நக்சலைட்டு

நக்சலைட்டுகள், நக்சல்ஸ் அல்லது நக்சல்வாதிகள் அனைவரும் இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட் பொதுவுடமைக் குழுவைச் சார்ந்தவர்கள் என்பதுடன் நக்சலைட்-மாவோயிஸ்ட் கிளர்ச்சியின் தலைவர்கள் ஆவர்.

நக்சலைட் இயக்கம் இயங்கிவரும் மாவட்டங்களைக் காட்டும் வரைபடம் (2007)

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நக்சல்பாரி என்ற கிராமத்தில் அந்த நக்சல்பாரி இயக்கம் தொடங்கப்பட்டதால் மேற்கூறிய பெயர்களைப் பெற்றது. அவ்வியக்கத்தைச் சார்ந்தவர்கள் பொதுவுடமைக் கொள்கையை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் என்பதுடன், மாவோயிஸ்ட் கட்சியின் நோக்கம் மற்றும் கருத்துக்களை ஆதரிப்பவர்கள் ஆவர். 1967 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்) ஏற்பட்ட பிரிவினையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது. தொடக்கத்தில் அந்த இயக்கம் மேற்கு வங்கத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டது. சமீப ஆண்டுகளில், அந்த இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளி்ட்ட அமைப்புகளின் இரகசிய நடவடிக்கைகள் மூலம் சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் கிராம மையங்கள் மற்றும் கிழக்கு இந்தியாவின் குறைந்த வளர்ச்சியடைந்த பகுதிகளில் பரவிக் காணப்படுகிறது.[1]

2009 ஆம் ஆண்டின்படி, இந்தியா முழுவதுமுள்ள 21 மாநிலங்களில் [2] உள்ள 220 மாவட்டங்களில், அதாவது இந்தியாவின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 40 சதவீதப் பகுதிகளில் நக்சலைட்டுகள் இயங்கி வருகின்றனர் என்பதுடன்[3] அவர்கள் "ரெட் காரிடர்" எனப்படும் பிராந்தியப் பகுதிகளில் 92,000 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் இயங்கி வருகின்றனர்.[3] ரிசெர்ச் அன்ட் அனாலிசிஸ் விங் என்ற இந்தியப் புலனாய்வு நிறுவனத்தின் கருத்தின்படி, அந்த இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் ஆகியோரைத் தவிர்த்து 20,000 ஆயுதம் தாங்கிய நக்சலைட் வீரர்கள் இயங்குகின்றனர்[4] அந்த இயக்கத்தின் செல்வாக்கு மிக்க வளர்ச்சியைக் கண்ட அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அதை இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் அமைப்பு என்று அறிவித்தார்.[5]

பொதுவாக அனைத்து இந்திய அரசியல் அமைப்புகளும் நக்சலைட்டுகளை ஆதரிப்பதில்லை.[6] சத்தீஸ்கர், ஒரிசா, ஆந்திரா, மஹாராஸ்டிரா, ஜார்கண்ட், பீகார், உத்திரப் பிரதேசம், மற்றும் மேற்கு வங்கம் போன்ற நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது என்பதுடன், நக்சலைட்டுகள் தப்பிச்செல்வதற்கான அனைத்து வழிகளும் தடுத்து நிறுத்தப்படும் என்று வெளிப்படையாக அறிவித்தது.[7]

