சூடும் மலர்கள்
Appearance
பல வகையான மலர்கள் தமிழ்நாட்டில் அணியும் பொருளாகப் பயன்படுகின்றன. மகளிர் கூந்தலை வாரிப் பூச்சூடிக்கொள்கின்றனர். அது அவர்களுக்குப் பொலிவைத் தருகிறது. ஆண்களும் போர்க்காலத்தில் அடையாளப் பூவாக மலர்களை அணிந்துகொள்வர். கட்டித் தலையில் அணிந்துகொள்ளும் பூவுக்குக் கண்ணி என்று பெயர். கழுத்தில் அணிவது மாலை. சில மலர்களைக் கொத்தோடு பறித்துத் தனியே கூந்தலிலும், காதிலும், மூக்கிலும் அணிந்துகொள்வதும் உண்டு. மணத்துக்காகவும், அழகுக்காகவும் இவை சூடிக்கொள்ளப்படுகின்றன.
மக்கள் சூடும் மலர்கள் - காட்சிக்காக
-
செவ்வந்தி
-
தளவம் என்னும் செம்முல்லை
-
தளவம் மலர்ந்த பூவின் கண்ணி
-
சம்பங்கி
-
முல்லை கண்ணி
-
முல்லை
-
மல்லிகை
-
மரமல்லிகை
சிலைகளுக்குச் சார்த்தும் மலர்கள்
-
அரளி