மே 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mn:5 сарын 15 |
சி தானியங்கி மாற்றல் tt:15 май |
||
வரிசை 174: | வரிசை 174: | ||
[[tl:Mayo 15]] |
[[tl:Mayo 15]] |
||
[[tr:15 Mayıs]] |
[[tr:15 Mayıs]] |
||
[[tt:15 |
[[tt:15 май]] |
||
[[uk:15 травня]] |
[[uk:15 травня]] |
||
[[ur:15 مئی]] |
[[ur:15 مئی]] |
07:39, 30 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்
<< | மே 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXIV |
மே 15 கிரிகோரியன் ஆண்டின் 135ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 136ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 230 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1525 - ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது.
- 1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.
- 1718 - உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.
- 1756 - இங்கிலாந்து பிரான்சின் மீது போரை அறிவித்ததில் ஏழாண்டுப் போர் ஆரம்பமாயிற்று.
- 1792 - பிரான்ஸ் சார்டீனியப் பேரரசு மீது போரை அறிவித்தது.
- 1796 - நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலான் நகரைக் கைப்பற்றினர்.
- 1851 - நான்காவது ராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
- 1860 - கரிபால்டியின் படைகள் சிசிலியின் நேப்பில்ஸ் நகரைக் கைப்பற்றினர்.
- 1897 - கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர்.
- 1915 - இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஷவ்கத் அலியும் முகம்மது அலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
- 1918 - பின்லாந்து உள்நாட்டுப் போர் முடிவுற்றது.
- 1919 - துருக்கியின் இஸ்மீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.
- 1929 - ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
- 1932 - ஜப்பானியப் படையினர் ஷங்காயை விட்டுப் புறப்பட்டனர்.
- 1932 - ஜப்பானின் பிரதமர் இனூக்காய் த்சுயோஷி அரசுக் கவிழ்ப்பு முயற்சியில் கொல்லப்பட்டார்.
- 1935 - மொஸ்கோவில் சுரங்க தொடருந்து சேவை ஆரம்பமானது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பெரும் போருக்குப் பின்னார் டச்சுப் படைகள் நாசி ஜெர்மன் படைகளிடம் சரணடைந்தனர்.
- 1940 - மக்டொனால்ட்ஸ் தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் ஆரம்பித்தது.
- 1948 - இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவுதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.
- 1955 - உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.
- 1957 - பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.
- 1958 - சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.
- 1960 - சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.
- 1963 - நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார்.
- 1972 - 1945 முதலை ஐக்கிய அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஓக்கினாவா தீவு மீண்டும் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.
- 1978 - டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது
- 1985 - குமுதினி படகுப் படுகொலைகள், 1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
- 1988 - எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கத் தொடங்கினர்.
- 1991 - ஈடித் கிரெசன் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.
- 2005 - திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.
- 2006 - வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிறப்புக்கள்
- பியேர் கியூரி, பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1906)
இறப்புகள்
- 1978 - ரொபேர்ட் மென்சீஸ், ஆஸ்திரேலியாவின் 12வது பிரதமர் (பி. 1894)
சிறப்பு நாள்
- உலகக் குடும்ப நாள்
- பராகுவே - விடுதலை நாள் (1811)
- மெக்சிகோ - ஆசிரியர் நாள் (Día del Maestro)
- தென் கொரியா - ஆசிரியர் நாள் (스승의 날)