வரலாறு

தொகு

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நக்சல்பரி என்ற கிராமத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் அடிப்படையில் நக்சலைட்டு என்ற வார்த்தை தோன்றியது. சாரு மஜூம்தார், கானு சான்யால் மற்றும் ஜங்கல் சந்தால் ஆகியோர் நிலச் சீர்திருத்தம் தொடர்பாக முன் வைத்த மாறுபட்ட அணுகுமுறை 1967 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்) அமைப்பின் பிரிவினைக்கு வழிவகுத்தது. நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்தை மறு விநியோகம் செய்ய ஆயுதம் ஏந்திப் போராடத் தயாராக இருப்பதாக சிலிகுரி கிசான் சபையின் தலைவர் ஜங்கல் 1967 ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்தார்.[8] அதற்கடுத்த வாரத்தில், நிலத் தகராறின் காரணமாக நக்சல்பரி கிராமத்திற்கு அருகே குத்தகைக்குப் பயிர் செய்யும் விவசாயி அந்த நிலத்தின் உரிமையாளரால் தாக்கப்பட்டார். 1967 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி, அந்த விவசாயியைக் கைது செய்ய வந்தபோது, ஜங்கல் சந்தால் என்பவரால் வழிநடத்தப்பட்ட குறிப்பிட்ட இனத்தவர்கள் காவல்துறைக் குழுவை மறைந்திருந்து தாக்கினர். அதில் காவல்துறை ஆய்வாளர் அம்பினால் தாக்கப்பட்டு இறந்தார். சந்தால் ஜங்கலின் பல ஆதரவாளர்கள் மற்றும் மற்ற விவசாயிகள் அனைவரும் இணைந்து ஒரு இயக்கத்தைத் தொடங்கி உள்ளூர் நிலக்கிழார்களைத் தாக்கத் தொடங்கினர்.[6]

சீன கம்யூனிஸ்ட் தலைவர் மா சே துங் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட சாரு மஜூம்தார் முதலான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நக்சல்பரி கிராமத்தின் இயக்கத்திற்கு வழிகாட்டும் பொறுப்பேற்றனர். சாரு இந்திய விவசாயிகளுக்காக போராடினார் என்பதுடன் அரசாங்கம் மற்றும் மேல்தட்டு வர்கத்தினரைத் துப்பாக்கியைக் கொண்டு வீழ்த்த வேண்டும் என்று அடித்தட்டு வர்கத்தினருக்கு ஆலோசனை வழங்கினார். பெரும் எண்ணிக்கையிலான நகரப் பிரமுகர்கள் அவருடைய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டனர். மஜூம்தார் எழுதிய 'எட்டு வரலாற்று ஆவணங்களின்' மூலம் அவருடைய கருத்துக்கள் வேகமாகப் பரவின, அந்த ஆவணங்களே நக்சலைட்டு கொள்கைகளை உருவாக்க அடிப்படை காரணமாக அமைந்ததன.[9] 1967 ஆம் ஆண்டு 'நக்சலைட்டுகள்' கம்யூனிச புரட்சியாளர்களின் அனைத்திந்திய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு (ஏஐசிசிசிஆர்) என்ற அமைப்பை உருவாக்கி, பின்னர் சிபிஎம்மிலிருந்து பிரிந்து வந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரமான புரட்சிகள் அரங்கேற்றப்பட்டன. 1969 ஆம் ஆண்டு ஏஐசிசிசிஆர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (சிபிஐ (எம்எல்)) அமைப்பை உருவாக்கியது.

அனைத்து நக்சலைட் அமைப்புகளும் சிபிஐயை (எம்எல்) பிறப்பிடமாகக் கொண்டவையாகும். மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையத்தில் (எம்சிசி) இருந்து தக்சீன் தேஷ் அமைப்பு தோன்றியது. இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியை உருவாக்குவதற்கு எம்சிசி, மக்கள் யுத்தக் குழு என்ற அமைப்புடன் இணைந்து. யூசிசிஆர்ஐ (எம்எல்) அமைப்பை ஆதரிக்கும் ஆந்திர பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்தவர்கள் டி. நாகி ரெட்டியின் கொள்கைகளை பெருமளவில் பின்பற்றினர். ஆனால் அந்த நிலை ஏஐசிசிசிஆர் உருவாவதற்கு முன்பாக மாறிப்போனது.

