விக்கிப்பீடியா:பயனர் பக்கம்

குறுக்கு வழிகள்:
WP:UP
[[WP:USER]]
அடிப்படை பெயர்வெளிகள் பேச்சு பெயர்வெளிகள்
0 (முதன்மை/கட்டுரை) பேச்சு 1
2 பயனர் பயனர் பேச்சு 3
4 விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு 5
6 படிமம் படிமப் பேச்சு 7
8 மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு 9
10 வார்ப்புரு வார்ப்புரு பேச்சு 11
12 உதவி உதவி பேச்சு 13
14 பகுப்பு பகுப்பு பேச்சு 15
100 வலைவாசல் வலைவாசல் பேச்சு 101
118 வரைவு வரைவு பேச்சு 119
710 TimedText TimedText talk 711
828 Module Module talk 829
பயன்படுத்தப்படாத பெயர்வெளிகள்
108 [[Wikipedia:Books|]] 109
446 [[Wikipedia:Course pages|]] 447
2300 [[Wikipedia:Gadget|]] 2301
2302 [[Wikipedia:Gadget|]] 2303
-1 சிறப்பு
-2 ஊடகம்

விக்கிப்பீடியா பயனர் பக்கம் என்பது விக்கிப்பீடியாவில் பங்களிப்பவர் மற்ற விக்கிப்பீடியர்களுடன் விக்கிப்பீடியாவின் திட்டங்கள் பணிகள் பற்றி ஒருவரோடொருவர் உரையாடவும் தொடர்புகொள்ளவும் பயன்படும் ஒரு பக்கம். உங்கள் பயனர் பெயர் எடுத்துக்காட்டு என்று வைத்துக்கொண்டு கீழ்க்காணும் கருத்துக்களைப் பாருங்கள்:

உங்களைப்பற்றிய தனிக்குறிப்புகளைப் பொதுவாக முதன்மை பெயர்வெளியில் இடுதல் கூடாது; முதன்மைப் பெயர்வெளி என்பது கலைக்களஞ்சிய உள்ளடக்கத்திற்கு உரியதாகும்.

எனது பயனர் பக்கத்தில் என்னென்ன உள்ளிடலாம்?

தொகு
 
விக்கிப்பீடியா பயனர் பக்கம்

சில பொறுப்பான வரையறைக்குள், விக்கிப் பணிகளுக்கு தொடர்பான, உங்களுக்கு விருப்பமானவற்றை உள்ளிடலாம்.

துவக்கத்தில் உங்களை அறிமுகப்படுத்தும் வண்ணம், உங்களுடன் தொடர்பு கொள்ளத்தக்க தகவல்கள் (மின்னஞ்சல்,உடன்செய்தியான் அடையாளம் என்பன),உங்களின் ஒளிப்படம், உங்களின் உண்மையான பெயர்,வாழுமிடம்,படிப்பு-பட்டங்கள்,தொழில்முறை பட்டறிவு, ஆர்வங்கள், விருப்புவெறுப்புகள், உங்களின் பிற வலைத்தளங்கள் மற்றும் இன்ன பிற செய்திகளைத் தரலாம். இவையும்கூட எந்த அளவு உங்களால் தனிப்பட்ட தகவல்களைத் தருவதில் உங்களுக்குத் தயக்கமில்லை என்பதைப் பொறுத்தது. இணையத்தில் தனியார் தகவல்களைத் தருவதால் உள்ள சிக்கல்களை உள்வாங்கி இம்முடிவினை நீங்கள் எடுக்கவேண்டும்.

உங்கள் பயனர் பக்கத்தை விக்கிப்பீடியா பங்களிப்பிற்கு துணைபுரியவும் பயன்படுத்தலாம்: செய்ய வேண்டுவன பட்டியல்கள், தொடங்கிய கட்டுரைகள், நினைவுக்குறிப்புகள், பயனுள்ள இணைப்புகள் போன்றவை.

மற்றொரு பயன், பிற விக்கிப்பீடியருக்கு உங்களின் செயல்பாடுகளையும் கருத்துகளையும் தெரிவிப்பது. ஆகவே, உங்களது தற்போதைய திட்டங்கள், விக்கிப்பீடியாவில் உங்களது பங்கு, சில விக்கிப்பீடியா கட்டுரைகள்/கொள்கைகள் மீதான உங்கள் கருத்துகளை இடலாம். நீங்கள் சிறிது காலம் விக்கிப்பணியாற்ற வியலவில்லை என்றால் அதனையும் இங்கு குறித்து வைக்கலாம்.

