உள்ளடக்கத்துக்குச் செல்

அரேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34: வரிசை 34:


=== இடைக்காலக் காலம் ===
=== இடைக்காலக் காலம் ===
அகமதுவின் கூற்றுப்படி, முகலாயர் மற்றும் சீக்கியர்களின் ஆட்சியின்போது அரேன் சமூகத்தினர் ஆளுநர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் போன்ற முக்கிய பதவிகளை வகித்தனர்.<ref name="ahmed2007">{{Cite news|title=An Arain freedom fighter|first=Ishtiaq|last=Ahmed|work=The News|date=15 December 2007|url=http://apnaorg.com/prose-content/english-articles/page-44/article-6/index.html}}</ref>
அகமதுவின் கூற்றுப்படி, முகலாயர் மற்றும் சீக்கியர்களின் ஆட்சியின்போது அரேன் சமூகத்தினர் ஆளுநர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் போன்ற முக்கிய பதவிகளை வகித்தனர்.<ref>{{Cite news|title=An Arain freedom fighter|first=Ishtiaq|last=Ahmed|work=The News|date=15 December 2007|url=http://apnaorg.com/prose-content/english-articles/page-44/article-6/index.html}}</ref>


=== காலனித்துவ காலம் ===
=== காலனித்துவ காலம் ===

03:44, 11 திசம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:Infobox tribe

அரேன் (Arain) (அரெய்ன் என்றும் அழைக்கப்படுகின்றனர்) ஒரு பெரிய பஞ்சாபி முஸ்லிம் சமூகம் ஆகும். இச்சமூகம் வலுவான அரசியல் அடையாளம் மற்றும் அமைப்பின் நிலை கொண்ட விவசாய சமூகமாக இருக்கிறது.[1][2][3]

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், இவர்கள் சுமார் 1 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்தனர். முக்கியமாக கிராமப்புறத்தில் சாகுபடி செய்பவர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் என இலாகூர், ஜலந்தர், அமிர்தசரஸ் மற்றும் அம்பாலா உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் குவிந்திருந்தனர். இந்த மாவட்டங்கள் அனைத்தும் பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்தன.[1] 1947 இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து, இவர்கள் இப்போது முக்கியமாக பாக்கித்தானின் மாகாணங்களான பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் மற்றும் இந்தியாவின் பஞ்சாப், மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் ஆகிய பகுதிகளில் ஒரு சிறிய அளாவில் பரவியுள்ளனர்.

ஒரு சுய உணர்வு சமூகமான அரேன் சமூகம் 1890 களில் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு அமைப்பை நிறுவ பல கூட்டங்களை நடத்தின. இறுதியில், 1915 ஆம் ஆண்டில், இலாகூரில் அஞ்சுமான் ராயன்-இ-இந்த் என்ற ஒரு அமைப்பாக உருவெடுத்தது. அல்-ராய் என்ற தலைப்பில் ஒரு தேசிய சமூக செய்தித்தாளும் நிறுவப்பட்டது.[4]

வரலாறு

தோற்றம்

வரலாற்றாசிரியரும் அரசியல் விஞ்ஞானியுமான கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலாட், அரபு முஸ்லிம் படைகள் ஆக்கிரமித்ததால், சிந்து மற்றும் முல்தானில் இருந்து பஞ்சாப்பிற்கு இடம்பெயர்ந்த விவசாய சமூகங்கள்தான் இவர்கள் எனவும்; இவர்கள் முதலில் இந்து மதத்தை கடைபிடித்தனர் ஆனால் பலர் பின்னர் இசுலாமுக்கு மாறினார்கள் எனவும் கூறுகிறார். இந்த சமூகம் முக்கியமாக வட இந்தியா மற்றும் கிழக்கு பாக்கித்தானில் அமைந்துள்ள கம்போம் மற்றும் இராஜபுத்திரர் சமூகங்களுடன் தொடர்புடையது என்று அவர் கூறுகிறார்.[5]

அரேன் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் விஞ்ஞானி இஷ்தியாக் அகமது, சில ஆரம்பகால அரேன் நூல்கள் சூர்யவன்ஷி இராஜ்புத்திர வம்சாவளியை குறிப்பிடுகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறார். பஞ்சாப் மற்றும் அரியானாவின் பிற விவசாய சாதிகளைப் போலவே, அரேன்களும் “பல இனங்களின் கலவை” என்று அவர் நம்புகிறார்.[6]