1970 ஆம் ஆண்டின் போது அந்த இயக்கம் பல்வேறு பிரிவுகளாப் பிரிந்துபோனது. 1980 ஆம் ஆண்டிற்குள் ஏறத்தாழ 30 நக்சலைட் அமைப்புகள் 30,000 நபர்களைக் கொண்டு இயங்கி வந்ததாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.[10] "9,300 இரகசிய போர் வீரர்கள் அனுமதியின்றி உள்நாட்டில் ஏறத்தாழ 6,500 போர்க் கருவிகளை உருவாக்கியதாக" 2004 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சரவை தெரிவித்தது.[11] ஜூதித் விதல்-ஹால் கருத்தின்படி, "ஏறத்தாழ 15,000 கொரில்லாக்கள் ஐந்தில் ஒரு பங்கு இந்தியக் காடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதுடன் நாட்டில் உள்ள 604 மாவட்டங்களில் அவர்கள் 160 மாவட்டங்களில் இயங்கி வருகின்றனர்" இதன் மூலம் அந்த இயக்கத்தின் வலிமையை தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.[12] நாட்டில் கலவரங்களை உருவாக்குவதற்கு சுமார் 20,000 நக்சலைட்டுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று இந்தியாவின் ஆய்வு, பகுப்பாய்வுப் பிரிவு (ரிசெர்ச் அன்ட் அனாலிசிஸ் விங்) 2006 ஆம் ஆண்டு தெரிவித்தது.[4]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரலைசேசன் உள்ளிட்ட சில சட்டரீதியான அமைப்புகள் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஜனசக்தி போன்ற மற்ற அமைப்புகள் கொரில்லா போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளன.

நக்சலைட் இயக்க வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி நக்சலைட்டுகளால் நிகழ்த்தப்பட்டது என்பதுடன், 75க்கும் அதிகமா பாதுகாப்பு வீரர்கள் அதில் இறந்து போயினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 1000 நக்சலைட்டுகள் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர்,[13][14] மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தின் தாண்டவாடா மாவட்டத்தில் உள்ள காடுகளில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 76 சிஆர்பிஎஃப் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்பதுடன், 50 அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.

வங்கத்தில் வன்முறை

தொகு

கல்கத்தாவில் மாணவர்கள் இயக்கப் பிரிவுகளை ஏற்படுத்தியதன் மூலமாக நக்சலைட்டுகள் மிகப்பெரிய ஆதாயத்தைப் பெற்றனர்.[15] சில மாணவர்கள் தங்கள் படிப்பைக் கைவிட்டு நக்சலைட்டுகள் நடத்திய வன்முறை நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர். இதன் காரணமாக மஜூம்தார் சிபிஐ (எம்எல்) இன் தந்திர நடவடிக்கைகளைச் சமாளித்தார், மேலும் தன்னுடைய அமைப்பில் அதிக மாணவர்களைச் சேர்ப்பதற்கு அவர் கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் புரட்சிகளை மேற்கொண்டார். மஜூம்தாரின் 'அழித்தொழிப்பு தத்துவத்தின்படி' நக்சலைட்டுகள் தனிப்பட்ட முறையில் எதிரிகளைப் படுகொலை செய்யலாம், அத்துடன் நிலக்கிழார்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கைகள் புரட்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.[சான்று தேவை]

கல்கத்தா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. நக்சலைட்டுகள் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததுடன், அவர்கள் காவல்துறையினரை தாக்குவதற்காக துப்பாக்கிகளை உருவாக்குவதற்கு அங்கிருந்த இயந்திரக் கருவிகளைப் பயன்படுத்திக்கொண்டனர். கல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரி அவர்களின் தலைமையிடமாக மாறியது[சான்று தேவை]. சிறிது காலத்திற்குள்ளாகவே நக்சலைட்டுகள் தீவிரமான ஆதரவாளர்களைப் பெற்றனர் என்பதுடன் அவர்களுள் சிலர் படித்த பிரமுகர்கள் மற்றும் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற செயின்ட். ஸ்டீபன்ஸ் கல்லூரியைச் சார்ந்தவர்களாவர். மேலும் அப்போது வாழ்ந்த பல இந்தியத் தலைவர்கள் மற்றும் ஆலோசகர்கள் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தனிப்பட்ட தீவிரவாத நடவடிக்கைகள் விரைவிலேயே மோசமான விளைவுகளை ஏற்படுத்தின. இருந்தபோதும் நக்சலைட்டுகளுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளை முதலமைச்சர் சித்தார்தா சங்கர் முடுக்கிவிட்டார். அதிகாரிகள் மற்றும் மேற்கு வங்கக் காவலர்கள் நக்சலைட்டுகள் ஏவிவிடும் தீவிரவாதத்தைத் தடுத்து நிறுத்துவதற்காகப் போராடினர். இழப்புகள் மற்றும் மஜூம்தாரின் அழித்தொழிப்புத் தத்துவத்தை பொதுமக்கள் புறக்கணித்தது உள்ளிட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, மனித உரிமைகளை நிந்தனை செய்ததாக நக்சலைட்டுகள் மேற்கு வங்க காவல்துறையினரால் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து வந்த சில மாதங்களில் காவல்துறையின் செயல்பாடுகளின் காரணமாக நக்சலைட்டுகளின் வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. இம்மாநிலம் உள்நாட்டு்ப் போருக்கு எதிராக மிகவும் சிறப்பாகப் போராடியது, இப்போரில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்பதுடன் எதிரிகள் ஜனநாயகம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை மீறியே சண்டையிட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.[6]