உங்களுக்குப் பிடித்த மேற்கோள்களை இங்கு இடலாம், சென்றவிடங்களின் நிழற்படங்களைக் காட்சிப்படுத்தலாம், நீங்கள் உருவாக்கிய சிறந்த விக்கிப்பீடியா கட்டுரைகளை இணைக்கலாம். யாரேனும் உங்களுக்கு விருது வழங்கினால் அவற்றைப் பட்டியலிடலாம். எதிர்பாராதவிதமாக, விக்கிப்பீடியாவில் உங்கள் தொகுத்தல் உரிமை விலக்கப்பட்டால் அந்த அறிவிப்பும் இங்குதான் வெளியிடப்படும்.

உங்கள் ஆக்கங்களை இரட்டை உரிம முறையில் அளித்திட விரும்பினால் அல்லது அனைத்தும் பொதுவெளியில் கொடுக்க விரும்பினால், அதற்கான அறிவிப்பை உங்கள் பயனர் பக்கத்தில் இடலாம்.

பொதுவாக,உங்கள் பயனர் பக்கத்தில் விக்கிப்பீடியா தொடர்பில்லாத செய்திகளை வெளியிடுவது விரும்பத்தக்கதல்ல. விக்கிப்பீடியா உங்கள் தனிப்பட்ட இணையதளமாக மாறிடக் கூடாது. ஓர் விக்கிப்பீடியனின் பக்கமாக இருக்க வேண்டும். இந்தப் பக்கத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட விக்கிப்பீடியர் வகைகள் இணையுங்கள். விக்கிப்பீடியர் பகுப்புகள் ஒரே துறையில் நாட்டம் கொண்ட விக்கிப்பீடியர் ஒருங்கிணைந்து செயல்பட உதவுகிறது. இது கட்டுரை பகுப்புகளுடன் ஒருசேர இருக்கக் கூடாது. விக்கிப்பீடியர் என்ற ஒட்டை இணைப்பது மிகவும் முக்கியம்.

நீங்கள் மற்றவர்களின் பயனர் பக்கங்களுக்குப் பேச்சுப் பக்கங்களில் அவர்களிட்ட கையொப்பத்தைச் சொடுக்கி சென்றடையலாம். பொதுவாக,அவர்களது பயனர் பக்கத்தில் அவர்களது அனுமதியின்றித் தொகுத்தல் கூடாது. ஆயினும் சிறு எழுத்துப்பிழைகள், சந்திப்பிழைகள் என்பவற்றைத் தொகுக்கலாம். சிலர் இவ்வாறு தங்கள் பயனர் பக்கங்கள் தொகுக்கப்படுவதை விரும்புவதில்லை. அவர்களது உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு தொகுப்பது அவசியம். குறை/குற்றங்களை அவர்களது பேச்சுப்பக்கத்தில் சுட்டிக்காட்டி பிழை திருத்தும் பொறுப்பை அவரிடமே விட்டுவிடுவது சிறப்பானது.

பயனர் துணைப்பக்கங்கள் எதற்காக

தொகு

உங்களுக்கு கூடுதல் பக்கங்கள் வேண்டியிருந்தால், உங்கள் துணைப்பக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம். இங்கு உங்கள் பயனர் அல்லது பயனர் பேச்சுப்பக்கத்தில் இடக்கூடிய எந்த உள்ளடக்கமும் இங்கும் இடலாம்.

காட்டுகள்:

  • ஓர் கட்டுரையின் பயிற்சிக்கூடமாக, முழுவதும் முடிந்ததும் முதன்மை பெயர்வெளியில் வெளியிடலாம்.
  • பேச்சுப் பக்கங்களின் சேமிப்புகள்:
  • சோதனைகள்;

நான் எதை தவிர்க்க வேண்டும்?

தொகு

பொதுவாக, விக்கிப்பீடியாவிற்கு தொடர்பில்லாதவற்றை உள்ளிடுவதை தவிர்க்க வேண்டும். சில எடுத்துக்காட்டுகள்:

  • விக்கிப்பீடியாவிற்கு புறத்தே உங்களது இணையச் செயல்களை ஆவணப்படுத்துவது
  • விக்கிப்பீடியா தொடர்பில்லாத நெடிய உரையாடல்கள்
  • கூடுதல் தனிநபர் விவரம் (இரண்டு பக்கத்திற்கும் மேற்பட்டு)
  • விக்கிப்பீடியா அல்லது கலைக்களஞ்சியமல்லாத, தொடர்பில்லா விடயங்களைக் குறித்த கருத்துக்கள்
  • இந்தத் திட்டத்தில் பங்கேற்காத பிறருடன் கலைக்களஞ்சியம் உருவாக்குவதைத் தவிர்த்த விளையாட்டுகள், மற்றும் பிற மனமகிழ்வு செயல்கள்.
  • இந்தத் திட்டத்தில் பங்களிக்காதவர்களுடனான உரையாடல்கள்

விக்கிப்பீடியாவுடன் தொடர்பில்லாத உள்ளடக்கங்களுக்கு பல இலவச அல்லது குறைந்த கட்டண வலைத்தள வழங்கி சேவைகள், மின்னஞ்சல் மற்றும் வலைப்பதிவு தளங்கள் பரவலாக உள்ளன.