இடைக்காலக் காலம்

அகமதுவின் கூற்றுப்படி, முகலாயர் மற்றும் சீக்கியர்களின் ஆட்சியின்போது அரேன் சமூகத்தினர் ஆளுநர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் போன்ற முக்கிய பதவிகளை வகித்தனர்.[7]

காலனித்துவ காலம்

1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கிளர்ச்சியின் போது, அரேன் சமூகத்தைச் சேர்ந்த ஷா அப்துல் காதிர் லுதியான்வி என்பவர் லூதியானாவிலிருந்து தில்லியை நோக்கி ஒரு கிளர்ச்சியை வழிநடத்தினார். அங்கு அவர் கொல்லப்பட்டார். இதற்குப் பின்னர், ஆங்கிலேயர்கள் அரேன்களை ஒரு விசுவாசமற்ற சமூகமாக கருதினர். மேலும் அவர்களை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளவும் மறுத்தனர்.[8] அரேன் சமூகத்தின் பரப்புரை காரணமாக, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர்கள் அதிகாரப்பூர்வமாக ஒரு “விவசாய பழங்குடி” என்று மறு வகைப்படுத்தப்பட்டது.[9]

மக்கள்தொகை

1921 ஆம் ஆண்டில்,பஞ்சாப் மாகாணத்தின் மொத்த முஸ்லிம் மக்கள்தொகையில் 9,5% அரேன்களாக இருந்தனர். இது 1901 இல் 8,3% ஆகவும், 1881 இல் 6,6% ஆகவும் இருந்தது. 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, இலாகூர் மாவட்டத்தின் மிகப்பெரிய சமூகமாக அரேன்கள் இருந்தனர். இது மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 40% அல்லது மொத்த 11 மில்லியனில் 4,45 மில்லியன் ஆகும். அதைத் தொடர்ந்து காஷ்மீரிகள் (30%) உள்ளனர்.[10] அரேன் பிரதாரிகள் குறிப்பாக இலாகூரின் தொழில்துறை மற்றும் வணிக நடவடிக்கைகளிலும் அதன் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Koul, Ashish (2016-12-03). "Making new Muslim Arains: reform and social mobility in colonial Punjab, 1890s-1910s". South Asian History and Culture 8 (1): 1–18. doi:10.1080/19472498.2016.1260348. பன்னாட்டுத் தர தொடர் எண்:1947-2498. http://dx.doi.org/10.1080/19472498.2016.1260348. 
  2. "Arain". The Punjab Record: Or, Reference Book for Civil Officers (page 24) via Google Books website. 1905. பார்க்கப்பட்ட நாள் 17 January 2023.
  3. Katherine Pratt Ewing (1997). Arguing sainthood: modernity, psychoanalysis, and Islam. Duke University Press. p. 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780822320265.
  4. Ibrahim, Muhammad (2009). Role of Biradari System in Power Politics of Lahore: Post-Independence Period (Thesis).
  5. Jaffrelot, Christophe (2004). A History of Pakistan and its Origins. trans. Beaumont, Gilliam. Anthem Press. pp. 154, 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781843311492.
  6. Ahmed, Ishtiaq (18 April 2006). "There is many a slip betwixt cup and lip". Daily Times (Pakistan) இம் மூலத்தில் இருந்து 15 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140715223745/http://archives.dailytimes.com.pk/editorial/18-Apr-2006/comment-there-is-many-a-slip-betwixt-cup-and-lip-ishtiaq-ahmed. 
  7. Ahmed, Ishtiaq (15 December 2007). "An Arain freedom fighter". The News. http://apnaorg.com/prose-content/english-articles/page-44/article-6/index.html. 
  8. Ahmed, Ishtiaq (15 December 2007). "An Arain freedom fighter". The News. http://apnaorg.com/prose-content/english-articles/page-44/article-6/index.html. Ahmed, Ishtiaq (15 December 2007). "An Arain freedom fighter". The News.
  9. Rajit K. Mazumder (2003). The Indian Army and the Making of Punjab. Orient Blackswan. pp. 104–105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7824-059-6.
  10. "District Profile". District Lahore - Government of Punjab. Archived from the original on 27 November 2023.

மேலும் வாசிக்க

  • Koul, Ashish (2017). "Making new Muslim Arains: reform and social mobility in colonial Punjab, 1890s-1910s". South Asian History and Culture 8 (1): 1–18. doi:10.1080/19472498.2016.1260348. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரேன்&oldid=4159981" இலிருந்து மீள்விக்கப்பட்டது