பயனர் பேச்சு:ச.பிரபாகரன்
வாருங்கள்!
வாருங்கள், ச.பிரபாகரன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:38, 22 பெப்ரவரி 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி
வணக்கம், ச.பிரபாகரன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- நீங்கள் உருவாக்கிய கட்டுரையை விரிவாக எழுதலாம். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கலாம்.
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம். அவற்றை விரிவாக்கலாம்.
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
--இரவி (பேச்சு) 03:59, 23 பெப்ரவரி 2013 (UTC)
பதக்கம்
விக்கிப்புயல் பதக்கம் | ||
விக்கிப்பீடியாவில் இணைந்து புயல் வேகத்தில் கட்டுரைகள் எழுதிவரும் தங்களின் வேகத்தினைப் பாராட்டித் தங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன். தங்களின் பணி தொடர வாழ்த்துகள் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:51, 23 பெப்ரவரி 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
விக்கியில் சேர்க்கப்படும் படைப்புகளின் காப்புரிமை தொடர்பாக
வணக்கம் ச.பிரபாகரன். தமிழ் விக்கிக்கு நல்வரவு. விக்கி தொடர்பான உங்கள் ஆர்வத்தையும், நீங்கள் பங்களிக்கத் தொடங்கி இருப்பதையும் கண்டு மகிழ்ச்சி. பங்களிக்கும் போது ஒரு முக்கிய விடயத்தை கவனிக்க வேண்டுகிறேன். நீங்கள் அண்மையில் அணியிலக்கணம் தொடர்பாக தொடங்கிய கட்டுரைகள் பல த.கல்விக் கழகத்தில் இரு முழுமையாக இங்கு பிரதி செய்யப்பட்டவை. எ.கா இலேச அணி - [1] இவ்வாறு செய்வது காப்புரிமை மீறல் ஆகும். பிற மூலங்களில் இருந்து ஆக்கங்கள் விக்கியில் சேர்ப்பது என்றால் அவ் உள்ளடக்கங்கள் காப்புரிமை கட்டற்ற முறையில் தரப்பட்டு பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டு செய்ய வேண்டும். இயன்றவரை உங்களின் சொந்த ஆக்கங்களை இங்கு சேர்ப்பதன் மூலம் இச் சிக்கலத் தவிர்க்கலாம். மேற்கோள்களாக பிற ஆக்கங்கள் சுருக்கமாக சுட்டப்படலாம். நன்றி. --Natkeeran (பேச்சு) 22:16, 23 பெப்ரவரி 2013 (UTC)
- அணிகள் தொடர்பான கட்டுரைகளைச் சுருக்கமாகத் தாருங்கள். காப்புரிமை உள்ள பதிப்புகளைத் தவிருங்கள். அவற்றை வெளி இணைப்புகளாக அல்லது அவற்றில் இருந்து மேற்கோள்கள் காட்டினால் அவற்றை மேற்கோள்களாகத் தாருங்கள். வரிக்கு வரி வேறு தளங்களில் இருந்து எழுதுபவை இங்கு உடனடியாகவே நீக்கப்படும் அபாயம் உள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 22:37, 23 பெப்ரவரி 2013 (UTC)