உள்நாட்டு சண்டையினால் வன்முறை நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. மிகப்பெரிய அமைப்புகள் மஜூம்தாரின் போராட்டத் தத்துவம் குறித்து கேள்விகள் எழுப்பத் தொடங்கின. 1971 ஆம் ஆண்டு சிபிஐ (எம்எல்) இரண்டாகப் பிரிந்தது என்பதுடன், சத்யநாராயண் சிங் என்பவர் மஜூம்தாரின் தலைமைக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டார். 1972 ஆம் ஆண்டு மஜூம்தார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் இறந்தார். அவரது இறப்பிற்குப் பிறகு, அந்த வன்முறை இயக்கத்தில் மேலும் பிரிவினைகள் அதிகரிக்கத் தொடங்கின.

உள்ளூர் காவல்துறையினரை தாக்கியது மற்றும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஆளும் பொதுவுடமை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்ற நடவடிக்கைகளில் அந்த இயக்கம் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் நக்சலைட்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த லால்கார் என்ற கிராமம் முழுவதும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் மாவோயிஸ்ட் கொரில்லாக்களின் கட்டுப்பாட்டில் பல்வேறு தாக்குதல்கள் அதிகரித்தபடியே இருந்தது. அம்மாநில அரசு மிகப்பெரிய மத்திய இராணுவப்படை மற்றும் மாநில காவல்துறை வீரர்களைக் கொண்டு 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பாக லால்காரை கைப்பற்றுவதற்கான முயற்சிகளைத் தொடங்கியது. "2009 ஆம் ஆண்டு லால்கரில் நக்சைலைட் இயக்கத்தைச் சார்ந்த அனைவரையும் ஒன்றிணைத்து இடதுசாரிகள் மற்றும் காவல்துறை ஆகியோரின் 'அநீதிக்கு' முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்திருந்தோம்", மேலும் "1970 ஆம் ஆண்டின் மத்தியில் நக்சலைட்டுகள் ஒடுக்கப்பட்டதே மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் மிகப்பெரிய அடித்தளத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்தது", அத்துடன் "2011 ஆம் ஆண்டிற்குள் நாங்கள் ஆயுதப் படையுடன் கல்கத்தாவிற்குள் நுழைவோம்" என்று மாவோயிஸ தலைவர் கிஷன்ஜி ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.[16]

கலாச்சார குறிப்புகள்

தொகு

ஏசியன் டப் பவுண்டேசன் என்ற இங்கிலாந்து இசைக்குழு "நக்சலைட்" என்ற பாடலை இயற்றியது, அப்பாடல் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த புரோக்டவுன் பேலஸ் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. 2005 ஆம் ஆண்டு சுதிர் மிஷ்ரா என்பவரால் இயக்கப்பட்ட ஹசாரான் கிவாய்செய்ன் ஆய்சி என்ற திரைப்படம் நக்சலைட் இயக்கத்தின் பின்விளைவுகளுக்கு எதிரான கதைக் கருவைக் கொண்டிருந்தது. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கபீர் கௌசிக் என்ற இயக்குநர் இயக்கிய சாம்கு என்ற திரைப்படத்தில் பாபி தியோல் மற்றும் பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர் என்பதுடன், மன மாற்றம் செய்யப்பட்ட இளைஞன் தன் மாநிலத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துவதைப் பற்றிய கதைக் கருவை அந்தத் திரைப்படம் கொண்டிருந்தது.