மேற்கூறிய பரிந்துரைகள் விக்கிப்பீடியர்களால் மிகத் தளர்வாக செயலாக்கப்படுகின்றன. விக்கி குமுக வளர்ப்பில் இவை முக்கியப் பங்கு வகிப்பதால் மிகக் கடுமையாக விக்கி தொடர்பில்லாத உள்ளடக்கங்கள் தடை செய்யப்படுவதில்லை.

உங்கள் பயனர் பக்கத்திலிருந்து உங்கள் பேச்சுப்பக்கத்திற்கோ அல்லது பயனர் பக்கத்தின் துணைப்பக்கத்திற்கோ அல்லது வேறு பக்கங்களுக்கு வழிமாற்று கொடுப்பதை வழமையான விக்கிப்பீடியர்கள் விரும்புவதில்லை. அவை உங்களுடனுனான உரையாடல்களுக்கும் உங்கள் பங்களிப்புகளை அறியவும் தடையாக உள்ளன. ஒரு விலக்காக உங்கள் புதிய கணக்கின் பயனர் பக்கத்தை பழைய கணக்கின் பயனர் பக்கத்திற்கு வழிமாற்று கொடுப்பதைக் கூறலாம்.

பயனர்வெளி பக்கங்களின் உரிமையும் தொகுத்தலும்

தொகு

விக்கிப்பீடியாவின் பயனர் பக்கத்தை உங்கள் விருப்பப்படி மேலாண்மை செய்ய உரிமை உண்டு. இருப்பினும் இந்தப் பக்கங்களும் விக்கி குகத்தைச் சேர்ந்தவையாகும். அந்தளவில் :

  • பங்களிப்புகளுக்கு பிற கட்டுரைகள் போன்று குனூ தளையறு ஆவண உரிமம் வழங்கப்பட வேண்டும்.
  • உங்கள் பயனர் பக்கத்தை மற்றவர்கள் பொதுவாக தொகுக்க மாட்டார்கள் என்றாலும் பிற பயனர்கள் தொகுப்பதை அனுமதிக்க வேண்டும்.
  • விக்கிப்பீடியா:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல் உள்ளிட்ட விக்கிப்பீடியா கொள்கைகள், மற்றப் பக்கங்களைப் போலவே, உங்கள் பயனர் பெயர்வெளிப் பக்கஙளுக்கும் பொருந்தும்.
  • சில நேரங்களில் திட்டத்தின் நோக்கத்தை மேலெடுத்துச் செல்லாது எனக் கருதப்படும் உள்ளடக்கங்கள் நீக்கப்படலாம் (கீழே பார்க்க).

பொதுவாக, மற்றவர்களால் மாற்றப்படக்கூடாது என நீங்கள் எண்ணும் உள்ளடக்கங்கள், விக்கிப்பீடியாவிற்கு பொருந்தாத உள்ளடக்கங்கள் இவற்றை தனிப்பட்ட வலைத்தளம் அல்லது வலைப்பதிவில் வைத்துக்கொள்வது சிறப்பாகும். இச்சேவைகளை இலவசமாக வழங்கும் பல இணைய அமைப்புகள் இந்தத் தேவைகளை நிறைவேற்றும்.

பயனர் பக்கத்திற்குப் பாதுகாப்புக் கொடுப்பது

தொகு

கட்டுரைப் பக்கங்கள் போன்றே பயனர் பக்கங்களும் விசமத்தனத்திற்கும் தொகுப்புப் போட்டிக்கும் உட்படலாம். அந்த நேரங்களில், தாக்குதலுக்கு உள்ளான பயனர் பக்கம் தொகுத்தலில் இருந்து காக்கப்பட வேண்டும். அவ்வாறு பாதுகாக்கப்பட்டவை அவற்றிற்கான காரணங்களுடன் காக்கப்பட்ட பக்கங்களில் பட்டியலிடப்பட வேண்டும்.