@Natkeeran & Kanags : தகவலுக்கு நன்றி நண்பரே...மற்றும் tamilvu.org இணையத்தில் ஏற்கனவே தேடிப்பார்தேன் ஏதாவது காப்புரிமை இருக்கிறதா என்று...அந்த இணையத்தில், அவர்கள் ஒரு அரசு உதவி பெரும் பொது சேவை நிறுவனம் மற்றும் அவர்கள் அந்த இணையத்தில் உள்ள தரவுகள் ஒரு பொது சேவைக்காக வைத்திருகிறார்கள் என்று குறிப்பிடிருந்தார்கள்[2]...அவர்கள் தரும் புத்தகங்கள் அனைத்தும் ஒன்று அறுபது வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டவை அல்லது நாட்டுடைமை ஆக்க்கப்பட்டவை...அதனால் நாம் காப்புரிமை இல்லாமல் அந்த இணையத்தில் உள்ளவற்றை உபயோகித்துக் கொள்ளலாம்...அதனால் தான் நான் அந்த இணையத்திலிருந்து நல்ல பயனுள்ள தரவுகளை விக்கிபீடியா பக்கத்தில் இட்டேன்...காப்புரிமை இருந்திருந்தால் கண்டிப்பாக அந்தத் தரவுகளை விக்கிபீடியா பக்கத்தில் இட்டிருக்க மாட்டேன் நண்பா...நான் விக்கிபிடியாவிற்கு புதிது என்பதால் ஒரு சந்தேகம்...காப்புரிமை இல்லாத நம்பகத்தன்மையுள்ள தரவுகளை விக்கிபீடியாவில் இட ஏதாவது procedure நான் பின்பற்றவேண்டுமா?...நன்றி... --ச.பிரபாகரன் (பேச்சு) 23:24, 23 பெப்ரவரி 2013 (UTC)
நல்ல கேள்வி ச.பிரபாகரன். உங்கள் புரிந்துணர்வுக்கும் முயற்சிக்கும் நன்றி. த.க இருந்து கலைச்சொற்களைப் பெற்று தமிழ் விக்சனரியில் சேர்த்துள்ளோம். ஆனால் பிற உள்ளக்கங்கள் பற்றி எந்தவித உரையாடல்களும் இதுவரை நடைபெறவில்லை என்று நினைக்கிறேன். மேலும் தமிழ்க் கலைக்களஞ்சிய உள்ளடக்கத்தின் காப்புரிமையும் காலாவாதி ஆகி இருக்கும் என்று நினைக்கிறேன். மலையாள விக்கியில் அரச கலைக்களஞ்சிய உள்ளடக்கங்களை பதிவேற்றும் பணி நடைபெறுகிறது. இங்கும் அப்படிச் செய்யலாமா என்று ஆலமரத்தடியில் உரையாடி முடிவெடுப்போம். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:18, 24 பெப்ரவரி 2013 (UTC)
- விக்கிப்பீடியா:ஆலமரத்தடி இந்த விடயம் தொடர்பாக ஒரு உரையாடல் தொடங்கப்பட்டுள்ளது. --Natkeeran (பேச்சு) 01:27, 24 பெப்ரவரி 2013 (UTC)
தமிழ் இணையக் கல்வி கழக தளத்தில் உள்ள ஆக்கங்கள் இரு வகைப் படுகின்றன. 1)முதல் வகை அவர்கள் ஏற்றி வைத்திருக்கும் நூல்கள் - தமிழக அரசால நாட்டுடமை ஆக்கப்பட்டவை அல்லது பதிப்புரிமை காலாவதியானவை. இவற்றை பதிப்புரிமை தெளிவாகக் காலாவதி ஆகிவிட்டன என்று உறுதி படுத்திக்கொண்டால் படியெடுப்பதில் சிக்கல் இல்லை. எனினும் நடை, நம்பகத்தன்மை போன்றவற்றை கணக்கில் கொண்டு செய்ய வேண்டும். 2) இரண்டாம் வகை அப்பல்கலைக்கழகத்தின் பாடநூல்கள். இலக்கண இலக்கியப் பாடங்களை வலையேற்றியுள்ளனர். அவற்றின் பதிப்புரிமையை அவர்கள் விட்டுத் தரவில்லை - முன்பு அகரமுதலியை மட்டும் தமிழ் விக்சனரிக்குக் கொடையாகத் தந்தனர். ஆனால் பாடநூல்களுக்கும் கலைக்களஞ்சியங்களுக்கும் இன்னும் பதிப்புரிமை கொண்டுள்ளனர். எனவே இவற்றின் பதிப்புரிமை காலாவதி ஆகும் வரை / கொடையளிக்கப்படும்வரை அப்படியே படியெடுக்க வேண்டாம்.