அருந்ததி ராய் என்பவரால் எழுதப்பட்ட தி காட் ஆப் சுமால் திங்ஸ் என்ற புனைகதையில், நக்சலைட்டுகள் கதாப்பாத்திரம் தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றது.

1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஹசார் சவுரசி கி மா (மஹாஸ்வேத தேவி என்பவர் எழுதிய ஹசார் சவரசி மா [17] என்ற புனைகதையின் அடிப்படையிலானது) என்ற திரைப்படத்தில் மாநில அரசால் கொல்லப்படும் நக்சல்பரி வீரரின் கதாப்பாத்திரத்தில் ஜெயா பச்சன் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தலப்பாவு என்ற மலையாளத் திரைப்படம் 1970 ஆம் ஆண்டு காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்த நக்சல் வர்கீஸ் என்பவரை சித்தரிக்கும் திரைக்கதையைக் கொண்டது.

எஸ். நாராயண் என்பவரால் இயக்கப்பட்ட வீரப்ப நாயகா என்ற கன்னடத் திரைப்படம் காந்தியவாதக் கொள்கையைப் பின்பற்றும் விஷ்ணுவர்தன் என்ற நடிகரின் மகன் எவ்வாறு நக்சலைட்டாக மாறுகிறான் என்ற கதைக் கருவைச் சித்தரிக்கும் வகையில் இருக்கிறது. 2007 ஆம் ஆண்டு நாகாத்திஹாலி சந்திரசேகர் என்பவர் இயக்கிய மாத்தாட் மாத்தாடு மல்லிகே என்ற கன்னடத் திரைப்படத்தில் மீண்டும் விஷ்ணுவர்தன் காந்தியவாதக் கொள்கையைப் பின்பற்றுபவராக நடித்திருந்தார் என்பதுடன், நக்சல் என்பது வன்முறைக்கு மட்டுமே வழிவகுக்குமே அன்றி குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் உதவுவதில்லை என்ற உண்மையை நக்சலைட்டான சுதீப் என்பவருக்கு விளக்கமாக எடுத்துரைப்பார்.

விலாஸ் பாலகிருஷ்ணா மனோகர் என்பவர் எழுதிய ஈகா நக்சல்வாத்யா சா ஜன்மா (மராத்தி: நக்சலின் பிறப்பிடம் ) என்ற புனைகதையில், லோக் பிர்தாரி பிரகால்ப் என்ற இயக்கத்தைச் சார்ந்த ஒருவர் மத்யா கோந்த் என்ற இடத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக நக்சலைட் இயக்கத்தில் போய்ச் சேரும்படியான கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[18]

வன்முறை தொடர்பான உயிரிழப்புகள்

தொகு

இந்தியாவில் வன்முறை அதிகரித்துவிட்டது, அத்துடன் மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் பிரிவினையாளர்கள் ஏற்படுத்தும் வன்முறையானது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது தெரிவித்தார்.

இந்திய உள்துறை அமைச்சரவை வன்முறையின் காரணமாக ஆண்டுதோறும் ஏற்பட்ட உயிரிழப்புகளை கணக்கீடு செய்துள்ளது, அவை பின்வருமாறு:

  • 1996 ஆம் ஆண்டு: 156 உயிரிழப்புகள்[19]
  • 1997 ஆம் ஆண்டு: 428 உயிரிழப்புகள்[19]
  • 1998 ஆம் ஆண்டு: 270 உயிரிழப்புகள்[19]
  • 1999 ஆம் ஆண்டு: 363 உயிரிழப்புகள்[19]
  • 2000 ஆம் ஆண்டு: 50 உயிரிழப்புகள்[19]
  • 2001 ஆம் ஆண்டு: 100க்கும் அதிகமான உயிரிழப்புகள்[19]
  • 2002 ஆம் ஆண்டு: 140 உயிரிழப்புகள்[19]
  • 2003 ஆம் ஆண்டு: 451 உயிரிழப்புகள்[19]
  • 2004 ஆம் ஆண்டு: 500க்கும் அதிகமான உயிரிழப்புகள்[19]
  • 2005 ஆம் ஆண்டு: 700க்கும் அதிகமான உயிரிழப்புகள்[19]
  • 2006 ஆம் ஆண்டு: 750 உயிரிழப்புகள்[19]
  • 2007 ஆம் ஆண்டு: 650 உயிரிழப்புகள்[19]
  • 2008 ஆம் ஆண்டு: 794 உயிரிழப்புகள்[19]
  • 2009 ஆம் ஆண்டு: 1,134 உயிரிழப்புகள்[20]