பெரும்பாலான பயனர் பக்க விசமத்தனங்கள் ஓர் நிர்வாகியால் விசமிகளை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது நிகழ்கின்றன. அந்த நடவடிக்கை எடுக்கும் நிர்வாகிக்கு தமது பயனர்பக்கத்தை வேண்டும்போது பாதுகாக்கவும் பயனர் பெயர்வெளியில் பாதுகாக்கப்பட்ட பக்கங்களில் தொகுக்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எப்போதாவது நிர்வாகியல்லாத பயனரின் பயனர்பக்கம் தாக்கப்படலாம். அந்த நேரங்களில் பக்கப் பாதுகாப்பு கோரிக்கையை இங்கு பதிந்தால் நிர்வாகி ஒருவர் அந்தப் பக்கத்திற்கு பாதுகாப்பு அளிப்பார்.

பேச்சுப் பக்கங்களில் விசமத்தனம் குறைவு. வழக்கமாக அத்தகைய தொகுப்புகள் மீட்கப்படலாம். தொடர்ந்து விசமத்தனம் நீடித்தால் தடைகள் விதித்து அந்த இணைய முகவரியிலிருந்து மேலும் தொகுப்பதை தடுக்கலாம். பேச்சுப்பக்கத்தின் உரையாடல்கள் விக்கித் திட்டத்தினை மேல் செலுத்துவதில் பங்காற்றும் முக்கியத்துவத்தைக் கருதி பேச்சுப்பக்கம் தொகுத்தலிலிருந்து பாதுகாக்கப்படுவது கடைசி தீர்வாக இருக்க வேண்டும்.

பயனர்வெளிப் பக்கங்கள் எவ்வளவு விரைவாக இயலுமோ அந்தளவில் பாதுகாப்பு நீக்கப்பட வேண்டும்.

நீக்குவது

தொகு

விக்கிப்பீடியா குமுகம் உங்களது பயனர்வெளியில் ஏதாவது பக்கத்தையோ துணைப்பக்கத்தையோ நீக்கக் கோரினால், விக்கிப்பீடியாவில் குமுக இணக்க முடிவின் தீர்வே இறுதியானது என்றநிலையில் நீங்கள் அதனை நீக்கி விடுவது சிறப்பாகும். நீங்கள் ஓராண்டுக்கும் மேலாக பங்களித்திருந்தாலோ பல பயனுள்ள கட்டுரைகளை அளித்திருந்தாலோ குமுகம் உங்களிடம் கனிவாக நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. வேண்டுமானால் உங்கள் உள்ளடக்கத்தை வேறு இணைய வசதிக்கு நகர்த்தி அதற்கு இணைப்புக் கொடுக்கலாம்.

நீங்கள் ஒத்துழைக்காவிடில் குறிப்பிட்ட பக்கத்தில் சர்ச்சைக்குள்ளானப் பகுதியை தொகுத்தோ அல்லது முழு துணைப்பக்கமும் பொருந்தாதிருந்தால் உங்கள் முதன்மை பயனர் பக்கத்திற்கு வழிமாற்று கொடுத்தோ பொருந்தாத உள்ளடக்கம் நீக்கப்படும். சில தீவிரமான நேரங்களில், நீக்குதல் கொள்கையின்படி இதர நீக்கல்கள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டு உங்கள் துணைப்பக்கமே நீக்கப்படலாம்.

இவ்வாறு நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை மீண்டும் உள்ளிட முயற்சிக்காதீர்கள்: அவ்வாறு செய்தால் அவை விரைவாக நீக்கப்பட வேண்டிய பக்கமாக உடனே நீக்கப்படும். மாறாக, விக்கிக் குமுகத்தின் தீர்ப்பை மதிக்கவும்.

எனது துணைப்பக்கங்களை எவ்வாறு நீக்குவது?

தொகு

கீழேயுள்ள வழிகாட்டுதல்கள் உங்களுக்கு கடினமாகத் தோன்றினால் உங்கள் துணைப்பக்கத்தை உங்கள் பயனர் பக்கத்திற்கு மீள் வழிப்படுத்தினால் போதுமானது.

நீங்கள் ஓர் நிர்வாகியாக இருந்தால் தவிர உங்களால் உங்கள் துணைப்பக்கங்களை நீக்க முடியாது. ஆகவே அவற்றை விரைவு நீக்கல்கள் பக்கத்தில் பட்டியலிட வேண்டும். நீங்கள் நிர்வாகியாக இருந்தால் கூட இந்தப் பக்கத்தில் பட்டியலிட்டு பிற நிர்வாகிகள் மூலம் நீக்க பரிந்துரைக்கப்படுகிறது.