கனக்ஸ் குறிப்பிடும் அணிக்கட்டுரைகள் அவர்களது பாடநூல்கள் பகுதியிலிருக்கின்றன என்பதால் பதிப்புரிமை பெற்றவை.--சோடாபாட்டில்உரையாடுக 02:23, 24 பெப்ரவரி 2013 (UTC)
- அணிகளுக்கு எடுத்துக்காட்டுகளாக வேறு பாடல்களைத் தரலாம். அல்லது, பாடலுக்கான விளக்கத்தைச் சொந்தமாக எழுத முனையலாம். இவ்வாறு செய்வதால் காப்புரிமை சிக்கலைத் தவிர்க்கலாம். விக்கிப்பீடியாவைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு பங்களிக்கத் தொடங்கியிருப்பதைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 11:23, 25 பெப்ரவரி 2013 (UTC)
நீக்கம்
வணக்கம், நீங்கள் சோதனைக்கக உருவாக்கிய பக்கங்களை நீக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அப்பக்கத்தில் {{delete}} வார்ப்புருவை இணைத்து விடுங்கள். நிருவாகப் பயனர்கள அதனை விரைந்து நீக்குவார்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:16, 25 பெப்ரவரி 2013 (UTC)
உங்கள் விக்கிப்பீடியா நுழைவு பற்றி..
வணக்கம், பிரபாகரன். உங்கள் பயனர் பக்கத்தில் எதேச்சையாக தமிழ் விக்கிக்குள் நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள்? இது எவ்வாறு என்று அறிய இயலுமா? உங்கள் கல்வி, பின்புலம் பற்றி அறிந்து கொள்ளலாமா? தமிழ் விக்கியில் பங்களிக்கத் துவங்கும் முன்பே விக்கிப்பீடியா, விக்கி மென்பொருள் பயிற்சி உண்டா? ஏனெனில் மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக பங்களிக்கத் தொங்கியுள்ளீர்கள். உங்களைப் போன்ற இன்னும் பல பயனர்களை ஈர்க்க உங்களைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியமாகப் படுகிறது. நன்றி--இரவி (பேச்சு) 04:54, 5 மார்ச் 2013 (UTC)
வணக்கம் இரவி அவர்களே, எனக்கு விக்கி மென்பொருள் பயிற்சி இல்லை என்றாலும், HTML JavaScript தொடர்பான நிரலாக்க மொழிகளில் பயிற்சி இருந்ததால் விக்கி மென்பொருளை கற்றுக் கொள்ள ஏதுவாக இருந்தது. நன்றிகள்... :) --ச.பிரபாகரன் (பேச்சு) 12:45, 5 மார்ச் 2013 (UTC)
கட்டுரை உள்ளடக்கங்கள் இணைப்பு
பிரபாகரன், கட்டுரைகளின் உள்ளடக்கங்களை இணைக்கும் போது, அவற்றின் வரலாறுகளையும் இணைக்க வேண்டும். எனவே உள்ளடக்கங்களை சேர்த்த பின்னர் நீக்கல் வார்ப்புரு இடாமல் / வழிமாற்றாமல் {{mergeto|}} வார்ப்புருவை இட்டுவிடுங்கள் நிருவாகிகள் யாரேனும் இணைத்து விடுவோம்.--சோடாபாட்டில்உரையாடுக 02:34, 6 மார்ச் 2013 (UTC)
தகவலுக்கு நன்றி :) --ச.பிரபாகரன் (பேச்சு) 06:02, 6 மார்ச் 2013 (UTC)
மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்
வணக்கம், ச.பிரபாகரன்!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 07:00, 2 ஏப்ரல் 2013 (UTC)
பதக்கம்
