1991 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு

நேபாள மத்திய புள்ளியியல் துறையால் 1991 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ந

1991 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு (1991, Nepal census) என்பது, நேபாள மத்திய புள்ளியியல் துறையால் 1991 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையாகும்.

நேபாள மத்திய புள்ளியியல் துறை, மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் கிராம வளர்ச்சிக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டது.[1]. அவர்கள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் தரவுகளை பதிவு செய்தனர். மக்கள் தொகை, வீடுகள், பாலினம், படிப்பறிவு, வயது, பிறந்த இடம், வீட்டு வசதிகள், திருமண நிலை, சமயம், பேச்சு மொழி, இனக்குழு/சாதி, பொருளாதார வசதிகள், வேளாண்மை, தொழில், வணிகம், கல்வி, குழந்தைகளின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு நிலை மற்றும் செய்யும் பணிகள் குறித்த விவரங்கள் இத்தரவுகளில் இடம்பெற்றிருந்தன [2].

அடுத்ததாக 2001 ஆம் ஆண்டு நேபாள நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Nepal Census 2001". Nepal's Village Development Committees. Digital Himalaya. Archived from the original on 2008-10-12. பார்க்கப்பட்ட நாள் 2008-08-22.
  2. "1991 Nepal census". Archived from the original on 2014-01-08. பார்க்கப்பட்ட நாள் 2018-08-29.