ஜனசக்தி (சிங்களத்தில் ஜனசவிய) திட்டமானது இலங்கையின் அடிமட்டமக்களின் சமூக நிலையை மேம்படுத்தும் நோக்கம் உள்ளடங்கலான சமூக நல நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஓர் வளர்ச்சித் திட்டமாகும்.

1991-ஆம் ஆண்டின் 31-ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 25-ஆவது பிரிவின் கீழ் திறைசேரியினால் ஆரம்பிக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் பிரகாரம் இத்திட்டம் தொடக்கப்பட்டது.


இத்திட்டம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டது.

  • மனித வளத்தை உயர் அளவில் பயன்படுத்துவது
  • சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவது
  • வறியர் வாழ்க்கையை வளப்படுத்துவது.

இத்திட்டத்தின் செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் செயற்படுத்தப்பட்டபோதும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களே இதிற் கணிசமான பங்களிப்பை நல்கின.

இத்திட்டத்தின் மூலம் சமூகத்தின் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 1000 பெறுமதியான உணவுப்பொருட்பங்கீடும் அவர்கள் எதிர்காலத்தில் சுயமாக செயற்படுவதற்கு வசதியாக சேமிப்பை மேம்படுத்தும் நோக்கத்தோடு ஒவ்வொருகுடும்பமும் ரூபா 458 ஐ கூட்டுறவுக் கிராமிய வங்கிகளில் வைப்பாக இடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வாறு சேமிக்கப்பட்ட தொகை எதிர்காலத்தில் அவர்கள் சிறிய தொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனசக்தி&oldid=3309434" இலிருந்து மீள்விக்கப்பட்டது