முன்பு வேறு பெயர்வெளியில் இருந்து பயனர் பெயர்வெளிக்கு நகர்த்தப்பட்ட துணைப்பக்கங்களை இவ்வாறு நீக்குதல் கூடாது. இவை நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் பக்கத்திலோ அல்லது முதன்மை பெயர்வெளியில் முன்பு இல்லாத பக்கங்களாக இருந்தால், முதன்மை பெயர்வெளியில் இல்லாத நீக்கப்படவேண்டிய பக்கங்கள் பக்கத்திலோ பட்டியலிடப்பட வேண்டும். அதேபோல அவை பழைய பெயர்வெளிக்கே மீட்கப்பட வேண்டும் என்றால் விரைவு நீக்கங்கள் பக்கத்தில் அந்தக் கோரிக்கையை இடவும்.

எனது பயனர் பக்கத்தை/பயனர் பேச்சுப் பக்கத்தை எப்படி நீக்குவது?

தொகு

எந்தவொரு தவறான செயல்பாடும் இல்லையெனில், தனி விவரங்களைச் சேமிக்கும் நிருவாகத் தேவைகள் எதுவும் இல்லையெனில், உங்கள் பயனர் பக்கத்தை அல்லது பயனர் பேச்சுப் பக்கத்தை நீக்கிடக் கோர முடியும்.பெரும்பாலும் நெடுங்காலப் பங்களிப்பாளர் விக்கிப்பீடியாவிலிருந்து விலக முடிவு செய்யும்போது இவ்வாறு கோரிக்கை எழும்.

பயனர் பக்கம் விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு பக்கத்தில், தகுந்த காரணங்களுடன், விரைந்து நீக்கப்பட பட்டியலிடப்பட வேண்டும். நிர்வாகி ஒருவர் ஆவணப்படுத்த வேண்டிய கொள்கை பிறழ்வுகள் எதுவும் அந்தப் பக்கத்தில் இல்லை என்று உறுதி செய்துகொண்டபிறகு பக்கத்தை நீக்குவார். தனிப்பட்ட விவரங்களை ஆவணப்படுத்த வேண்டிய எந்தவொரு விசமத்தனமான நடவடிக்கையும் இல்லையெனில் உடனடியாகவே அவர் அதனை நீக்கி விடுவார். வேறு எவருக்காவது அந்தப்பக்கத்தில் இருந்த விவரங்கள் தேவையாக இருந்தால் அவர்கள் நீக்குதலை மீட்டிட கோரிக்கை விடலாம். அவ்வாறு மீட்கப்பட்டப் பக்கங்கள் முதன்மை பெயர்வெளியில் இல்லாத நீக்கப்படவேண்டிய பக்கங்கள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டு ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.

ஓர் பயனர் விலகிச் சென்றதால் நீக்கப்பட்டப் பக்கத்தை நிர்வாகி அவர் மீண்டும் வந்தால் மீட்டுக் கொடுக்கலாம்.

நீக்கப்பட்ட பயனர் பக்கங்கள் சிவந்த இணைப்புகள் அவற்றைச் சுட்டுவதைத் தவிர்க்க, வெற்றுப்பக்கமாக மீளுருவாக்கலாம் அல்லது விக்கிப்பீடியா:இல்லாத விக்கிப்பீடியர் பக்கத்திற்கு இணைப்புக் கொடுக்கப்படலாம்.

எனது பயனர் பக்கத்திலிருந்து வேறென்ன விவரங்கள் மற்றவருக்கு கிடைக்கும் ?

தொகு

வழக்கமாக கட்டுரைப் பக்கமொன்றில் கிடைக்கும் பக்க வரலாறு,உரையாடல் போன்றவை தவிர, கருவிப்பெட்டியில் அல்லது பக்கதின் அடியில் "பயனர் பங்களிப்புகள்" என்ற இணைப்பைச் சொடுக்கி விக்கிப்பீடியாவிற்கு ஆற்றியுள்ள பங்களிப்புகளை எந்த விக்கிப்பீடியரும் காணலாம். மேல்விவரங்களுக்கு பார்க்க: மீடியாவிக்கி பயனர் கையேடு: பயனர் பங்களிப்புகள் பக்கம் .

நீங்கள் விருப்பத்தேர்வுகளில் மின்னஞ்சலை அனுப்பவும் பெறவும் தேர்வு செய்திருந்தால் உங்கள் பயனர் பக்கத்தின் வருனர்களுக்கு கருவிப்பெட்டியில் "இப்பயனருக்கு மின்னஞ்சல் செய்" என்ற இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். விக்கிப்பீடியா:பயனருக்கு மின்னஞ்சல் செய்ய.