உள்ளடக்கத்துக்குச் செல்

காசாக்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ZéroBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:03, 21 அக்டோபர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (r2.7.1) (தானியங்கி இணைப்பு: lad:Banda de Gaza)
காசாக்கரை
قطاع غزة
காசாக்கரையின்அமைவிடம்
பெரிய நகர்காசா நகரம்
ஆட்சி மொழி(கள்)அரபு
அரசாங்கம்அமாசு-தலைமையிலான அரசு
• பிரதமர்
இசுமாயில் அனியே
• அதிபர்
முகம்மது அப்பாசு
ஒழுங்கமைப்பு
• ஒசுலோ தீர்மானங்கள் கைச்சாத்து
செப்டம்பர் 13, 1993
• பாலசுதீன அதிகார சபை பகுதி பொறுப்பு
மே 1994
• பாலசுதீன அதிகார சபை முழுப் பொறுப்பு
செம்டம்பர் 2005
பரப்பு
• மொத்தம்
360 km2 (140 sq mi) (201வது)
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
1,482,405 (149வது1)
• அடர்த்தி
4,118/km2 (10,665.6/sq mi) (6th1)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)மதிப்பீடு
• மொத்தம்
$770 மில்லியன் (160வது1)
• தலைவிகிதம்
600 $ (167வது1)
நாணயம்Israeli new sheqel, எகிப்திய பவுண்டு (de facto) (ILS)
நேர வலயம்ஒ.அ.நே+2
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3
அழைப்புக்குறி970

காசாக் கரை மத்திய தரைக்கடலை அண்டி தென்மேற்கு எல்லையில் எகிப்தையும் வடக்கு, கிழக்குஎல்லைகளில் இசுரேலையும் கொண்ட நிலக்கீற்றாகும். இது அண்ணளவாக 41 கிலோமீட்டர் (25 மை) நீளமும் 6 கிலோமீட்டர் (4 மை) தொடக்கம் 12 கிலோமீட்டர் (7 மை) அகலமானதுமாகும் மொத்தப் பரப்பளவு 360 ச.கி.மீ (139 ச.மை) ஆகும். இந்த மண்டலத்தின் முக்கிய நகரான காசாவின் பெயரே இம்மண்டலத்துக்கு இடப்பட்டுள்ளது. இங்குஅண்ணளவாக 1.4 மில்லியன் பாலசுதீனியர்கள் வசிக்கிறார்கள்.[1]

ஆட்சி

காசாக்கரை எந்தவொருன்-ஆட்டினதும் பகுதியாக உலகில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது பாலாசுதீனத்தின் ஒரு பகுதியாக பாலசுதீன அதிகார சபையால் கோரப்பட்டு வருகின்றது. இருப்பினும் 2007 சூன் மாத்தில் நடைப்பெற்ற சண்டைக்குப் பின்னர் இப்பகுதியின் ஆட்சி அமாசு தலைமையிலான அரசால் செய்யப்படுகிறது. 1967 முதல் 2005 வரை இசுரேல் காசாக் கரையை ஆக்கிரமித்திருந்தது இப்போதும் காசாக்கரையின் வான்தளத்தையும் காசாவின் கடல் எல்லையையும் காசா-இசுரேல் எல்லைகளையும் கட்டுப்படுத்தி வருகிறது. 1948 முதல் 1967 வரை காசாக்கரையை ஆக்கிரமித்திருந்த எகிப்து காசாக்கரைக்க்கும் சீனாய் பாலைவனத்துக்குமிடையான எல்லையைக் கட்டுப்படுத்தி வருகிறது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசாக்கரை&oldid=1239773" இலிருந்து மீள்விக்கப்பட்டது