சிறந்த பகுப்பாக்குனர் பதக்கம் | ||
சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உங்கள் பங்களிப்புகளை பார்த்தே தெரிந்து கொள்ளலாம். அளப்பறிய பணியான பகுப்புருவாக்கத்தை திறம்பட செய்து வருவதற்காக இப்பதக்கம். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:29, 14 ஆகத்து 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
நன்றி... :) ச.பிரபாகரன் (பேச்சு) 15:34, 14 ஆகத்து 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:13, 27 அக்டோபர் 2013 (UTC)
பகுப்புகள் தலைப்பு
தமிழர் கலை என்ற பகுப்பு தமிழர் கலைகள் என்று வர வேண்டும். பெரும்பாலும், ஒரு பகுப்பை தாய்ப் பகுப்புக்குள்ளும் இட்டு கிளைப் பகுப்புக்குள்ளும் இடுவது அவசியமில்லை. எ.கா தமிழர் கலைகள் என்பது தமிழர் பண்பாடு அல்லது தமிழர் என்ற பகுப்புக்குள் வரும். எனவே தமிழர் சிற்பக்கலை என்பதை தமிழர் பண்பாட்டுக்குள் சேற்க வேண்டிய அவசியமில்லை. அது போலவே தமிழர் அடையாளம் என்ற பகுப்பும். அது தமிழர் என்ற பகுப்புக்குள் இருப்பதால், அதற்குள் மீண்டும் தமிழர் பகுப்புக்குள் இருக்கும் பகுப்புக்களைச் சேர்க்க வேண்டியதில்லை.
- தமிழர் கலைகள்
- தமிழர் வாழ்வியல் என்று இரு பெரும் புதிய பகுப்புக்கள் உருவாக்கப்படலாம்.
நன்றி. --Natkeeran (பேச்சு) 19:01, 20 மார்ச் 2014 (UTC)
மேலும், தமிழர் கலைகள் என்ற குறிப்பான பகுப்புக்குள் அதன் கிளைப் பகுப்புக்களை மட்டும் சேர்ப்பதுவே பொருத்தம் ஆகும். எ.கா தமிழர் சிற்பக்கலை (சரி), சிற்பக்கலை (பிழை). --Natkeeran (பேச்சு) 19:04, 20 மார்ச் 2014 (UTC)
- நன்றி. இப்பொழுதே மாற்றிவிடுகிறேன். --ச.பிரபாகரன் (பேச்சு) 19:11, 20 மார்ச் 2014 (UTC)
- தமிழ் மொழியும் தமிழரின் கலைகளுள் வருவது தான் அல்லவா. --ச.பிரபாகரன் (பேச்சு) 19:34, 20 மார்ச் 2014 (UTC)
அளவை சமயம்
அளவை சமயம் என்றால் என்ன? அது பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 11:32, 16 ஆகத்து 2014 (UTC)
- வேதத்தின் படி அளவை என்றால் அறிவு கிடைக்கும் மூலங்கள் என்று பொருள். ஏற்கனவே, அளவை (சமயம்) என்ற பக்கத்தை செங்கைப் பொதுவன் ஐயா உருவாக்கியுள்ளார். --ச.பிரபாகரன் (பேச்சு) 11:35, 16 ஆகத்து 2014 (UTC)
பெரியார்
மிகப் பரவலாக அறியப்பட்டவர்களை, அவர்கள் அறியப்பட்ட பெயரிலிலேயே அழைக்கலாம். எ.கா காந்தி. எ.கா காந்தி என்ற பெயர். பொதுவாக சாதிப் பெயர் இணைத்து வழங்கப்பட விட்டால், சாதிப் பெயரை இணைப்பது அவசியமற்றது. முக்கிய கட்டுரைகளுக்கு பெயர் மாற்றம் தேவை என்று நீங்கள் கருதினால், பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டு கருத்துப் பெற்று மாற்றவும். --Natkeeran (பேச்சு) 15:52, 9 நவம்பர் 2014 (UTC)