1688
1688 (MDCLXXXVIII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1688 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1688 MDCLXXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1719 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2441 |
அர்மீனிய நாட்காட்டி | 1137 ԹՎ ՌՃԼԷ |
சீன நாட்காட்டி | 4384-4385 |
எபிரேய நாட்காட்டி | 5447-5448 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1743-1744 1610-1611 4789-4790 |
இரானிய நாட்காட்டி | 1066-1067 |
இசுலாமிய நாட்காட்டி | 1099 – 1100 |
சப்பானிய நாட்காட்டி | Jōkyō 5Genroku 1 (元禄元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1938 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4021 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் - வில்லியம் டாம்ப்பியர் என்பவர் கிறிஸ்துமசு தீவுக்கு சென்ற முதலாவது நபராகப் பதிவு செய்து கொண்டார்.
- மார்ச் 1 - இங்கிலாந்தின் பங்காய் நகரம் தீயில் அழிந்தது.
- மே 4 - இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு கத்தோலிக்கர்களுக்கு எதிரான சட்டங்களை இடைநிறுத்தம் செய்யும் சட்டமூலத்தை அனைத்து ஆங்கிலிக்க போதனை மேடைகளிலும் படிக்கப்பட வேண்டுமெனக் கட்டளையிட்டார். இங்கிலாந்து திருச்சபை இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. சூன் 8 ஆம் நாள் கான்டர்பரி பேராயர் வில்லியம் சான்குரொப்ட் இலண்டன் கோபுரத்தில் சிறை வைக்கப்பட்டார்.
- சூலை - பெத்ராச்சா புரட்சி ஒன்றின் மூலம் அயூத்தியாவின் அரசனானான்.
- நவம்பர் 11 - மூன்றாம் வில்லியம் இங்கிலாந்தைக் கைப்பற்றும் நோக்குடன் நெதர்லாந்தில் இருந்து புறப்பட்டான்.
- நவம்பர் 15 - இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சுக்கு எதிரான புரட்சி ஆரம்பமானது. 15,000 டச்சுக் கூலிப் படைகளுடன் மூன்றாம் வில்லியம் டோர்பே நகரை வந்தடைந்தான். தனக்கு நாட்டைக் கைப்பற்றும் எண்ணம் இல்லை எனக் கூறிய வில்லியம், சீர்திருத்தத் திருச்சபையினரைக் காக்கவே தாம் வந்ததாகத் தெரிவித்தான்.
- நவம்பர் 19 - மூன்றாம் வில்லியம் எக்செட்டர் நகரைக் கைப்பற்றினான்.
- நவம்பர் 23 - 1,500 பழமைவாதிகள் முதலாம் பீட்டரின் முற்றுகையில் இருந்து ஒனேகா ஏரியில் அமைந்திருந்த தமது மதத்தலத்தைக் காப்பதற்காக தீக்குளித்து மாண்டனர்.
- நவம்பர் 26 - மூன்றாம் வில்லியம் இங்கிலாந்து சென்றதை அறிந்த பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்துக்கு எதிராகப் போரை அறிவித்தார்.
- டிசம்பர் 11 - தனது படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு பிரான்சுக்குத் தப்பியோட எத்தனித்தார்.
- டிசம்பர் 18 - மூன்றாம் வில்லியம் இலண்டன் நகரைச் சென்றடைந்தான்.
- சென்னை மாநகராட்சி தொடங்கப்பட்டது.
- ஒல்லாந்தர் கால இலங்கையின் யாழ்ப்பாணப் பட்டணத்தில் 180,000 பேர் திருமுழுக்குப் பெற்ற கிறித்தவர்கள் உள்ளனர் என பிலிப்பசு பால்டியசு தனது குறிப்பொன்றில் தெரிவித்தார்.[1]
பிறப்புகள்
தொகு- அக்டோபர் 22 - நாதிர் ஷா, ஈரான் மன்னர் (இ. 1747)
இறப்புகள்
தொகு- ஏப்ரல் 10 - பெர்னாவ் தெ குவெய்ரோசு, இயேசு சபையைச் சேர்ந்த கத்தோலிக்கக் குரு, வரலாற்று எழுத்தாளர் (பி. 1617)
மேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5