ஜீன்ஸ் (திரைப்படம்)
ஜீன்ஸ் (Jeans) 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். இவரே திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரும் ஆவார். அசோக் அமிர்தராஜ் மற்றும் முரளி மனோகர் இப்படத்தை தயாரித்தவர்கள். காதலை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் மற்றும் நாசர் முக்கிய மற்றும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். ராஜூ சுந்தரம், லட்சுமி, மற்றும் தென்னிந்திய திரைப்படங்களின் பிரபல நடிக நடிகையர் முக்கிய கதாபாத்திரங்களின் உறவுக்காரர்களாக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜீன்ஸ் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | சங்கர் |
தயாரிப்பு | அசோக் அமிர்தராஜ் முரளி மனோகர் |
கதை | சங்கர் சுஜாதா (வசனம்) |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | பிரசாந்த் ஐஸ்வர்யா ராய் நாசர் ராதிகா சரத்குமார் செந்தில் ராஜூ சுந்தரம் லட்சுமி |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | ஏ. ஸ்ரீகார் பிரசாத் |
கலையகம் | அம்ரிதா சோலமோன் கம்யூனிகேசன்ஸ் ஸ்ரீசூர்யா மூவீஸ் |
விநியோகம் | ஆஸ்கர் மூவிஸ் ஈரோஸ் லேப்ஸ் சீ டிவி |
வெளியீடு | ஏப்ரல் 24, 1998 |
ஓட்டம் | 175 நிமிடங்கள் |
நாடு | இந்தியா[1] |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 19 கோடி[2] |
நடிகர்கள்
தொகு- பிரசாந்த் - விசு, ராமு இரட்டை வேடம்
- ஐஸ்வர்யா ராய் - மதுமித
- நாசர் - இரட்டை வேடம்
- ராதிகா சரத்குமார்
- செந்தில்
- ராஜூ சுந்தரம் - மதுமிதயின் சகோதரர்
- லட்சுமி - மதுமிதயின் பாட்டி
கதைச்சுருக்கம்
தொகுதனது பாட்டியின் அறுவை சிகிச்சைக்காக, பாட்டியுடன் அமெரிக்காவுக்கு வரும் மதுமதி (ஐஸ்வர்யா ராய்), அங்கே தனது மாமா வந்து அழைத்துச் செல்லாததால் வழி தெரியாமல் தடுமாறி நிற்கின்றனர். அமெரிக்காவில் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் உணவகம் நடத்திக் கொண்டும் மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் விசு (பிரசாந்த்) ஐஸ்வர்யா ராய்க்கு உதவுகிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.
தயாரிப்பு
தொகுவெளியீடு
தொகுபாடல்கள்
தொகுமிகச் சிறப்பான வெற்றிப் பாடல்களைக் கொண்ட இத்திரைப்படம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.
பாடல் | பாடகர்கள் | நீளம் (நி:வி) |
விவரம் |
---|---|---|---|
எனக்கே எனக்கா | உன்னிகிருஷ்ணன், பல்லவி | 7:11 | அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் படமாக்கப்பட்ட காதல் பாடல். |
கொலம்பஸ் கொலம்பஸ் | ஏ. ஆர். ரகுமான் | 4:55 | பிரசாந்தின் இரட்டை வேட, லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் படமாக்கப்பட்ட அறிமுக காட்சிகள் |
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் | உன்னிகிருஷ்ணன், சுஜாதா | 6:56 | உலகின் ஏழு அதிசயங்களில் படமாக்கப்பட்ட காதல் பாடல். |
கண்ணோடு காண்பதெல்லாம் | நித்யஸ்ரீ | 5:12 | ஐசுவரியா ராய் மற்றும் ராஜு சுந்தரத்தின் குறும்புகள் வெளிப்படும் நகைச்சுவைப் பாடல். |
வாராயா தோழி | சோனு நிகம், ஷாகுல் ஹமீது, ஹரிணி, சங்கீதா | 5:51 | லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் படமாக்கப்பட்ட குடும்ப பாடல். |
அன்பே அன்பே கொல்லாதே | ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் | 5:34 | உள்ளரங்கங்களில் படமாக்கப்பட்ட காதல் பாடல். |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jeans (1998)". IMDB.com. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
- ↑ "Of Jeans and bottom lines". ரெடிப்.காம்.com (V. Srinivasan). பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.