வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு, அல்லது பேதி, என்பது ஒரு நாளில் மூன்று அல்லது அதற்கு மேல் தளர்வாக அல்லது நீர்க்க மலம் கழிப்பதாகும்.[2] இது வளரும் நாடுகளில் மரணத்திற்கான பொதுவாக காரணமாகவும் உலகளவில் குழந்தை இறப்பிற்கு இரண்டாவது மிகப்பெரும் காரணமாகவும் அமைந்துள்ளது. வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பினால் நீர்ப்போக்கு மற்றும் மின் பகுபொருள் சமநிலை இழப்பு நேர்கின்றன. 2009 ஆம் ஆண்டில் வயிற்றுப்போக்கினால் இறந்த ஐந்து வயதுக்கு மேலானவர்களின் எண்ணிக்கை 1.1 மில்லியனாகவும் ஐந்து வயதிற்குக் குறைவானவர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனாகவும்[1]இருந்தது. இதற்கான தீர்வாக வாய்வழி கனிமக் கரைசலும் மற்றும் துத்தநாக உப்புக்களும் கொடுக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளில் 50 மில்லியன் குழந்தைகள் காப்பாற்றப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.[1]

வயிற்றுப்போக்கு
ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட 40% வரை காரணமாயுள்ள ரோடா நுண்ணுயிர்களின் எலத்திரன் நுண்நோக்கி காட்சி[1]
ஐ.சி.டி.-10A09., K59.1
ஐ.சி.டி.-9787.91
DiseasesDB3742
ஈமெடிசின்ped/583
MeSHD003967

வரைமுறை

தொகு

உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளபடி ஒரு நாளில் மூன்று அல்லது அதற்கு மேலாக தளர்வாக அல்லது நீர்க்க மலம் கழிப்பது அல்லது ஒருவர் தமக்கு வழமையானதைவிடக் கூடுதலாக மலம் கழிப்பது வயிற்றுப்போக்கு எனப்படும். [2]

நோய் பரவு இயல்

தொகு
 
Disability-adjusted life year for diarrhea per 100,000 inhabitants in 2004.[3]
  no data
  < 500
  500-1000
  1000-1500
  1500-2000
  2000-2500
  2500-3000
  3000-3500
  3500-4000
  4000-4500
  4500-5000
  5000-6000
  > 6000

2004ஆம் ஆண்டில் உலகளவில் ஏறத்தாழ 2.5 பில்லியன் வயிற்றுப்போக்கு நோயாளிகள் பந்தியப்பட்டு அதில் ஐந்து அகவைக்கும் குறைவான 1.5 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளனர்.[1] இவற்றில் பாதிக்கும் மேலானவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள்.[1] இது இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த ஆண்டுக்கு 5 மில்லியன் இறப்பு வீதத்தை விடக் குறைந்துள்ளது.[1] இந்த வயதினரிடையே இறப்புக்கு நுரையீரல் அழற்சிக்கு (17%) அடுத்து இரண்டாவது முக்கிய காரணமாக (16%) விளங்குகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "whqlibdoc.who.int" (PDF). உலக சுகாதார அமைப்பு.
  2. 2.0 2.1 "Diarrhoea". World Health Organization.
  3. "Mortality and Burden of Disease Estimates for WHO Member States in 2004" (xls). உலக சுகாதார அமைப்பு.

வெளியிணைப்புகள்

தொகு