கிளர்ச்சியின் காரணமாக 20 ஆண்டுகளாக நடைபெறும் சண்டையில், 6,500 மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.[21]

மேலும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Ramakrishnan, Venkitesh (2005-09-21). "The Naxalite Challenge". Frontline Magazine (தி இந்து). Archived from the original on 2006-10-17. பார்க்கப்பட்ட நாள் 2007-03-15.
  2. Handoo, Ashook. "Naxal Problem needs a holistic approach". Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 2009-08-08.
  3. 3.0 3.1 "Rising Maoists Insurgency in India". Global Politician. 2007-01-15. பார்க்கப்பட்ட நாள் 2009-03-17.
  4. 4.0 4.1 Philip Bowring Published: TUESDAY, APRIL 18, 2006 (2006-04-18). "Maoists who menace India". International Herald Tribune. Archived from the original on 2006-04-17. பார்க்கப்பட்ட நாள் 2009-03-17.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  5. "South Asia | Senior Maoist 'arrested' in India". BBC News. 2007-12-19. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7151552.stm. பார்த்த நாள்: 2009-03-17. 
  6. 6.0 6.1 6.2 Diwanji, A. K. (2003-10-02). "Primer: Who are the Naxalites?". ரெடிப்.காம். பார்க்கப்பட்ட நாள் 2007-03-15. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  7. Co-ordinated operations to flush out Naxalites soon தி எகனாமிக் டைம்ஸ் , February 6, 2009.
  8. {Sunil Kumar Sen} ({1982}). {Peasant movements in India: mid-nineteenth and twentieth centuries}. {K.P. Bagchi}. {{cite book}}: Check date values in: |year= (help)
  9. "Hindustan Times: History of Naxalism". Archived from the original on 2009-01-20. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.
  10. Singh, Prakash. The Naxalite Movement in India . New Delhi: Rupa & Co., 1999. p. 101.
  11. Quoted in Judith Vidal-Hall, "Naxalites", p. 73–75 in Index on Censorship , Volume 35, Number 4 (2006). Quoted on p. 74.
  12. Judith Vidal-Hall, "Naxalites", p. 73–75 in Index on Censorship , Volume 35, Number 4 (2006). p. 74.
  13. "Indian police killed by Maoists". Al Jazeera. April 6, 2010.
  14. "74 security men killed by Naxals in Chhattisgarh". Ndtv.com. 2010-04-06. பார்க்கப்பட்ட நாள் 2010-04-12.
  15. Judith Vidal-Hall, "Naxalites", p. 73–75 in Index on Censorship , Volume 35, Number 4 (2006). p. 73.
  16. http://news.bbc.co.uk/2/hi/south_asia/8127869.stm
  17. "Mother of 1084" – the number assigned to her son.
  18. Who's who of Indian Writers, 1999 By K. C. Dutt, Sahitya Akademi. Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 2009-03-17.
  19. 19.00 19.01 19.02 19.03 19.04 19.05 19.06 19.07 19.08 19.09 19.10 19.11 19.12 "Armed Conflicts Report – India-Andhra Pradesh". Ploughshares.ca. Archived from the original on 2009-06-03. பார்க்கப்பட்ட நாள் 2009-03-17.
  20. 600 civilians, 317 members of security forces and 217 rebels died in Maoist-related violence.
  21. Bhaumik, Subir. Maoist rebels set precondition for talks. BBC News. February 22, 1987

கூடுதல் வாசிப்பு

தொகு

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Naxalite
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நக்சலைட்டு&oldid=4161820" இலிருந்து மீள்விக்கப்பட்டது