யனோமாமி
யனோமாமி பெண்ணும் சேயும், சூன் 1997 | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(approximately 35,338[1]) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
வெனிசுவேலா (southeastern) | 16,000 (2009) |
பிரேசில் (northern) | 19,338 (2011) |
மொழி(கள்) | |
யனோமாமி மொழி | |
சமயங்கள் | |
shamanism |
யனோமாமி (Yanomami) என்பவர்கள் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடிகள் மக்கள் ஆவர். [2] ஒன்பது நாடுகளிலும் பரவிக்கிடக்கும் அமேசான் காடுகளில் வெனிசுவேலா, மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் அமைந்துள்ள 250 கிராமங்களில் 3500 யனோமாமி பழங்குடி மக்கள் வாழுகிறார்கள்.
பெயர்க்காரணம்
[தொகு]பழங்குடிகள் என்றாலே நரமாமிசம் உண்பவர்கள் என்ற அச்சம் மனிதர்களிடத்தில் உள்ளது. ஆனால் யனோமாமி மக்கள் நாகரீக மனிதர்களிடம் ஒன்றுபட்டு வாழுவதால் இவர்களுக்கு யனோமாமி மக்கள் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
மொழி
[தொகு]வெனிசுவேலா நாட்டின் ஓரினொகொ ஆற்றின் பகுதிகளில் வாழும் இந்த இனத்தவர்கள் சனுமா என்ற மொழியைப் பேசுகிறார்கள். மேலும் இவர்கள் சரியானா (Shiriana language), நினம் (Ninam language), மற்றும் யனுமாமன் (Yanomaman languages) போன்ற மொழிகளுடன் மேலும் பல மொழிகளைப் பேசும் இனக்குழுக்களாக இருக்கிறார்கள்.[3][4]
வரலாறு
[தொகு]1759 ஆம் ஆண்டு மேற்கத்திய நாட்டினரான அபோலியர் (Apolinar Diez De La Fuente) வெளியிட்ட பயணக்குறிப்பு ஒன்றில் வெனிசுலாப் யனோமாமி மக்களைப் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். [5] இவர் பார்த்த மக்கள் மிகவும் தைரியம் அற்றவர்களாக இருந்தார்கள். இவர்களை முதலில் இந்தியர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தார், பின்னர் இவர்கள் இந்திய இனக்குழுக்கழுடன் ஒத்துவரவில்லை என முடிவு செய்தார்.
ஏறத்தாள 1630 முதல் 1720 வரையான காலகட்டங்களில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆற்றின் கரையோரங்களில் வாழ்ந்த இந்த மக்கள் போர்த்துகீசிய வீரர்களிடம் அடிமைப்பட்டு கிடந்துள்ளனர் என்று குறிப்பிட்டாலும் இவை சரியான விடயம் இல்லை என்று கூறப்படுகிறது. [6]
1950 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் தூதுக்குழு, இயேசு சபை, மேலும் சலேசிய சபை ஆகியவை இணைந்து நடத்திய தொடர் தேடுதலில் இவர்களுடனான வெளி தொடர்பு அதிகரித்தது. [7]
1970 ஆம் ஆண்டுவாக்கில் பிரேசில் அரசு இவர்களுக்காக இராணுவ உதவியுடன் தேசிய ஒருமைப்பாட்டு திட்டம் கொண்டுவரப்பட்டு உதவிசெய்ய முடுவுசெய்யப்பட்டது. மேலும் 73 ஆண்டு முதல் 76 ஆம் ஆண்டுக்காக இந்த திட்டங்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த (1975) கால கட்டத்தில் அமேசான் காட்டுப்பகுதியில் செய்த ஆராச்சியில் ஏறாளமான கணிமவளங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு கனிமவள ஆரசியாளர்கள் தங்க சுரங்கத்தைக் கண்டுபிடித்தனர். இங்கு 1987ஆம் ஆண்டும் 1990 ஆம் ஆண்டும் பிரான்சுகோ நதிக்கு அருகில் தங்கசுரங்கம் தோன்டப்பட்டது. இந்த சுரங்கங்கள் தோண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் பழங்குடிகளின் 30,000 மக்களின் குடியிருப்புகள் இருந்தன. 1990 ஆம் ஆண்டு முதல் இந்த மக்கள் வாழும்பகுதியில் சுரங்கம் வெட்டத்துவங்கி இவர்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டதுடன் இயற்கைச் சூழல் மாசுபாடு அடைந்து பெரும் துன்பத்திற்கு இந்த மக்கள் உட்படுத்தப்படுகிறார்கள்.[8]
