1500
ஆண்டு 1500 (MD) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1500 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1500 MD |
திருவள்ளுவர் ஆண்டு | 1531 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2253 |
அர்மீனிய நாட்காட்டி | 949 ԹՎ ՋԽԹ |
சீன நாட்காட்டி | 4196-4197 |
எபிரேய நாட்காட்டி | 5259-5260 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1555-1556 1422-1423 4601-4602 |
இரானிய நாட்காட்டி | 878-879 |
இசுலாமிய நாட்காட்டி | 905 – 906 |
சப்பானிய நாட்காட்டி | Meiō 9 (明応9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1750 |
யூலியன் நாட்காட்டி | 1500 MD |
கொரிய நாட்காட்டி | 3833 |
இவ்வாண்டில் ஐரோப்பாவின் கிறித்தவர்களுக்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்தது. இவ்வாண்டு உலகத்தின் இறுதி ஆண்டாக அமையும் என அவர்கள் நம்பினர். திருவெளிப்பாட்டில் யுகமுடிவு இடம்பெறும் நாளைக் குறிக்கும் "நேரத்துக்குப் பின்னர் அரை-நேரம்" (half-time after the time) என்னும் சொற்றொடர் 1500 ஐக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டது.[1]
நிகழ்வுகள்
தொகு- சனவரி 5 - இளவரசர் லூடோவிக்கோ சுபோர்சா மிலன் நகரை மீளக் கைப்பற்றினான், ஆனால் பிரெஞ்சுப் படைகள் அவனை விரைவில் அங்கிருந்து துரத்தினர்.
- சனவரி 26 - எசுப்பானியக் கப்பலோட்டி வைசென்டே யானெசு பின்சோயின் பிரேசிலின் வடக்குக் கரையை அடைந்தார்.
- ஏப்ரல் 22 - போர்த்துக்கீசக் கப்பலோட்டி பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் தனது 13 கப்பல்களுடன் அதிகாரபூர்வமாக பிரேசிலைக் கண்டுபிடித்து அதனை போர்த்துகலுக்காக உரிமை கோரினார்.
- ஆகத்து 10 - டியேகோ டயசு ஒரு தீவைக் கண்டுபிடித்து அதற்கு புனித லாரன்சு எனப் பெயர் சூட்டினார். இது பின்னர் மடகாசுகர் எனப் பெயரிடப்பட்டது.
- நவம்பர் 11 - பிரான்சின் பன்னிரண்டாம் லூயி, அராகனின் இரண்டாம் பெர்டினாண்டு இருவரும் நேப்பில்சு இராச்சியத்தை தமக்கிடையே பகிர்ந்து கொள்ள உடன்பட்டனர்.
- ஐரோப்பாவின் மக்கள்தொகை 56.7 மில்லியன் என மதிப்பிடப்பட்டது.
- இங்கிலாந்தின் கடைசி ஓநாய் இவ்வாண்டில் கொல்லப்பட்டது. ஆனாலும், 18 ஆம் நூற்றாண்டு வரை வடக்கு இங்கிலாந்தின் கிராமப் பக்கங்களில் ஓநாய்களைக் கண்ணுற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளன்.
பிறப்புகள்
தொகு- சனவரி 6 - அவிலா நகரின் யோவான், எசுப்பானிய புனிதர் (இ. 1569)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Andrew Graham-Dixon, Art of Germany, BBC, 2011