பாக்ச்சு (bakhsh, பாரசீக மொழி: بخش‎, baxš) என்பது ஈரானின் ஆட்சிப் பிரிவுகளுள் ஒன்றின் பெயராகும். பல நேரங்களில், இச்சொல்லானது மண்டலம் (County) என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த ஆட்சிப்பிரிவானது, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஒரு திட்டநகரம் (township) அல்லது இங்கிலாந்து நாட்டின் மாவட்டங்கள் (Districts of England) போன்ற நிருவாக முறையைக் கொண்டதே ஆகும். இவைகள் தமிழகத்தின் மாவட்டங்கள் போன்றவை எனலாம்.

ஈரானின் அரசாட்சிப் பிரிவு

ஆளுகை அமைப்பு

தொகு

ஈரானில் வரலாற்று அடிப்படையில் ஐந்து ஆட்சிப்பகுதிகள் உள்ளன. இந்த ஐந்து பகுதிகளும், அடுத்து 31 பெரிய மாகாணங்களாகப் (பாரசீகம் : استان‎ Ostān,) பிரிக்கப்பட்டுள்ளன.[1] இந்த மாகாணங்கள் மூன்றாம் நிலைப் பிரிவாக மண்டலங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலம் என்ற சொல்லின் மூல பாரசீகச் சொல் 'சார்', 'சடன்' என்ற இரு பொருள்களைப் (šahr ("city, town"), stân ("province, state")) பெற்றிருக்கிறது. இவ்வாறு தான் சாரெசுடன் (இங்கிலாந்து:county; USA:Township) என்ற பெயர் இதற்கு வந்தது. இதற்கு ஓரளவு சமமான பொருள் உடைய தமிழ்ச் சொல் மண்டலம் ஆகும். ஈரானின் மண்டலத்தை அந்நாட்டினர் சாரெசுடன் (பாரசீக மொழி: شهرستانšahrestân, County) என்றே அழைக்கின்றனர். இவை அந்நாட்டு அரசின் ஆளுகைப் பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவுக்கு மேலே இரண்டு பிரிவுகள் உள்ளன. முதற்பிரிவின் பெயர் ஆட்சிப்பகுதி என்பர்.

ஒவ்வொரு ஈரானிய மண்டலமும், நான்காம் நிலை ஆட்சிப்பிரிவாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாக்ச்சுகளாகப் ( baxš بخش) பிரிக்கப்படுகின்றன. இவைகள் தமிழகத்தின் மாவட்டங்கள் போன்றவை எனலாம். பொதுவாக இந்நாட்டில் ஒரு மண்டலம் என்பது யாதெனில், ஓரிரு நகரங்களையும் (பாரசீகம்: شهر šahr ) அத்துடன் ஊர்ப்புறத் திரட்சிகளையும் ( دهستان dehestân ) பெற்றிருக்கும். இதனுள் ஒரு நகரமே, அந்த மண்டலத்தின் தலைநகராகச் செயல்படுகிறது.

ஒவ்வொரு மண்டலமும் பஃர்மன்தாரி (farmandari) எனப்படும், அலுவலகத்தால் நிருவகிக்கப்படுகிறது. இந்த அலுவலகமானது, வெவ்வேறு பொது நிகழ்வுகளையும், முகமை வழி செயற்படும் செயற்களையும் ஒருங்கிணைக்கிறது. இந்த ஒருங்கிணைப்பினை பஃர்மந்தர் (farmandar) என்ற மண்டல ஆளுநர் ஆட்சி செய்வார். இவரே இம்மண்டலத்தின் தலைமை அதிகாரியாக செயற்பட்டு, இம்மண்டலத்தை வழிநடத்துவார்.

கையேடு

தொகு

இந்த உட்பிரிவுகளை நன்கு புரிந்து கொள்ள, பின்வரும் அட்டவணை பயனுள்ளதாக இருக்கும். பி மாகாணம் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏ மற்றும் பி. மண்டலம் ஏ என்பது, 3 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. ஒன்று நடுவ மாவட்டம், இரண்டாவது எக்சு மாவட்டம், மூன்றாவது ஒய் மாவட்டம். நடுவ மாவட்டத்தின் தலைநகரான சிட்டி எம் எனக் கருதுவோம். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகரங்கள் மற்றும் / அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊரக மாவட்டம் (RAs = rural agglomerations) உள்ளன. எங்கள் எடுத்துக்காட்டில், நடுவ மாவட்டத்தில் சிட்டி எம், சிட்டி என், மற்றும் ஆர்ஏ டி ஆகியவை உள்ளன. இது வி 1, வி 2, வி 3 மற்றும் வி 4 ஊரகங்களை உள்ளடக்கியது; மாவட்ட எக்சு சிட்டி ஓ மற்றும் ஆர்ஏ யு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மாவட்ட Y க்கு நகரங்கள் இல்லை. ஒரு ஆர்.ஏ. வி. குறைந்தபட்ச மாவட்டமானது, ஒரே ஒரு நடுவ மாவட்டமாக, ஒரே நகரத்தை மட்டுமே கொண்டுள்ளது. பின்வரும் அட்டவணையில் உள்ள மண்டலம் பி அத்தகைய வகையாகும். இதில் ஒரே ஒரு நகரம் 'குயூ' ஆகும்.

Ostan (மாகாணம்) Shahrestan (மண்டலம்) மாவட்டம் நகரம் / ஊரக மாவட்டம் (RA*) ஊர்கள்
பி நடுவம் நகரம் எம் (தலைநகரம்)
நகரம் என்
RA டி ஊர்1, ஊர்2, ஊர்3, ஊர்4
X நகரம் ஓ
RA யூ ஊர்5, ஊர்6
ஒய் RA ஊர் ஊர்7, ஊர்8, ஊர்9
பீ நடுவம் நகரம் கியூ RA=rural district

குறிப்புகள்

தொகு
  1. . 1 October 1999 https://books.google.com/books?id=nXCeCQAAQBAJ&pg=PA183. {{cite book}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்ச்சு&oldid=2869156" இலிருந்து மீள்விக்கப்பட்டது