1873
1873 (MDCCCLXXIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1873 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1873 MDCCCLXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1904 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2626 |
அர்மீனிய நாட்காட்டி | 1322 ԹՎ ՌՅԻԲ |
சீன நாட்காட்டி | 4569-4570 |
எபிரேய நாட்காட்டி | 5632-5633 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1928-1929 1795-1796 4974-4975 |
இரானிய நாட்காட்டி | 1251-1252 |
இசுலாமிய நாட்காட்டி | 1289 – 1290 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 6 (明治6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2123 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4206 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 1 - ஜப்பான் கிரெகோரியின் நாட்காட்டியை அறிமுகபடுத்தியது.
- பெப்ரவரி - யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க அச்சகம் அமைக்கப்பட்டது.
- பெப்ரவரி 11 - ஸ்பானிய உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி ஸ்பெயின் நாட்டைக் குடியரசாக அறிவித்தது.
- பெப்ரவரி 12 - எமிலியோ காஸ்டெல்லார் ஸ்பெயினின் புதிய குடியரசின் பிரதமராக ஆனார்.
- மார்ச் 1 - நியூயோர்க்கின் ரெமிங்டன் அண்ட் சன்ஸ் முதலாவது தட்டச்சியந்திரத்தை அறிமுகப்படுத்தினர்.
- ஏப்ரல் 1 - RMS அட்லாண்டிக் என்ற பிரித்தானிய நீராவிக் கப்பல் கனடாவின் நொவா ஸ்கோஷியாவில் மூழ்கியதில் 547 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 9 - இரு வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட லண்டன் அலெக்சாண்ட்ரா அரண்மனை தீயினால் அழிந்தது.
- ஆகஸ்ட் 12 - ரஷ்யப் பேரரசுக்கும் கீவா கானேட்டுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி கீவா கானேட் ரஷ்யப் பேரரசின் கீழ் வந்தது.
- செப்டம்பர் 6 - இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் (GA) ஆனார்.
- நவம்பர் 17 - பெஸ்ட், பூடா, மற்றும் ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.
தேதி அறியப்படாதவை
தொகு- அடிமைகளை வைத்து வியாபாரம் செய்ததற்காக கானாவின் மன்னன் கோஃபி கரிகாரி மீது ஐக்கிய இராச்சியம் போரை அறிவித்தது. ஜூலையில் போர் முடிவுக்குவந்தது. ஐக்கிய இராச்சியம் கோல்ட் கோஸ்ட் குடியேற்ற நாட்டை அமைத்தது.
- டிடிரி (DDT) முதற்தடவையாகத் தொகுக்கப்பட்டது.
பிறப்புகள்
தொகு- பிப்ரவரி 9 - பம்மல் சம்பந்த முதலியார், நாடக ஆசிரியர் (இ. 1967)