்ணாமலை கருநாடக மாநில காவல்துறை பணியாளராக 2011 ஆண்டு சேர்ந்தார். 2013 ஆம் ஆண்டு உடுப்பி மாவட்டம் கர்கலாவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பதவி ஏற்று கொண்டார். பின்னர் உடுப்பி மற்றும் சிக்கமகளூரு மாவட்டங்களில் காவல்துறைக் கண்காணிப்பாளராக பதவி வகித்த இவர், அக்டோபர் 2018 இல் பெங்களூர் நகர தெற்கு காவல் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். 2019ஆம் ஆண்டு இவர் தனது பணியை இராசினாமா செய்தார்[10]

விவசாயம் மற்றும் சமூகப் பணி

இவர் ஒரு பேச்சாளராக, இயற்கை விவசாயியாக ஆர்வம் காட்டினார். இவர் ஒன்றிய அரசுப்பணி பயிற்சி மையம், தலைவர்கள் அறக்கட்டளை மற்றும் பல இலாப நோக்கற்ற அறக்கட்டளைகளையும் தொடங்கினார்.[11]

அரசியல் வாழ்க்கை

2024 இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உடன் ஒரு நிகழ்ச்சியில் அண்ணாமலை

அண்ணாமலை ராசுடிரிய சுயம்சேவாக் சங்க சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார்.[12][13] தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாரதிய சனதா கட்சி தலைவர் அமித் சா ஆகியோரை சந்தித்து அரசியலில் ஒன்றிணைந்து வாழ்க்கையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புவதாகவும் தன்னை வெளிப்படுத்தினார்.[14] 25 ஆகத்து 2020 அன்று, இவர் தேசிய பொதுச் செயலாளர் பி. முரளிதர ராவ், கருநாடக அமைச்சரான சி. டி. இரவி, தமிழகத் தலைவர் லோ. முருகன் ஆகியோர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பாரதிய சனதா கட்சியில் இணைந்தார்.[15]

இவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 24,816 வாக்கு வித்தியாசத்தில் திமுகவில் போட்டியிட்ட இரா. இளங்கோவிடம் தோற்றார்.[16][17] முருகன் மத்திய அமைச்சரான பிறகு, இவர் தமிழ்நாட்டின் பாரதிய சனதா கட்சியின் மாநிலத் தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 8 சூலை 2021 இல் நியமிக்கப்பட்டார்.[18][19] 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 1,18,068 வாக்கு வித்தியாசத்தில் திமுகவில் போட்டியிட்ட கணபதி பி. இராஜ் குமாரிடம் தோற்றார்.[20]

போட்டியிட்ட தேர்தல்கள்

சட்டமன்றத் தேர்தல்

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் விழுக்காடு எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி வாக்கு சதவீதம்
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அரவக்குறிச்சி பா.ஜ.க தோல்வி 68,553 38.71% [21] இரா. இளங்கோ திமுக 52.72% [21]

மக்களவைத் தேர்தல்

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் விழுக்காடு எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி வாக்கு சதவீதம்
2024 இந்தியப் பொதுத் தேர்தல் கோயம்புத்தூர் பா.ஜ.க தோல்வி 450,132 32.8% [22] கணபதி ப. ராஜ்குமார் திமுக 41.4% [22]

திரைப்படவியல்

அண்ணாமலை கன்னட மொழியில் ‘அரபி’ என்ற படத்தில் மாற்றுத்திறனாளி நீச்சல்காரனுக்கு நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார்.[23]

மேற்கோள்கள்

  1. T Muruganandham (8 July 2021). "It's official: Former IPS officer Annamalai Kuppusamy is new chief of Tamil Nadu BJP". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  2. "தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்". இந்து தமிழ். 8 சூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  3. "Ex-IPS officer Annamalai Kuppusamy appointed Karnataka BJP vice president". ANI news (in ஆங்கிலம்). 29 August 2020. Archived from the original on 25 November 2022. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.
  4. "Ex-IPS Officer Annamalai Kuppusamy Appointed Karnataka BJP Vice President". Businessworld (in ஆங்கிலம்). 29 August 2020. Archived from the original on 2 February 2023. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  5. "தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்". தினமணி. 8 சூலை 2021. Archived from the original on 2 February 2023.
  6. "Why Annamalai was chosen over senior leaders to lead BJP in Tamil Nadu". The News Minute (in ஆங்கிலம்). 16 July 2021. Archived from the original on 5 July 2023. பார்க்கப்பட்ட நாள் 26 September 2021.
  7. "Bengaluru DCP 'Singam' Annamalai quits, says IPS officer's death made him 're-examine' life". The News Minute (in ஆங்கிலம்). 25 May 2019. Archived from the original on 26 January 2023. பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
  8. "Annamalai Kuppusamy: Age, Biography, Education, Wife, Caste, Net Worth & More". Oneindia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  9. "Meet K Annamalai, the youngest Tamil Nadu BJP president ever". livemint (in ஆங்கிலம்). 8 July 2021. Archived from the original on 5 February 2024.
  10. "Ace IPS officer Annamalai puts in papers". Deccan Herald (in ஆங்கிலம்). 29 May 2019. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  11. "Why Tamil Nadu BJP chief Annamalai traded in the quiet life he dreamt of for 'toxic' politics". The Print (in ஆங்கிலம்). 28 February 2023. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  12. "'Karnataka's Singham' Annamalai to join RSS and start 'shakha' in Coimbatore?". Asianet News Network (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
  13. "Political plunge? No plans, says Annamalai". Deccan Herald (in ஆங்கிலம்). 22 May 2019. பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
  14. Upadhyaya, Prakash (18 May 2020). "Ex-IPS officer K Annamalai announces his entry to politics, to contest next election from Tamil Nadu". IBT Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
  15. "முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்". இந்து தமிழ். 25 ஆகத்து 2020. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  16. "Ex-IPS officer Annamalai sweats it out in Aravakurichi". Deccan Herald (in ஆங்கிலம்). 26 March 2021. பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
  17. "அரவக்குறிச்சி சட்டசபைத் தேர்தல் முடிவு". ஒன் இந்தியா.
  18. "Ex-IPS officer, 'Singham' Annamalai, is BJP's new chief in Tamil Nadu". Hindustan Times (in ஆங்கிலம்). 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
  19. "Meet K Annamalai, the youngest Tamil Nadu BJP president ever". Livemint (in ஆங்கிலம்). 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 26 October 2021.
  20. "General Election to Parliamentary Constituencies: Trends & Results June-2024 Parliamentary Constituency 20 - COIMBATORE (Tamil Nadu)". இந்தியத் தேர்தல் ஆணையம்.
  21. 21.0 21.1 "2021 Aravakurichi Tamilnadu Elections".
  22. 22.0 22.1 "Detailed results and vote counts for the Coimbatore constituency".
  23. "TN BJP Leader K Annamalai plays a coach in a Kannada film". Times Now (in ஆங்கிலம்). 16 March 2024. பார்க்கப்பட்ட நாள் 1 April 2024.