யனோனாமி மக்கள் வாழும் பகுதிகளில் சாலை அமைத்தல், பிரேசிலின் எல்லையைப் பாத்துகாக்க இராணுவ வீரர்களின் கூடாரங்கள் அமைப்பது, விவசாய இடங்களை விரிவு படுத்துவது, கால்நடை வளர்ப்போர்கலின் ஆக்கிரமிப்பு என இவர்களின் இடங்கள் சூரையாடப்பட்டது. 1978 ஆம் ஆண்டு இவர்களுக்கென ஒரு சார்பு ஆணையம் அமைக்கப்பட்டது. [9] முதலில் இந்த அமைப்பு இவர்களுக்கென ஒரு பூங்கா அமைக்க உறுவாக்கப்பட்டு, இவர்களின் உரிமைக்காக போராடும் அமைப்பாக உறுவெடுத்தது. இது ஒரு அரசு சார்பற்ற லாப நோகமற்ற அமைப்பாகும். இந்த அமைப்பின் 13 வருட போராட்டத்திற்குப்பின் 1991 பிரேசில் அரசு அதிகாரபூர்வ எல்லை நிர்ணயம் செய்து பின்னர் 1992 ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இவர்களின் பயன்பாட்டிற்காக 96.650 சதுர கிலோமீட்டர் நிலங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த பகுதிகள் பிரேசில் நாட்டின் ரோமாரினா மாநிலம் மற்றும் அமேசோனாசு போன்ற மாநிலங்களின் அடங்குகிறது. [10][11]
ஆனால் வெனிசுலா நாடு தங்கள் நாட்டின் பழங்குடிமக்களின் குடியுரிமைபற்றி தெளிவான சட்ட திட்டங்கள் வகுக்காமல் எங்கேயும் அவர்கள் வாழலாம் என்று கூறுகிறது. [12]
அமைப்பான்மை
[தொகு]இவர்கள் அமெரிக்க பழங்குடிகளுடன் சேராதவர்களாகவே உள்ளார்கள். இவர்களில் எல்லாப்பகுதியில் வசிக்கும் இனத்தவர்களின் கலாசாரம், மொழியியல் பயன்பாடு, திருமணம், சொந்தம் கொண்டாடுவது ஒரே மாதரியாகவே உள்ளது. இவர்களின் சொந்த வாழிடம் ஓரினகோ ஆற்றுப்படுகையாக இருந்தாலும் வெளிஆடிகளின் ஆக்கிரமிப்பின் காரணமாக உயர்வான மலைப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[13]
இவர்களில் முதிர்ந்தவர்களே இனக்கூட்டத்தை வழிநடத்துகிறார்கள். ஒவ்வொரு கிராமத்திருக்கும் ஒரு தலைவர் இருக்கிறார் அவரை டுக்சுவா என்று அழைக்கிறார்கள். இவர் தன் கிராம மக்களிடமும், பக்கத்து கிராமத்தினரிடமும் நன்மதிப்பு பெற்றவராக இருக்கிறார். வயதுவந்த ஆண்களுக்கென பொதுவான சமூக அக்கறை இருந்தாகும் தனிப்பட்ட முறையில் தனிநபர் எந்த செயலையையும் செய்யவேண்டிய அவசியமில்லை. [14]
வாழ்க்கை மற்றும் உணவு
[தொகு]இவர்களின் குடும்பசூழலில் கிராமத்திற்கு கிராமம் மக்கள் தொகையின் அளவு மாறுபடுகிறது. ஒரு கிராமத்தில் 50 முதல் 400 மக்கள் வரை வாழுகிறார்கள். ஒரு கிராமக்கள் அனைவருமே பொதுவான ஒரு வீட்டில் வாழுகிறார்கள். அதன் அமைப்பு நீள்வட்ட வடிவத்தில் அமைந்துள்ளது. அவர்கள் குடியிருக்கும் வீட்டின் பெயர் ஷபோமா என்று அழைக்கப்படுகிறது. இக்குடிசைகள் வலிமையான மரக்கட்டைகளாலும், மழைக்காடுகளில் கிடைக்கும் புற்களாலும், இலைகள் கொண்டும் அமைக்கப்பட்டிருக்கும். வீட்டின் உட்பகுதிக்கு செல்வதற்காக இரண்டு இடங்களில் பட்டும் பிளவுச் செய்யப்பட்டிருக்கும். இவற்றில் மழைக்காலங்களில் ஓட்டைகள் விழுந்து பூச்சிகளின் தாக்குதலுக்கு உட்படுகிறார்கள். இதன் காரணமாக நான்கு அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை புது குடிசையை கட்டுகிறார்கள்.
