உள்ளடக்கத்துக்குச் செல்

எழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HRoestBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:46, 26 செப்டெம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (r2.6.5) (தானியங்கிஇணைப்பு: su:Nulis)
எழுதுவதைக் காட்டும் ஒரு படம்

எழுத்து அல்லது எழுதுதல் (writing) என்பது, ஒரு தொகுதி குறியீடுகளைப் பயன்படுத்தி மொழியை வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். இக் குறியீடுகளின் தொகுதி எழுத்து முறைமை எனப்படுகிறது. இது, வரைதல்கள், ஓவியங்கள் போன்ற படவடிவங்களிலிருந்தும், மொழியைப் பதிவுசெய்யப் பயன்படும் காந்தநாடா போன்ற வரிவடிவம் அல்லாத பிற வடிவங்களிலிருந்தும் வேறுபடுகின்றது. கணக்கு வைத்துக் கொள்ளவேண்டிய தேவை காரணமாகவே "எழுத்து" தோன்றியது எனப்படுகிறது. கிமு நான்காம் நூற்றாண்டளவில் வணிகத்தினதும், நிர்வாகத்தினதும் சிக்கல்தன்மை, நினைவாற்றலின் வலுவையும் தாண்டி வளர்ந்தபோது எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது. சுருங்கக் கூறின், சொல் என்பது 'ஒலியின் வரி வடிவமே' ஆகும். வையகத்தில் உள்ள பெரும்பாலான ஒலிகளுக்கு எழுத்துக்கள் உள்ளன. பல ஒலிகளுக்கு எழுத்துக்களே இல்லை எனலாம் (உம். யானையின் பிளிரல்).

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்து&oldid=883943" இலிருந்து மீள்விக்கப்பட்டது