பிரைஸ் டிவிட்
| spouse = செசிலி மாரட் (1951 | children = 4 }} }} பிரைசு செலிக்மேன் தெவிட்டு (Bryce Seligman DeWitt) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளர் ஆவார். 1923 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கோட்பாட்டு இயற்பியலாளரான இவர் ஈர்ப்பு மற்றும் குவாண்டம் புலக் கோட்பாட்டில் ஈடுபட்டதற்காக அறியப்படுகிறார்.[1]
பிரைஸ் டிவிட் | |
---|---|
தனது மனைவி சிசிலியுடன் பிரைஸ் | |
பிறப்பு | கால் பிரைஸ் செலிமன் ஜனவரி 8, 1923 தினுபா, கலிபோர்னியா, அமெரிக்கா |
இறப்பு | செப்டம்பர் 23, 2004 (அகவை 81)
ஆஸ்டின், அமெரிக்கா |
துறை | கோட்பாட்டு இயற்பியல் |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் | ஆர்வர்டு பல்கலைக்கழகம் (முனைவர்) |
ஆய்வு நெறியாளர் | ஜூலியன் சுவிங்கர் |
முனைவர் பட்ட மாணவர்கள் |
|
விருதுகள் | ஐன்ஸ்டின் பரிசு (2005) |
வாழ்க்கைக் குறிப்புகள்
தொகுகால் பிரைஸ் செலிமன் ('Carl Bryce Seligman) என்பது இவருடைய இயற்பெயர். 1950 இல் தந்தையின் மறைவிற்குப் பின் இவரும், இவரது மூன்று சகோதரர்களும் தாய்வழிப் பெயரான டிவிட் (De Witt) என்பதனைத் தங்களது பெயரோடு இணைத்துக் கொண்டனர். ஐரோப்பாவில் இளம் விஞ்ஞானியாக வலம் வந்த காலத்தில் தனது பெயர் மாற்றத்தின் காரணமாக ஃபெலிக்ஸ் ப்ளோச் (Felix Bloch) என்பாரின் பகைமைக்கு உள்ளாகி, அவருக்கு ஸ்டான்ஃபோர்டு(Stanford) பல்கலைக்கழகத்தில் கிடைக்க வேண்டிய பதவி கிடைக்காததால் ஆஸ்டின் (Austin, Texas) நகரத்திற்குச் செல்ல நேர்ந்தது. இரண்டாம் உலகப் போரின் போது கடற்படை விமானியாகப் பணியாற்றினார். இயற்பியல் மற்றும் கணிதத் துறையில் வல்லுநரான சிசில் டிவி – மொரெட் (Cecile De Witt–Morette) என்பாரை மணந்தார். கல்லீரல் புற்றுநோய் காரணமாக தனது 81 ஆவது அகவையில் செப் 23, 2004 ல் மறைந்தார். அவரது இறுதிச் சடங்கினை மனைவி மற்றும் நான்கு குழந்தைகளும் பிரான்ஸில் (France) செய்தனர்.
பணிகள்
தொகுபொது சார்பியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட இவர் வீலர் (Wheeler) என்பாருடன் இணைந்து பேரண்டம் தொடர்பான அலைக் கொள்கையினையும், சமன்பாட்டையும் வெளியிட்டார். இவருடைய மாணவர் லாரி ஸ்மார் (Larry Smarr) என்பவர் எண்ணியல் தொடர்பான சார்பியல் ஆராய்ச்சியை மேற்கொண்டார். தனது இளங்கலை மற்றும் முனைவர் பட்டத்தை ஹார்வார்ட் (Harvard University) பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவருடைய வழிகாட்டி ஆசிரியர் முனைவர் ஜூலியன் ஸ்விங்கர் (Julian S. Schwinger). 1987 ஆம் ஆண்டு டிராக் (Dirac) பரிசினையும், 2005 இல் ஐன்ஸ்டீன் பரிசினையும் பெற்றார். அமெரிக்க சஞ்சிகை மற்றும் தேசிய அறிவியல் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார்.
சான்றாவணம்
தொகு- ↑ Weinberg, Steven (2008). "Bryce Seligman DeWitt 1923-2004: Biographical Memoir" (PDF). nasoline.org. பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
மேலும் படிக்க
தொகு- Deutsch, David; Isham, Christopher; Vilkovisky, Gregory (1 March 2005). "Bryce Seligman DeWitt". Physics Today 58 (3): 84–84. doi:10.1063/1.1897570. https://pubs.aip.org/physicstoday/article/58/3/84/1017002.
- DeWitt-Morette, Cécile (2011). The Pursuit of Quantum Gravity: Memoirs of Bryce DeWitt from 1946 to 2004 (in ஆங்கிலம்). Springer. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-642-14270-3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-14270-3.
- University of Texas obituary பரணிடப்பட்டது மே 11, 2008 at the வந்தவழி இயந்திரம்
- Oral history interview transcript with Bryce DeWitt and Cecile DeWitt-Morette on February 28 1995, American Institute of Physics, Niels Bohr Library & Archives