இவர்கள் மழைக்காடுகளின் ஊடாக விவசாயம் செய்கிறார்கள். இவற்றில் முக்கியமாக பழங்கள், காய்கறிகள், வாழை போன்றவைகளைப் பயிரிடுகிறார்கள். மேலும் வேட்டையாடுதல், மீன் பிடித்தல் போன்ற வேலையும் செய்கிறார்கள். மேலும் மண்வளம் குன்றாமல் இருக்க இவர்களுக்கு தெரிந்த அளவு மாற்று சாகுபடியையும் செய்கிறார்கள். [15]
பெண்கள் குழந்தை வளர்ப்பின் போது முக்கிய பங்கு வகிக்கிறார்கள். குழந்தை பிறந்து பெரியவர்களாக மாறும்வரை பத்திரமாக பாதுகாத்து வளர்க்கிறார்கள். இவர்களில் ஒரு தார மணம் என்பது இருந்தாலும் பல சமூகங்களில் காணப்படுவடுவதுபோல் பலதுணை மணம், பலகணவர் மணம், மேலும் பலமனைவி மணம் போன்றவையும் காணப்படுகிறது. இவர்களின் உணவு முறைகளில் உப்பின் அளவு குறைவாக இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மேலும் சோடியம் அதிகரிப்பு போன்றவையின் இடம் குறைவாகவே உள்ளது. இவற்றின் காரணமாக இவர்களுக்கு ரத்தக்கொதிப்புபோன்ற நோய்கள் குறைவகவே ஏற்படுகிறது.[16]
இவர்களின் சமூகங்களில் சடங்குகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்களின் அறுவடை நாட்களில் பக்கத்து கிராம மக்களையும் அழைத்து விருந்துவைத்து சடங்கு செய்கிறார்கள். அப்போது அவர்களின் உடலில் மலர்களால் அலங்கரித்துக் கொள்கிறார்கள். இரவு நேரங்களில் ஆண்கள் பாட பெண்கள் நடனம் ஆடி சந்தோசமாக இருப்பார்கள். [17] இவர்களில் இறந்தவர்களின் உடல்களை வீட்டின் கொஞ்சம் தொலைவில் பூமிக்கடியில் இலைகள் கொண்டு மூடிவைத்து பூச்சிகள் மென்மையான பகுதிகளைத் தின்றபின்னர் மீதம் உள்ள எலும்புகளை 40 நாட்கள் கழித்து எடுத்து தகனம் செய்கிறார்கள்.
