பிராகிருதம்

(பாகதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிராகிருதம் அல்லது பாகதம் (பாளி: प्राकृतं ) என்பது பழங்காலத்தில் வட இந்தியத் துணைக்கண்டத்தில் பேசப்பட்டு வந்த சில மொழிகளையும், அதன் வழக்குகளையும் குறிக்கின்றது. எனவே பிராகிருதம் என்பது ஒரு மொழி அல்ல. ஒரு மொழிக்குடும்பத்தை குறிக்கின்றது. சமசுகிருதத்தை சங்கதம் என்றும், பிராகிருதத்தை பாகதம் என்றும், அவப்பிரஞ்சனம் வடமொழி என்றும் பண்டைய தமிழர் அழைப்பர்.[1][2] இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. பிராகிருத மொழிகள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களால் பேசப்பட்டு வந்தது. பிராகிருதத்தை அரசர்கள் போற்றி வந்தாலும், சங்கத, பாகத இலக்கண மொழியாளர்கள் அதை வடமொழிக்கு புறம்பாகவே[சான்று தேவை] கருதினர். பல்வேறு பிராகிருத மொழிகள் பலதரப்பட்ட மக்களால் அவப்பிரஞ்சனம் பேசப்பட்டு வந்தன.

பிராகிருதம்
புவியியல்
பரம்பல்:
மொழி வகைப்பாடு: *இந்திய-ஐரோப்பிய
 * இந்திய-ஈரானிய
  
துணைப்பிரிவு:
ISO 639-2 639-5: pra
பிராகிருத கீறல்கள், பிரித்தானிய அருங்காட்சியகம்
சூரியபிரசன்ப்திசூத்திம் என்ற வானவியல் நூலின் பகுதி
இப்படம், விக்கித்திட்டத்திங்களில், இம்மொழியினைக் குறிக்கிறது.(Pra)

பிராகிருத மொழிகள் இந்தியாவில் கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 10ஆம் நூற்றாண்டு வரை மக்களால் அவப்பிரஞ்சனங்கள் பேசப்பட்டு வந்தன. பெரும்பான்மையான வட இந்திய மொழிகள் பிராகிருதத்தின் அவப்பிரஞ்சனத்திலிருந்தே தோன்றின.

சொற்பிறப்பியல்

தொகு

பிராகிருதம் என்ற சொல் பிரகிருதி, பகதி ( வடமொழி प्रकृति ) என்ற வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது ஆகும். பிரகிருதி, பகதி என்றால் இயற்கை, இயல்பு என பொருள் கொள்ளலாம். சாதாரண மக்கள் இயல்பாக பேசிய மொழியாதலால் இதை பிராகிருதம் என அழைத்ததாக மொழியியில் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்[யார்?]. மாறாக சமஸ்கிருதம், சாங்கதம் (संस्कृतं) என்றால் 'நன்றாக செய்யப்பட்டது' எனப் பொருள்.

பிராகிருத மொழிகள்

தொகு

பல பிராகிருத மொழிகள் உள்ளன. அவற்றுள் பலதரப்பட்ட இலக்கிய மரபுடையன மூன்று. அவை சௌரசேனி, மகதி, மஹாராட்டிரி. சமண பிராகிருதத்தையும் இத்தோடு சேர்த்துக்கொள்ளலாம். பைஸாகி, காந்தாரி என்ற பிராகிருத மொழிகளும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றன. அர்த்தமகதி என்ற மொழி சமண நூல்களை எழுதப் பயன்படுத்தப்பட்ட பிராகிருத மொழியாகும்.

புத்தர் கூட ஒரு பிராகிருத மொழியிலேயே தனது போதனைகளை செய்தார். பாளி மொழியும் ஒரு பிராகிருத மொழியே. பெரும்பான்மையான தேரவாத புத்த மத நூல்களும் சூத்திரங்களும் பாளி மொழிலேயே உள்ளன. அசோகரின் கல்வெட்டுகளும் இம்மொழிலேயே உள்ளது. எனினும் பல்வேறு இனபேத காரணங்களுக்காக [மேற்கோள் தேவை] வடமொழி நூலாசிரியர்கள் பாளியை ஒரு பிராகிருத மொழியாக கருதவில்லை. தற்காலத்தில் அது பிராகிருத மொழியாகவே கருதப்படுகிறது [மேற்கோள் தேவை]. பெரும்பான்மையான தற்கால வட-இந்திய மொழிகளில் தென்னிந்திய 'தமிழ் மொழி' குடும்பத்தை தவிர்த்து ஏனைய மொழிகள் பிராகிருத்தில் இருந்து தோன்றிய அபப்ரம்சா[சான்று தேவை] என்ற இடைக்கால மொழியிலிருந்தே தோன்றின.

செம்மொழி தகுதி

தொகு

6 அக்டோபர் 2024 அன்று இந்தியப் பண்பாட்டு அமைச்சகத்தால் பிராகிருத மொழி மற்றும் பாளி மொழிகளுக்கு செம்மொழிக்கான தகுதி வழங்கப்பட்டது.[3][4][5]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Virtual University". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.
  2. எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும், வடநாட்டிற் பயில வழங்குதலின் வடசொல் ஆயிற்று. வடசொல்லென்றதனால் தேய வழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவுங் கொள்க. - தொல்காப்பியம் - 397 நூற்பாவுக்கான தெய்வச்சிலையார் உரை
  3. Status of Classical Languags By Ministry of Culture
  4. Prakrit & Pali: All you need to know about the newly designated Classical Languages
  5. Centre approves 5 new classical languages

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராகிருதம்&oldid=4125832" இலிருந்து மீள்விக்கப்பட்டது