உள்ளடக்கத்துக்குச் செல்

விழித்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
விழித்திரை
மனிதரின் வலது கண். மிருகங்கள் பலவற்றின் கண்கள் மனிதக் கண்ணிலிருந்தும் வேறுபட்டவை.
கிரேயின்

subject #225 1014

தமனி central retinal artery
ம.பா.தலைப்பு Retina

விழித்திரை (Retina) என்பது நமது கண்ணில் உட்கடைசி உறையாகும். இது மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.[1] விழி வெளிப்படலம், திரவம், லென்ஸ், கூழ்ம திரவம் வழியாக வரும் ஒளியானது இதில் படுகிறது. இந்த ஒளி சில மின்வேதி மாற்றங்களை உண்டு செய்து மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. மூளை இத் தகவல்களை உருவங்களாக மாற்றுகிறது.

எல்லாப் பொருட்களின் பிம்பமும் விழித்திரையில் தலை கீழாகத் தான் விழும். மூளை தான் இவற்றை நேராக்குகிறது.

விழித்திரையில் பத்து அடுக்குகள் உள்ளன.[2] வெளியிலிருந்து உள்ளாக அவை பின்வருமாறு,

  1. நிறமிகள் கொண்ட எபிதீலியம் உள்ள அடுக்கு
  2. ஒளி உணர்விகளான கூம்புகளும் குச்சிகளும் உள்ள அடுக்கு
  3. வெளிப்புற எல்கை அடுக்கு
  4. வெளிப்புற உட்கரு அடுக்கு
  5. வெளிப்புற மடிப்பு அடுக்க
  6. உட்புற உட்கரு அடுக்கு
  7. உட்புற மடிப்பு அடுக்கு
  8. நரம்பணுத் திரள் அடுக்கு
  9. நரம்பு இழை அடுக்கு
  10. உட்புற எல்கை அடுக்கு

2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் விழித்திரை மெய்மம் அல்லது திசுவை மறு வளர்ச்சி செய்யும் புதிய நுட்பத்தை விளக்கியுள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. "Sensory Reception: Human Vision: Structure and function of the Human Eye" vol. 27, Encyclopaedia Britannica, 1987
  2. The Retinal Tunic. Virginia-Maryland Regional College of Veterinary Medicine
  3. New techniques regrow lens, cornea tissue
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழித்திரை&oldid=2682345" இலிருந்து மீள்விக்கப்பட்டது