பெண்கள் விவசாய பணிக்காகவும் வீடு உபயோகத்திற்காகவும் வேர்கள் மரப்பட்டைகள் கொண்டு கூடைகள் செய்து வர்ணம் பூசி உபயோகிக்கிறார்கள்.[18]
பெண்களின் பருவம்
[தொகு]இவர்களில் இளம் பெண்கள் 10 முதல் 12 வயதுக்குள் பருவம் எய்தவுடன் திருமணம் செய்துவைக்க முயல்கிறார்கள். இவர்கள் இளம்பெண்களின் உதிரத்தை நஞ்சு எனக்கருதி இப்பெண்களை குடிசையிலிருந்து தள்ளியே குடிவைக்கிறார்கள். உதிரப்போக்கு நிற்கும்வரை இவர்கள் தனிமையிலேயே இருக்க வேண்டும். [19]
அப்பெண் தனிமையில் இருக்கும்போது அவளின் அம்மாவோ அல்லது அவரைப்போன்ற பெரிய பெண்கள் மாற்று உடைகள் கொடுத்து உதவுகிறார். உணவுகூட ஒரு மர குச்சி கொண்டே கொடுக்கப்படுகிறது. இவர்கள் வேறு யாரையும் தொடவோ பேசவோ கூடாது, அதோடு அப்பெண் இருக்கும் இடத்திற்கு எநத ஆண்மகனும் செல்லக்கூடாது.[20] அதுவரை வீட்டு வேலைகள் அனைத்தையும் அப்பெண்ணின் அம்மாவே பார்த்துக் கொள்ளவேண்டும். அவள் [[மனைவி]யான பின்னர் கருவுருதல் என்பது பெண்களுக்கு முக்கியமான ஒன்றாகும். அவளின் இனவிருத்திக்காலம் தவிர்த்து பெண்களின் பாலின உறுப்பை வெளியில் தெரியாதபடி துணியால் மறைத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் சுழற்சியின் காரணமாகப் பெண்கள் குழந்தைக்கு கூட பாலூட்ட தடைவிதிக்கப்படுகிறது. [21]
மேற்கோள்
[தொகு]- ↑ Povos Indigenas no Brasil: Yanomami. For a lower estimate of their total numbers, down to 25,000 which may be duplicated between sources in Venezuela and Brazil, see [1]
- ↑ உணவுகள் 7 - புழுக்களைத் தின்னும் பழங்குடியினர்!தி இந்து தமிழ் 13 ஆகஸ்ட் 2016
- ↑ "The name Yanomami", Povos Indigenas no Brasil.
- ↑ Jacques Lizot, Diccionario Yanomami-Espanol, Central University of Venezuela, Faculty of Social and Scientific Economics, Caracas, 1975.
- ↑ Francisco Michelena y Rojas, Exploracion Oficial, Nelly Arvelo-Jiminez and Horacio Biord Castillo, eds., 1989. Iquitos, Peru: IIAP-CETA; pp. 171-72.
- ↑ John Hemming, Red Gold: The Conquest of the Brazilian Indians, Cambridge, MA: Harvard University Press, 1978.
- ↑ Smiljanic, Maria Inês. "Os enviados de Dom Bosco entre os Masiripiwëiteri. O impacto missionário sobre o sistema social e cultural dos Yanomami ocidentais (Amazonas, Brasil.)", Journal de la Société des Américanistes, 2002, pp. 137–158.
- ↑ "The Gold Rush," Povos Indigenas no Brasil.
- ↑ [http://www.proyanomami.org.br/v0904/index.asp?pag=htm&url=/apy/YU_ing/4.htm
- ↑ "The Gold Rush," Povos Indigenas no Brasil.
- ↑ "A Comissão Pró-Yanomami e suas ações," [Portuguese].
- ↑ "Venezuelan tribes protest against violent mining gangs," Survival International News, 18 June 2015.
- ↑ Early, John (2000). The Xilixana Yanomami of the Amazon: History, Social Structure, and Population Dynamics. Gainesville, Florida: University Press of Florida. p. 4.
- ↑ Hames, Beierle, Raymond B., John. "Culture Summary: Yanoama". New Haven, Connecticut. பார்க்கப்பட்ட நாள் 10 December 2013.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Ya̦nomamö: the fierce people (Chagnon 1968; Chagnon 1977; Chagnon 1983; Chagnon 1992; Chagnon 1998; Chagnon 2012)
- ↑ Kenneth Good (1991). Into the Heart: One Man's Pursuit of Love and Knowledge Among the Yanomami. NY: Simon and Schuster.
- ↑ Schwartz, David M, with Victor Englebert. Vanishing Peoples Yanomami People of The Amazon. New York: Lothrop, Lee & Shepard Books.
- ↑ Cruz, Valdir (2002). Faces of the Rainforest: The Yanomami. New York: PowerHouse Books.
- ↑ Chagnon, Napoleon A. (1968). Yanomamö: The Fierce People. New York: Holt, Rinehart, and Winston.
- ↑ Good, Kenneth, with David Chanoff (1988) Into the Heart. London: The Ulverscroft Foundation.
- ↑ Napoleon Chagnon. (1974). Studying the Yanomamo. New York: Holt, Rinehart, and Winston.